Google Play சேவை விதிமுறைகள்

மார்ச் 15, 2023 (காப்பகப்படுத்திய பதிப்பைக் காட்டு)

1. அறிமுகம்

பொருந்தும் விதிமுறைகள். Google Playஐப் பயன்படுத்துவதற்கு நன்றி. Google Play என்பது 1600 Amphitheatre Parkway, Mountain View California 94043, USA இல் அமைந்துள்ள Google LLC ("Google", "நாங்கள்" அல்லது "எங்கள்") வழங்கும் ஒரு சேவையாகும். Google Play மற்றும்அதன் மூலம் வழங்கப்படும் பயன்பாடுகள் (Android இன்ஸ்ட்ண்ட் பயன்பாடுகள் உட்பட), சிஸ்டம் சேவைகள், கேம்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் அல்லது பிற டிஜிட்டல் படைப்பு அல்லது சேவைகள் (இவை "படைப்பு" எனக் குறிப்பிடப்படும்) போன்றவற்றையும் பயன்படுத்துவது, இந்த Google Play சேவை விதிமுறைகள் (“Play ToS”) மற்றும் Google சேவை விதிமுறைகள் ("Google ToS") ( ஒன்றாக "விதிமுறைகள்" எனக் குறிப்பிடப்படும்) ஆகியவற்றுக்கு உட்பட்டது. Google Play என்பது Google ToS இல் விவரிக்கப்பட்டவாறு ஒரு “சேவை’. Play ToSக்கும் Google ToSக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், Play ToS பொருந்தும்.

2. Google Play இன் உங்கள் உபயோகம்

படைப்பிற்கான அணுகல் மற்றும் அதன் உபயோகம். Google Playஐ மொபைல், கம்ப்யூட்டர், டிவி, கடிகாரம் அல்லது பிற ஆதரிக்கும் சாதனத்தில் (ஒவ்வொன்றும், "சாதனம்"), படைப்பை உலாவுவது, கண்டுபிடிப்பது, பார்ப்பது, ஸ்ட்ரீம் செய்வது அல்லது பதிவிறக்குவது போன்ற செயல்களுக்கு நீங்கள் உபயோகிக்கலாம். Google Playஐ உபயோகிப்பதற்கு, பொருத்தமான படைப்பு, செயல்படுகின்ற இணைய அணுகல், இணக்கமான மென்பொருள் ஆகியவற்றிற்கான சிஸ்டம் மற்றும் இணக்கத்தன்மைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் சாதனம் இருக்க வேண்டும். நாடுகளுக்கு ஏற்ப படைப்பு கிடைக்கும் தன்மையும் அம்சங்களும் வேறுபடும், உங்கள் நாட்டில் எல்லா படைப்பு அல்லது அம்சங்களும் கிடைக்காமல் போகலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்வதற்கு ஏற்ற சில படைப்புகள் இருக்கக்கூடும். படைப்பை Google அல்லது Google உடன் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் அளிக்கலாம். Google அல்லாத வேறொரு மூலத்தில் உருவாக்கப்பட்டு, Google Play வழியாக வழங்கப்படும் படைப்பு எதற்கும் Google பொறுப்பேற்கவில்லை மற்றும் அதை ஆதரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.

வயதுக் கட்டுப்பாடுகள். Google Playஐ உபயோகிப்பதற்கு, உங்களிடம் பின்வரும் வயதுக் கட்டுப்பாடுகளுக்கு உட்படும் சரியான Google கணக்கு ("Google கணக்கு") இருக்க வேண்டும். உங்கள் நாட்டில் நீங்கள் சிறுவராகக் கருதப்பட்டால், நீங்கள் Google Playஐ உபயோகிக்கவும் விதிமுறைகளை ஏற்கவும் உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வப் பாதுகாவலரின் அனுமதி தேவை. Google Play இலுள்ள குறிப்பிட்ட படைப்பு அல்லது அம்சங்களை உபயோகிப்பதற்குப் பொருந்தக் கூடிய ஏதேனும் கூடுதல் வயதுக் கட்டுப்பாடுகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். குடும்ப நிர்வாகிகளும் குடும்ப உறுப்பினர்களும் இந்தக் கூடுதல் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

மூன்றாம் தரப்புக் கட்டணங்கள். நீங்கள் படைப்பையும் Google Playஐயும் உபயோகிப்பது மற்றும் பார்ப்பதற்காக மூன்றாம் தரப்பினர் (உங்கள் இணைய சேவை வழங்குநர் அல்லது மொபைல் நிறுவனம் போன்றவை) விதிக்கும் அணுகல் அல்லது தரவுக் கட்டணங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்.

