மொபைலிலும் PCயிலும் 2,00,000க்கும் அதிகமான உலகத்தரம் வாய்ந்த கேம்களின் பட்டியலைப் பார்த்து உங்களுக்கேற்ற கேமைக் கண்டறியுங்கள்
கேம் பர்ச்சேஸ்களுக்குப் பயன்படுத்தக்கூடிய Google Play புள்ளிகளைப்1 பெறுங்கள். மேலும் Play Points உறுப்பினராகப் பிரத்தியேகச் சலுகைகளைப் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான கேம்கள் மற்றும் உங்களின் கேமிங் சாதனைகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தையும் எளிதாக 'நீங்கள்' பிரிவில் பார்க்கலாம்2
மொபைல் மற்றும் PCயில் 2,00,000க்கும் மேற்பட்ட கேம்களுடன், Google Play Gamesஸில் அனைவரும் தங்களுக்கான கேமைப் பெறலாம். ஒவ்வொரு கேம் குறித்த பரிந்துரைகளையும் விரிவான தகவல்களையும் பெறுங்கள். இதன்மூலம் அடுத்து எந்த கேம் உங்களைக் கவரக்கூடும் என்பதை அறிந்துகொள்ளலாம். மொபைல் மற்றும் PCயில் கிடைக்கும் கேம்களைப் பாருங்கள்.
Google Play Points எனும் Google Playயின் ரிவார்டுகள் திட்டம் மூலம் அடுத்த கட்ட ரிவார்டுகளைப் பெறுங்கள். தள்ளுபடிகளுக்கும் கேம் சார்ந்த பர்ச்சேஸ்களுக்கும் பயன்படுத்துவதற்கான புள்ளிகளையும் ரிவார்டுகளையும் இந்தத் திட்டத்தில் நீங்கள் பெறலாம். நீங்கள் அதிகமான Play புள்ளிகளைப் பெற்றால், அதிக அளவிலான அட்டகாசமான ரிவார்டுகள், சலுகைகள், பணத்தால் வாங்க முடியாத அனுபவங்கள் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இப்போதே இணையுங்கள்1.
'நீங்கள்' பிரிவு உங்கள் கேமர் சுயவிவரத்தை மையமாகக் கொண்டிருக்கும். மொபைலில் சுயவிவர ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் 'நீங்கள்' பிரிவிலிருந்து கேமர் சுயவிவரத்திற்கு நீங்கள் எளிதாக மாறலாம். மொபைலிலும் PCயிலும் ஒரே சுயவிவரத்தை வைத்திருப்பதன் மூலம், உங்கள் கேம்கள் அனைத்திலும் உங்கள் புள்ளிவிவரங்கள், ஸ்ட்ரீக்குகள், செயல்நிலைகள், சாதனைகள் ஆகியவற்றை எளிதாகக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு சாதனையையும் வெற்றியையும் இங்கே நீங்கள் கொண்டாடலாம்.
Gemini Live உடன் கூடிய Play Games சைடு கேரக்டர் என்பது ஒரு புதிய கேமிங் அம்சமாகும், இது கேமை விட்டு வெளியேறாமலேயே உங்கள் புள்ளிவிவரங்கள், சாதனைகள், உதவிக்குறிப்புகள் ஆகியவற்றை எளிதாக அணுக உதவுகிறது. நீங்கள் விளையாடும்போதே Gemini Liveவில் இருந்து நிகழ்நேர உரையாடல் வழிகாட்டலையும் பெறலாம். Google Playயில் இருந்து பதிவிறக்கிய கேம்களை விளையாடும்போது மட்டுமே சைடு கேரக்டர் கிடைக்கும், இது விரைவில் மொபைலுக்கும் வரவுள்ளது.
Google வழங்கும் பாதுகாப்புடன் மொபைலிலும் PCயிலும் நம்பிக்கையோடு விளையாடுங்கள். உங்கள் தரவையும் சாதனங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உதவ, நாங்கள் வழங்குகின்ற ஒவ்வொரு கேமிலும் 10,000க்கும் அதிகமான பாதுகாப்புச் சரிபார்ப்புகளை Google Play இயக்குகிறது.