மேம்பாடுகள். Google Play மற்றும் தொடர்புடைய உதவி லைப்ரரிகள் அல்லது படைப்பு போன்றவற்றை, மேம்பாடு செய்ய வேண்டியிருக்கலாம். இந்த மேம்பாடுகள் மூலம் பிழைத் திருத்தங்கள், மேம்பட்ட அம்சங்கள், விடுபட்டுள்ள செருகுநிரல்கள் மற்றும் புதிய பதிப்புகள் (ஒன்றாக, "மேம்பாடுகள்") போன்றவற்றைப் பெறுவீர்கள். அத்தகைய மேம்பாடுகள், Google Playஐ உபயோகிப்பதற்கு அல்லது படைப்பை அணுகுவதற்கு, பதிவிறக்குவதற்கு அல்லது உபயோகிப்பதற்குத் தேவைப்படலாம். இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு, Google Playஐ உபயோகிப்பதன் மூலம், தானாகவே இந்தப் மேம்பாடுகளைப் பெற ஒப்புக்கொள்கிறீர்கள். குறிப்பிட்ட சில படைப்புகளுக்கான மேம்பாடுகளை Google Play இன் அமைப்புகளில் நிர்வகிக்கலாம். இருப்பினும், படைப்பு தொடர்புடைய மிக முக்கிய பாதுகாப்புச் சிக்கலை அல்லது மிக முக்கிய இயங்குதன்மைச் சிக்கலை மேம்பாடு செயல்கள்சரிசெய்யும் என அல்லது துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டால், Google Play அல்லது உங்கள் சாதனத்தில் உங்கள் மேம்பாடுஅமைப்புகள் எவ்வாறு இருந்தாலும், புதுப்பிப்பு செய்யப்படலாம். Google Play இல் இருந்து முதலில் பதிவிறக்கப்பட்ட படைப்பைப் புதுப்பிக்க மற்றொரு ஆப்ஸ்டோர் முயன்றால், நீங்கள் எச்சரிக்கையைப் பெறலாம் அல்லது அத்தகைய மேம்பாடுகள் முழுவதுமாகத் தடுக்கப்படலாம்.

உங்களைப் பற்றிய தகவல்கள். நீங்கள் Google Playஐ உபயோகிக்கும்போது, எப்படி உங்கள் தனிப்பட்ட தகவலைக் கையாள்கிறோம், உங்கள் தனியுரிமையை எப்படிப் பாதுகாக்கிறோம் என்பதை Google இன் தனியுரிமைக் கொள்கை விளக்கும். உங்கள் பரிவர்த்தனைகளைச் செயலியாக்குவதில் அல்லது உங்களுக்கு படைப்புகளைவழங்குவது போன்ற நோக்கங்களுக்காக, வழங்குநர்களுக்கு உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட தகவல்களை Google வழங்க வேண்டியிருக்கலாம். வழங்குநர்கள் அவர்களது தனியுரிமைக் கொள்கைகளுக்கு ஏற்ப இந்தத் தகவல்களை உபயோகிக்க ஒப்புக்கொள்கிறார்கள்.

நீங்கள் Google Play இல் குடும்பக் குழுவில் பங்குவகித்தால், அந்தக் குடும்பக் குழுவிலுள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களால் உங்களைப் பற்றிய குறிப்பிட்ட சில தகவல்களைப் பார்க்க முடியும். நீங்கள் Google Play இல் ஒரு குடும்ப குழுவின் குடும்ப நிர்வாகியாக இருந்தால், குடும்பக் குழுவில் இணையுமாறு நீங்கள் அழைக்கும் குடும்ப உறுப்பினர்கள் உங்கள் பெயர், படம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பார்ப்பார்கள். நீங்கள் குடும்பக் குழுவொன்றில் குடும்ப உறுப்பினராகச் சேர்ந்தால், பிற குடும்ப உறுப்பினர்களால் உங்கள் பெயர், படம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைப் பார்க்க முடியும். உங்கள் குடும்ப நிர்வாகி, உங்கள் வயதையும் பார்க்கலாம், அதோடு அவர் நீங்கள் வாங்கிய படைப்புகளின் விவரங்கள் உட்பட, அங்கீகரிக்கப்பட்ட குடும்பக் கட்டண முறையைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கும் அனைத்து படைப்புக்களைப் பற்றிய பதிவுகளையும் பார்க்கலாம். குடும்பத்துடன் பகிர்வதற்கு படைப்பு இருந்து, அதை உங்கள் குடும்பக் குழுவுடன் நீங்கள் பகிர்ந்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அந்த படைப்பை அணுக முடியும், நீங்கள் அதை எங்கு வாங்கியுள்ளீர்கள் என்பதையும் பார்க்க முடியும்.

கணக்குகளுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகல். உங்கள் கணக்கு விவரங்களை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், அவற்றை வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. நீங்கள் Google Play மூலமாக எந்தவொரு Google Play பயனர் அல்லது பிற Google சேவைகளின் பயனரின் கணக்குப் பெயர்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவு எதையும் சேகரிக்கவோ பெறவோ கூடாது.

முடக்கப்பட்ட கணக்குகள். விதிமுறைகளுக்கு ஏற்ப (எடுத்துக்காட்டாக, விதிமுறைகளை மீறினால்) உங்கள் கணக்கு அணுகலை Google முடக்கினால், நீங்கள் Google Playஐயும் உங்கள் கணக்கு விவரங்கள் அல்லது ஏதேனும் கோப்புகள் அல்லது உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்ட பிற படைப்புகளைஅணுகுவதிலிருந்து தடுக்கப்படலாம். மேலும் தகவலுக்கு, உதவி மையத்தைப் பார்க்கவும். நீங்கள் Google Play இலுள்ள குடும்பமொன்றின் நிர்வாகியாக இருந்து, உங்கள் கணக்கிற்கான அணுகலை Google முடக்கினால், குடும்பக் கட்டண முறை, குடும்பச் சந்தாக்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் பகிரப்படும் படைப்பு போன்ற குடும்பக் குழு தேவைப்படும் குடும்ப அம்சங்களுக்கான அணுகலை உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இழக்கலாம். நீங்கள் Google Play இலுள்ள குடும்பமொன்றின் உறுப்பினராக இருந்து, உங்கள் கணக்கிற்கான அணுகலை Google முடக்கினால், குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் பகிர்ந்துள்ள படைப்புகளுக்கானஅணுகலை அவர்கள் இழப்பார்கள்.

தீம்பொருள் பாதுகாப்பு. தீங்கிழைக்கும் மூன்றாம் தரப்பு மென்பொருள், URLகள் மற்றும் பிற பாதுகாப்புச் சிக்கல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க, Google உங்கள் சாதனத்தின் நெட்வொர்க் இணைப்புகள், தீங்கிழைக்கச் சாத்தியமுள்ள URLகள், ஆப்ரேட்டிங் சிஸ்டம், Google Play வழியாக அல்லது மற்ற மூலங்களில் இருந்து உங்கள் சாதனத்தில் நிறுவப்பட்ட பயன்பாடுகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களைப் பெறலாம். பயன்பாடு அல்லது URL பாதுகாப்பற்றதாக இருக்கலாம் என Google நினைத்தால், அதைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கலாம் அல்லது அது சாதனங்கள், தரவு அல்லது பயனர்களுக்குத் தீங்கானது என்று அறியப்பட்டிருந்தால், உங்கள் சாதனத்தில் அதன் நிறுவலை Google அகற்றலாம் அல்லது தடுக்கலாம். உங்கள் சாதனத்தின் அமைப்புகளில் இந்தப் பாதுகாப்புகளில் சிலவற்றை நீங்கள் முடக்குவதற்குத் தேர்வுசெய்யலாம் என்றாலும் கூட, Google Play வழியாக நிறுவப்பட்ட பயன்பாடுகள் பற்றிய தகவல்களை Google தொடர்ந்து பெறக் கூடும், மேலும் பிற மூலங்களிலிருந்து உங்கள் சாதனத்தில் நிறுவப்படும் பயன்பாடுகளில் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளனவா என்று, Googleக்குத் தகவலை அனுப்பாமல், தொடர்ந்து பகுப்பாய்வு செய்யப்படலாம்.

Android இன்ஸ்டண்ட் ஆப்ஸ். உங்கள் சாதனத்தில் ஒரு இணைப்பைக் கிளிக் செய்யும்போது, பொருத்தமான இன்ஸ்டண்ட் ஆப் உள்ளதா என்று Google Play சோதிக்கக் கூடும், அவ்வாறு இருந்தால், அந்த இணைப்பை இன்ஸ்டண்ட் ஆப்பிற்குள் திறக்கக் கூடும். நீங்கள் அணுகும் இன்ஸ்டண்ட் ஆப்பின் பகுதிகளை இயக்கத் தேவையான குறியீடு எதுவும் உங்கள் சாதனத்தில் பதிவிறக்கப்பட்டு, அதில் தற்காலிகமாகச் சேமிக்கப்படும். இன்ஸ்டண்ட் ஆப்பின் பயன்பாட்டு விவரங்களை Google Play ஸ்டோரில் காணலாம். Android இன்ஸ்டண்ட் ஆப்ஸ் தரவும் அமைப்புகளும் உங்கள் Google கணக்கைக் கொண்டு உள்நுழைந்துள்ள சாதனத்துடன் ஒத்திசைக்கப்படும். உங்கள் சாதனத்தின் அமைப்புகளில் Android இன்ஸ்டண்ட் ஆப்ஸை முடக்கலாம்.

இந்த விதிமுறைகளுக்கான மாற்றங்கள். Play ToS மாறினால், குறைந்தது 30 நாட்களுக்கு முன்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும், அந்த அறிவிப்புக் காலத்திற்குப் பிறகே புதிய Play ToS நடைமுறைக்கு வரும். விதிமுறை மாற்றம் குறித்த அறிவிப்புக் காலத்திற்குப் பின்னரும் நீங்கள் Google Playஐத் தொடர்ந்து உபயோகித்தால், அது நீங்கள் புதிய Play ToS-ஐ ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும். புதிய Play ToS, நீங்கள் உபயோகிக்கும் அனைத்து படைப்புகளுக்கும்(கடந்த காலத்தில் நீங்கள் நிறுவிய அல்லது வாங்கிய படைப்பு உட்பட) தொடர்ந்து மேற்கொள்ளும் அனைத்து நிறுவல்கள் அல்லது வாங்குதல்களுக்கும் பொருந்தும். நீங்கள் அந்த மாற்றங்களை ஏற்காவிட்டால், நீங்கள் முன்பு வாங்கிய அல்லது நிறுவிய படைப்பினைபதிவிறக்கிவிட்டு, Google Playஐ உபயோகிப்பதை நிறுத்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் ஏற்றுக்கொண்ட Play ToSன் கடைசிப் பதிப்பிற்கு ஏற்ப, உங்கள் சாதனங்களில் அந்த படைப்பின்நகலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

3. கொள்முதல் மற்றும் கட்டணங்கள்

இலவச படைப்பு. Google Play இலுள்ள படைப்பினைஇலவசமாகப் பதிவிறக்க, பார்க்க அல்லது உபயோகிக்க Google உங்களை அனுமதிக்கலாம். குறிப்பிட்ட சில இலவச படைப்புகளைநீங்கள் அணுகவும் உபயோகிக்கவும் கூடுதல் கட்டுப்பாடுகள் பொருந்தலாம்.

படைப்புகளைவாங்குதல். Google Play இலுள்ள படைப்பினைஅல்லது அதைப் பயன்படுத்தி படைப்பினைவாங்கும்போது, (பொருந்தக்கூடிய) இந்த விதிமுறைகளின் அடிப்படையில் பின்வரும் இரண்டில் ஒருவகையாக இருக்கக்கூடிய விற்பனையாளருடன் ஒரு தனியான விற்பனை ஒப்பந்தத்தை மேற்கொள்வீர்கள்:

(அ) Google Ireland Limited; அல்லது

(ஆ) உள்ளடக்க வழங்குநர் ("வழங்குநர்"), (வழங்குநரின் ஏஜென்ட்டாக Google Ireland Limited செயல்படும் இடங்கள் உட்பட).

தனியான விற்பனை ஒப்பந்தம் இந்த விதிமுறைகளுடன் கூடுதலானது.

வழங்குநருக்கான ஏஜென்ட்டாக Google செயற்படுகின்ற விற்பனைகளுக்கு, Google ToS இல் குறிப்பிடப்பட்டுள்ள Google ToS “மூன்றாம் தரப்புக்கு ஆதாயமான உரிமைகள் எதையும் உருவாக்காது” என்ற கூற்று, நீங்கள் Google Playஐ உபயோகப்படுத்துவதற்குப் பொருந்தாது.

குறிப்பிட்ட படைப்பினைநீங்கள் வாங்கிவிட்டதை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை Google இடமிருந்து பெற்றதும், அந்த உள்ளடக்கத்தை வாங்குவதற்கும் உபயோகிப்பதற்குமான உங்கள் ஒப்பந்தம் நிறைவுபெறும், அந்த வாங்குதல் நிறைவடையும்போது இந்த ஒப்பந்தத்தின் செயல்திறனானது தொடங்கும்.

முன்கூட்டிய ஆர்டர்கள். படைப்பு ஒன்றை வாங்குவதற்காக முன்கூட்டிய ஆர்டரை(முன்பதிவை)ச் செய்யும்போது, அந்த படைப்பு உங்களுக்குக் கிடைத்ததும் அதை வாங்குவதற்கும் உபயோகிப்பதற்குமான உங்கள் ஒப்பந்தம் நிறைவுபெறும், அந்தச் சமயத்தில் வாங்குதலுக்காக உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும். முன்கூட்டிய ஆர்டர்/முன்பதிவு செய்யபட படைப்பு உங்களுக்குக் கிடைக்கும் நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம். படைப்பு கிடைக்கும் முன்பு அது Google Play வழியான விற்பனையிலிருந்து விலக்கப்பட்டால், உங்கள் முன்கூட்டிய ஆர்டரை நாங்கள் ரத்து செய்ய வேண்டியிருக்கும், மேலும் உங்கள் ஆர்டரை நிறைவு செய்யும் முன், விலையில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில், அந்த ஆர்டரை ரத்து செய்வதற்கான உரிமை எங்களுக்குள்ளது.

குடும்பக் கட்டண முறை. நீங்கள் Google Play இல் ஒரு குடும்பக் குழுவின் குடும்ப நிர்வாகியாக இருந்தால், Google Play இலும் பயன்பாடுகளிலும் படைப்பினைவாங்க உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கு சரியான குடும்பக் கட்டண முறையை அமைக்க வேண்டும். குடும்பக் கட்டண முறையைப் பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் வாங்குகின்ற அனைத்து படைப்புகளுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். குடும்பக் குழு நீக்கப்பட்டால் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் குடும்பக் குழுவை விட்டு வெளியேறினால், குடும்பக் கட்டண முறையைப் பயன்படுத்தி குடும்ப உறுப்பினர்கள் வாங்கியிருக்கும் நிலுவையிலுள்ள வாங்குதல்களுக்கு உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படலாம்.

Google Payments. Google Play வழியாக படைப்பினைவாங்குவதற்கு, உங்களிடம் Google கட்டணக் கணக்கு இருக்க வேண்டும், அத்துடன் நீங்கள் Google Payments இன் சேவை விதிமுறைகளை ஏற்க வேண்டும். Google கட்டணக் கணக்கைப் பயன்படுத்தி படைப்பினை வாங்கும்போதெல்லாம், Google Payments இன் தனியுரிமை அறிக்கை பொருந்தும். உங்கள் Google கட்டணக் கணக்கில் Google Play வழியாக வாங்குபவற்றுக்குச் செலுத்தப்படும் எல்லாக் கட்டணங்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.

பிற கட்டணச் செயலாக்க முறைகள். Google Play வழியாக படைப்பினைவாங்குவதை எளிதாக்குவதற்கு, Google Payments உடன் கூடுதலாக பல்வேறு கட்டணச் செயலாக்க முறைகளை Google உங்களுக்குக் கிடைக்கச் செய்யக்கூடும். அத்தகைய கட்டணச் செயலாக்க முறையைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் Google அல்லது மூன்றாம் தரப்புடன் தொடர்புடைய பொருத்தமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அல்லது பிற சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்கு நீங்கள் இணங்க வேண்டும். Google அதன் தனிப்பட்ட விருப்புரிமைக்கேற்ப கட்டணச் செயலாக்க முறைகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். Google Play இல் வாங்குபவற்றுக்குச் செலுத்தப்படும் எல்லாக் கட்டணங்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.

மொபைல் சேவையாளர் பில்லிங்கிற்கான தகுதிநிலை. உங்கள் சாதனங்களின் மூலம் நீங்கள் வாங்கும் படைப்புகளுக்கான கட்டணங்களை உங்கள் நெட்வொர்க் வழங்குநரின் கணக்கில் பில்லிங் செய்வதற்கான உங்களின் தகுதிநிலையைத் தீர்மானிக்க, சாதனத்தில் Google Play கணக்கை நீங்கள் உருவாக்கும்போது, சந்தாதாரர் ID மற்றும் SIM கார்டு வரிசை எண் போன்ற உங்கள் சாதனத்தின் அடையாளங்காட்டிகளை உங்கள் நெட்வொர்க் வழங்குநருக்கு அனுப்புவோம். இதை அனுமதிக்க, நீங்கள் நெட்வொர்க் வழங்குநரின் சேவை விதிமுறைகளை ஏற்க வேண்டும். நெட்வொர்க் வழங்குநர் உங்கள் பில்லிங் முகவரித் தகவலை எங்களுக்கு அனுப்பலாம். Google இன் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் Google Payments தனியுரிமை அறிக்கை ஆகியவற்றின்படி இந்தத் தகவலை வைத்திருந்து, உபயோகிப்போம்.

விலை நிர்ணயம். Google Play இல் காட்டப்படும் அனைத்து படைப்புகளுக்கானவிலையும் கிடைக்கும்தன்மையும் வாங்கும் முன் எந்த நேரத்திலும் மாற்றத்திற்கு உள்ளாகலாம்.

வரிகள்."வரிகள்" என்பது, பரிவர்தனைகளுக்கு தொடர்புடைய அபராதங்கள் அல்லது வட்டி உட்பட, உள்ளடக்க விற்பனையுடன் தொடர்புடைய சுங்கக் கட்டணங்கள், தீர்வைகள் அல்லது வரிகள் (வருமான வரி தவிர) அனைத்தையும் குறிக்கும். வரிகள் எதற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள் மற்றும் வரிகளுக்கான தொகை எதையும் குறைக்காமல் படைப்புகளுக்கானபணத்தைச் செலுத்த வேண்டும். வரிகளை படைப்பு விற்பனையாளர் அல்லது Google சேகரிக்கவோ அல்லது செலுத்தவோ வேண்டியிருந்தால், அந்த வரிகள் உங்களிடமிருந்து வசூலிக்கப்படும். Google Playஐப் பயன்படுத்துவது அல்லது Google Play இல் அல்லது அதன் மூலம் படைப்புக்களைவாங்குவது தொடர்பான ஏதேனும் வரிகளைப் பற்றி அறிக்கையளித்தல் மற்றும் அவற்றைச் செலுத்துதல் உள்ளிட்ட ஏதேனும் மற்றும் அனைத்து பொருந்தும் வரிச் சட்டங்களுக்கும் நீங்கள் இணங்க வேண்டும். அத்தகைய பொருந்தும் வரிகளைப் பற்றி அறிக்கையளிப்பதும் அவற்றைச் செலுத்துவதும் உங்கள் பொறுப்பு.

அனைத்து விற்பனைகளும் இறுதியானவை. வாங்குதலைத் திரும்பப்பெறுவது, ரத்துசெய்வது அல்லது பணம் திரும்பப்பெறுதலுக்காக திருப்பியளிப்பது தொடர்பான உங்கள் உரிமைகளைப் பற்றிய மேலும் தகவலுக்கு, Google Play இன் பணம் திரும்பப்பெறுதல் கொள்கையைப் பார்க்கவும். Google ToS, Google Play இன் பணம் திரும்பப்பெறுதல் கொள்கை அல்லது வழங்குநரின் பணம் திரும்பப்பெறுதல் கொள்கைகளில் வெளிப்படையாகக் குறிப்பிட்டவை தவிர, அனைத்து விற்பனைகளும் இறுதியானவை, விற்பனைக்குப் பின் திருப்பியளிப்புகள், மாற்றுதல்கள் அல்லது பணம் திரும்பப்பெறுதல்கள் அனுமதிக்கப்படாது. எந்தவொரு பரிவர்த்தனைக்கும் மாற்றுதல், திருப்பியளித்தல் அல்லது பணம் திரும்பப்பெறுதலுக்கு அனுமதி வழங்கப்பட்டால், அந்தப் பரிவர்த்தனையைத் திரும்பப்பெறலாம் , மேலும் அந்தப் பரிவர்த்தனை மூலம் பெற்ற படைப்பினை அதன் பின்னர் நீங்கள் அணுக முடியாது.

சந்தாக்கள். ஒவ்வொரு பில்லிங் காலத்திலும் (வாராந்திரம், மாதாந்திரம், வருடாந்திரம் அல்லது வேறொரு காலம்) சந்தாக்கள் தானாகவே வசூலிக்கப்படும், மேலும் ஒவ்வொரு பில்லிங் காலமும் தொடங்குவதற்கு 24 மணிநேரம் முன்னதாக கட்டணம் வசூலிக்கப்படலாம்.

(அ) சோதனைக் காலங்கள். நீங்கள் ஒரு விலையில் படைப்பினைப் பெறச் சந்தா செலுத்தியிருந்தால், குறிப்பிட்ட சோதனைக் காலத்திற்கு செலவேதும் இல்லாமல் அந்தச் சந்தாவின் பயன்களுக்கான அணுகலைப் பெறலாம், அந்தக் காலத்திற்குப் பிறகு உங்கள் சந்தாவை ரத்துசெய்யும் வரை, உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தவிர்க்க, சோதனைக் காலம் முடிவதற்கு முன்பாக ரத்துசெய்ய வேண்டும். உங்கள் சோதனையை ரத்துசெய்ததும், குறிப்பிடப்பட்டால் தவிர, தொடர்புள்ள பயன்பாட்டிற்கும் , அதிலுள்ள ஏதேனும் சந்தாச் சலுகைகளுக்குமான அணுகலை உடனடியாக இழப்பீர்கள். அத்தகைய சோதனைக் காலங்களுக்கான அணுகலானது, குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒவ்வொரு பயனருக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சோதனைகள் என்ற கட்டுப்பாடோ அல்லது பிற கட்டுப்பாடுகளோ கொண்டிருக்கலாம்.

(ஆ) ரத்துசெய்தல்கள். உதவி மையத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பொருந்தும் பில்லிங் காலம் முடிவதற்கு முன் எந்த நேரத்திலும் சந்தாவை ரத்துசெய்யலாம், ரத்துசெய்தல் அடுத்த பில்லிங் காலத்தில் செயலுக்கு வரும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு மாதாந்திரச் சந்தாவை வாங்கினால், அந்தச் சந்தா செயலில் இருக்கும் எந்த மாதத்திலும் எந்த நேரத்திலும் அதை ரத்துசெய்யலாம், உங்கள் நடப்பு பில்லிங் காலத்தின் முடிவில் சந்தா ரத்துசெய்யப்படும். Google Play இன் பணம் திரும்பப்பெறுதல் கொள்கையில் குறிப்பிட்டிருந்தால் தவிர (எடுத்துக்காட்டாக, குறைபாடான படைப்பு) தற்போதைய பில்லிங் காலத்திற்கான பணத்தைத் திரும்பப் பெற மாட்டீர்கள்.

(இ) அச்சு சந்தாதாரர்களுக்கான தள்ளுபடிகள். ஏற்கனவே நீங்கள் ஒரு அச்சு சந்தாதாரராக இருந்தால், பருவ வெளியீடுகளை அளிக்கும் சில வழங்குநர்கள், Google Play இல் பருவ படைப்புகளின் சந்தாவை குறைந்த கட்டணத்தில் வாங்க உங்களை அனுமதிக்கலாம். அந்தப் பருவ படைப்புகளின்அச்சு சந்தாவை ரத்துசெய்தால் அல்லது உங்கள் அச்சு சந்தா காலாவதியாகி, நீங்கள் அதைப் புதுப்பிக்காவிட்டால், Google Play இல் உள்ள அந்த படைப்புகளின்சந்தா விலை குறைப்பு தானாகவே ரத்து செய்யப்படும்.

(ஈ) விலை அதிகரிப்புகள். நீங்கள் ஒரு சந்தாவை வாங்கும்போது, சந்தா செலுத்தியிருந்தால் ஒப்பந்தத்தைச் செய்யும் நேரத்தில் பொருந்தும் விலையே ஆரம்பத்தில் உங்களுக்கு விதிக்கப்படும். சந்தாவின் விலை பின்னர் அதிகரித்தால், அதைப் பற்றி Google உங்களுக்குத் தெரிவிக்கும். அப்படி விலை அதிகரிக்கும்போது, கட்டணம் வசூலிப்பதற்கு குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பே உங்களுக்குத் தெரிவிக்கப்படும்பட்சத்தில், உங்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்த முறை உங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் போதே அந்த விலை அதிகரிப்பு செயலுக்கு வரும். உங்களுக்கு 30 நாட்களை விட குறைவான காலத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தால், நிலுவையிலுள்ள அடுத்த கட்டணத்திற்குப் பிறகு வரும் கட்டணம் வரை விலை அதிகரிப்பு செயலுக்கு வராது. அதிகரிக்கப்பட்ட சந்தா விலையைச் செலுத்த விரும்பாவிட்டால், இந்த விதிமுறைகளின் ரத்துசெய்தல்கள் பிரிவில் விவரித்துள்ளபடி நீங்கள் சந்தாவை ரத்துசெய்யலாம், தற்போதைய பில்லிங் காலம் முடியும் முன்னர் எங்களுக்குத் தெரிவித்துவிட்டால், உங்களிடமிருந்து சந்தாவிற்கான அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படாது. சந்தாவின் விலையை வழங்குநர் அதிகரித்து, அதற்கு உங்கள் ஒப்புதல் தேவைப்பட்டால், நீங்கள் புதிய விலையை ஒப்புக்கொண்டால் தவிர, உங்கள் சந்தாவை Google ரத்துசெய்யலாம். உங்கள் சந்தா ரத்துசெய்யப்பட்டு, பின்னர் நீங்கள் மீண்டும் சந்தாசேர முடிவு செய்தால், அப்போதைய சந்தா கட்டணம் வசூலிக்கப்படும்.

4. உரிமைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

படைப்புக்களைஉபயோகிப்பதற்கான உரிமம். படைப்புகளுக்கானபரிவர்த்தனை முடிந்த பின் அல்லது பொருந்தும் கட்டணங்களைச் செலுத்திய பின், இந்த விதிமுறைகளிலும் தொடர்பான கொள்கைகளிலும் வெளிப்படையாக அனுமதித்தவாறு மட்டும், அல்லது உங்கள் தனிப்பட்ட, வர்த்தக நோக்கற்ற உபயோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்டவாறு மட்டும், பொருந்தும் படைப்பின்நகல்களை உங்கள் சாதனங்களில் சேமிக்க, அணுக, பார்க்க, உபயோகிக்க மற்றும் காட்ட, உங்களுக்கு பிரத்தியேகமல்லாத உரிமை கிடைக்கும். விதிமுறைகளில் உங்களுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத Google Play மற்றும் படைப்பிலுள்ள அனைத்து உரிமைகள், தலைப்பு, சிறப்புரிமை ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளன. பயன்பாடுகள் மற்றும் கேம்களை நீங்கள் உபயோகிப்பதை, உங்களுக்கும் வழங்குநருக்கும் இடையிலான இறுதிப் பயனர் உரிம ஒப்பந்தத்தின் கூடுதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நிர்வகிக்கலாம்.

உரிம விதிமுறைகளை மீறுதல். நீங்கள் விதிமுறைகள் எதையும் மீறினால், இந்த உரிமத்தின் கீழுள்ள உங்கள் உரிமைகள் உடனடியாக நிறுத்தப்படும், மேலும் Google உங்களுக்குப் பணத்தைத் திருப்பியளிக்காமல் Google Play, படைப்பு அல்லது உங்கள் Google கணக்கு போன்றவற்றுக்கான உங்கள் அணுகலை நிறுத்தலாம்.

கட்டுப்பாடுகள்: நீங்கள்:

மூன்றாம் தரப்பு நிபந்தனைகள். இந்த விதிமுறைகளில் ஏதேனும் முரண்பட்டிருந்தாலும், இந்த விதிமுறைகளின்கீழ், Googleக்கு படைப்புக்களைஉரிமத்திற்கு வழங்கும் மூன்றாம் தரப்பினர்கள், இந்த விதிமுறைகளில் உள்ள நிபந்தனைகளைப் ("மூன்றாம் தரப்பு நிபந்தனைகள்")பொறுத்தவரை மட்டும், மற்றும் அத்தகைய படைப்புகளுக்கானஅவர்களது உரிமைகளைப் பயன்படுத்த வழியேற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்திற்காக மட்டும், மூன்றாம் தரப்பு பலனாளிகளாகக் கருதப்படுகின்றனர். சந்தேகத்தைத் தவிர்ப்பதற்கு, மூன்றாம் தரப்பினர் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்ட எந்தவொரு நிபந்தனையைப் பொறுத்தும், எந்தவொரு தரப்பினருக்கும் மூன்றாம் தரப்புப் பலனாளி என்ற உரிமையை இந்த விதிமுறைகளில் எதுவும் வழங்கவில்லை. இந்த விதிமுறைகளில் குறிப்புகளின் மூலம் சேர்க்கப்பட்டிருக்கும் ஏதேனும் நிபந்தனைகள் அல்லது ஒப்பந்தங்கள் அல்லது விதிமுறைகளில் சேர்க்காமலே குறிப்புகளாகச் சுட்டப்படும் நிபந்தனைகள் போன்றவையும் இதிலடங்கும், ஆனால் இவை மட்டுமே அல்ல.

Play கொள்கைகள். Google Play இல் இடப்படும் மதிப்பாய்வுகள் பின்வரும் கொள்கைகளுக்கு உட்பட்டவை. தவறான பயன்பாடு அல்லது பிற உள்ளடக்க மீறல்களைப் பற்றி புகாரளிக்க விரும்பினால், இங்கே கிளிக் செய்க.

குறைபாடுள்ள படைப்பு. உங்கள் கணக்கின் மூலம் உங்களுக்கு படைப்பு கிடைத்தவுடன், கூறப்பட்டவாறு அது செயல்பட்டு, பயனளிப்பதை உறுதிப்படுத்துவதற்கு முடிந்தவரை விரைவில் படைப்புக்களைச் சரிபார்த்து, ஏதேனும் பிழைகள் அல்லது குறைபாடுகளைக் கண்டறிந்தால், முடிந்தவரை விரைவாக எங்களிடம் அல்லது வழங்குநரிடம் தெரிவிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு, Google Play பணம் திரும்பப்பெறுதல் கொள்கையைப் பார்க்கவும்.

படைப்பு அகற்றப்படுதல் அல்லது இல்லாமை. விதிமுறைகளுக்கு உட்பட்டு, நீங்கள் வாங்கும் அல்லது நிறுவும் படைப்பு ஆனது சந்தாக் காலமொன்றுக்கு வாங்கப்பட்டிருந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்திற்கும், பிற சந்தர்ப்பங்களில், அந்த படைப்புக்களை உங்களுக்குக் கிடைக்கச் செய்யும் உரிமை Googleக்கு உள்ள காலம் வரையும் Google Play மூலம் அந்த படைப்பு உங்களுக்குக் கிடைக்கும். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் (எடுத்துக்காட்டாக, தொடர்புடைய உரிமைகளை Google இழந்தால், சேவை அல்லது படைப்பு நிறுத்திவைக்கப்பட்டால், முக்கியமான பாதுகாப்புச் சிக்கல்கள் இருந்தால் அல்லது பொருந்தும் விதிமுறைகள் அல்லது சட்ட மீறல்கள் இருந்தால்), நீங்கள் வாங்கியுள்ள குறிப்பிட்ட சில படைப்புக்களைGoogle உங்கள் சாதனத்திலிருந்து அகற்றலாம் அல்லது அதற்கான அணுகலை உங்களுக்கு வழங்குவதை நிறுத்தலாம். Google Ireland Limited ஆல் விற்கப்படும் படைப்புகளுக்கு, அத்தகைய அகற்றம் அல்லது நிறுத்தத்தைப் பற்றி, வாய்ப்புள்ளபோது, உங்களுக்கு அறிவிப்பு அளிக்கப்படலாம். அவ்வாறு அகற்றும் அல்லது நிறுத்தும் முன்னர் அந்த படைப்பின்நகலை உங்களால் பதிவிறக்க முடியாவிட்டால், Google உங்களுக்கு (அ) முடிந்தால் படைப்பின்பதிலீடு அல்லது (ஆ) படைப்பின் விலையின் தொகையை முழுமையாக அல்லது பகுதியைத் திருப்பித் தரக்கூடும். Google உங்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்தினால், பணத்தைத் திரும்பப்பெறுவதே உங்கள் ஒரே தீர்வாக இருக்கும்.

பல கணக்குகள். வெவ்வேறு பயனர் பெயர்களுடன் உங்களிடம் பல Google கணக்குகள் இருந்தால், நீங்கள் தான் அத்தகைய ஒவ்வொரு கணக்கின் உரிமையாளர் என்றால் மற்றும் அத்தகைய பரிமாற்றங்களை அனுமதிக்கும் தொடர்பான சேவை அம்சத்தை Google செயல்படுத்தியிருந்தால், சில சந்தர்ப்பங்களில் ஒரு கணக்கிலிருந்து வெளியேயும் மற்றொரு கணக்கிற்கும், நீங்கள் படைப்பினைப் பரிமாற்றலாம்.

சாதனங்களுக்கான அணுகல் வரம்புகள். Google நீங்கள் படைப்பினைஅணுகுவதற்கு பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் அல்லது மென்பொருள் பயன்பாடுகளின் எண்ணிக்கை குறித்து அவ்வப்போது வரம்புகளை விதிக்கலாம். Google Play மூவீஸ் & டிவி/Google TV-க்கான இந்த வரம்புகளைப் பற்றி மேலும் தகவல்களைப் பெற, Google Play மூவீஸ் & டிவி/Google TV பயன்பாட்டு விதிகளைப் பார்க்கவும்.

ஆபத்தான செயல்பாடுகள். சேவைகள் அல்லது படைப்பு எதுவும், அணுக்கருத் தொழிலிடக் கருவிகளை இயக்குதல், உயிர் காக்கும் உதவி உபகரணங்கள், அவசரத் தகவல்தொடர்பு, விமான வழிகாட்டல் அல்லது தகவல்தொடர்பு அமைப்புகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள், அல்லது சேவைகள் அல்லது படைப்பின் செயலிழப்பால் மரணம், நபர்களுக்குக் காயம் அல்லது கடுமையான உடல் அல்லது சுற்றுச்சூழல் சேதம் ஏற்படக் கூடிய வேறு ஏதேனும் அத்தகைய செயல்பாடுகள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படவில்லை.

Google Play மூவீஸ் & டிவி/Google TV. Google Play மூவீஸ் & டிவி/Google TVயை நீங்கள் அணுகுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான கூடுதல் விவரங்களையும் கட்டுப்பாடுகளையும் அறிய, Google Play மூவீஸ் & டிவி/Google TV பயன்பாட்டு விதிகளைப் பார்க்கவும்.