தனியுரிமை அறிக்கை

நீங்களோ உங்கள் இறுதிப் பயனர்களோ Read Along ஆப்ஸை Google Workspace for Education கணக்கின் மூலம் அணுகினால் இந்தத் தனியுரிமை அறிக்கை பொருந்தாது. மேலும் Google Workspace for Education தனியுரிமை அறிக்கை அல்லது Google Workspace for Educationனை வழங்க Google ஒப்புக்கொண்ட பிற ஒப்பந்தம் உங்கள் Read Along ஆப்ஸ் பயன்பாட்டிற்குப் பொருந்தும்.

Read Along ஆப்ஸ் சேகரிக்கும் தரவைப் பற்றியும் அவற்றை நாங்கள் பயன்படுத்தும் விதத்தைப் பற்றியும் பெற்றோர்கள் புரிந்துகொள்ள உதவுவதே இந்த Read Along தனியுரிமை அறிக்கையின் நோக்கமாகும்.  இந்த அறிக்கை Read Along ஆப்ஸ் சார்ந்த தனியுரிமை நடைமுறைகள் குறித்த தகவல்களை வழங்குவதோடு Google தனியுரிமைக் கொள்கையின் மிகத் தொடர்புடைய பிரிவுகளைச் சுருக்கமாகவும் விளக்குகிறது.

Read Along ஆப்ஸை உள்நுழைவுச் சேவையாகவும் உள்நுழையாச் சேவையாகவும் பயன்படுத்தலாம். உள்நுழைவுச் சேவையில் பயனர் தனது Google கணக்கு மூலம் உள்நுழைவார், அவரது செயல்பாடுகளின் பதிவும் விருப்பத்தேர்வுகளும் கணக்கில் சேமிக்கப்படும். எனவே அவர் எந்தவொரு சாதனத்திலும் உள்நுழைந்து சேவையைப் பயன்படுத்தலாம். உள்நுழையாச் சேவையில், பயனர் Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையத் தேவையில்லை. ஆனால் அவரது செயல்பாடுகளின் பதிவும் விருப்பத்தேர்வுகளும் சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும்.

உள்நுழைவுச் சேவையை இணைய மற்றும் Android ஆப்ஸ் பயனர்கள் பயன்படுத்தலாம். ஆனால் உள்நுழையாச் சேவையை Android ஆப்ஸில் ஏற்கெனவே உள்ள பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

Read Along ஆப்ஸைப் பயன்படுத்தும்போது, புத்தகத்தைப் படிப்பது போன்ற உங்கள் பிள்ளைகளின் ஆப்ஸ் பயன்பாட்டின் அடிப்படையிலான தகவல்களை Google சேகரிக்கிறது. இவற்றில் அடங்குபவை:

Read Along ஆப்ஸை உள்நுழைவுச் சேவையாகப் பயன்படுத்தும்போது:

Read Along ஆப்ஸை உள்நுழையாச் சேவையாகப் பயன்படுத்தும்போது:

Read Along ஆப்ஸின் உள்நுழைவுச் சேவை, உள்நுழையாச் சேவை ஆகிய இரண்டும் குரல் தரவைச் சேகரிக்கும். பயனரின் தனியுரிமையைப் பாதுகாக்க, குரல் தரவு பயனரின் சாதனத்தில் மட்டும் செயலாக்கப்படுமே தவிர Googleளுடன் பகிரப்படாது. செயலாக்கப்பட்ட பிறகு குரல் தரவு சேமிக்கப்படுவதில்லை.

Read Along ஆப்ஸின் உள்நுழைவுச் சேவை, உள்நுழையாச் சேவை ஆகிய இரண்டும் பயனர்களைத் தங்களின் பிள்ளைகளுக்காகத் தனித்தனி சுயவிவரங்களை அமைக்கவும் அனுமதிக்கின்றன. மேலும் வழங்கப்பட்டுள்ள தோற்றப் படங்களின் தொகுப்பில் இருந்து அவர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம், தங்கள் சுயவிவரத்திற்குப் பெயர் வைக்கலாம்.

சேகரிக்கும் தகவல்களை நாங்கள் பயன்படுத்தும் விதம்

ஆப்ஸிலோ இணையத்திலோ Read Along ஆப்ஸைப் பயன்படுத்தும்போது, மேலே குறிப்பிட்டுள்ள தகவல்களை Google சேகரிக்கிறது. இதன் மூலம் உங்கள் பிள்ளை ஒவ்வொரு அமர்வாகத் தொடர்ந்து படிப்பதில் முன்னேற்றம் அடைய முடியும். இது போன்ற தகவல் சேகரிப்பினால், உங்கள் பிள்ளை இதற்கு முன் வாசித்தவற்றைப் பார்க்க முடிவதோடு அவர் ஆப்ஸில் பெற்ற ரிவார்டுகளைக் கண்காணிக்கவும் முடியும். 'இதற்கு முன் படித்தவை' உங்கள் பிள்ளையின் ஆர்வங்களுடனும் படிப்பு நிலையுடனும் பொருந்தும் புத்தகங்களைப் பரிந்துரைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தகவல்கள் உங்கள் பிள்ளையின் படிப்புத் திறனைக் காலப்போக்கில் (மாதக்கணக்கில்/ஆண்டுக்கணக்கில்) மேன்மேலும் வளர்க்க மிகவும் அவசியம்.

Read Along ஆப்ஸின் உள்நுழைவு/உள்நுழையாப் பதிப்பைப் பயன்படுத்தும்போது, உங்கள் பிள்ளைகள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருடன் பகிரவோ பொதுவில் காட்டவோ Google அனுமதிக்காது (கீழே குறிப்பிட்டுள்ளபடி, ஆசிரியர்கள்/நிர்வாகிகளுடன் பகிர்வதைத் தவிர்த்து).

சேகரிக்கப்படும் தகவல்களை Google அகச் செயல்பாட்டு நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தும். ஸ்பேம் மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுத்தல், உள்ளடக்க உரிமக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல், விருப்ப மொழியைத் தீர்மானித்தல், ஆப்ஸின் உள்நுழைவு/உள்நுழையாப் பதிப்புகளின் பயன்பாட்டைப் பகுப்பாய்வு செய்தல், சேவையை வழங்குதல், பராமரித்தல், மேம்படுத்துதல் போன்றவை இந்த நோக்கங்களில் அடங்கும்.

Read Along ஆப்ஸின் உள்நுழைவுப் பதிப்பைப் பயன்படுத்தும்போது, ஆசிரியர்களும் நிர்வாகிகளும் குழுக்களை உருவாக்கவும் Google அனுமதிக்கிறது. இந்தக் குழுக்கள் மூலம் பல பிள்ளைகள் தங்களின் ஆசிரியர்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர்கள் படிக்கும் புத்தகங்களின் பெயர், படிப்பு நிலையிலான முன்னேற்றம், ஒட்டுமொத்தமாக எவ்வளவு நிமிடங்கள் படித்துள்ளனர், ஆப்ஸில் அவர்களின் பெயர் ஆகியவை இந்தத் தகவல்களில் அடங்கும். உங்கள் பிள்ளையும் குழுவிலுள்ள மற்ற பிள்ளைகளும் தினமும் படிப்பதற்கு ஆசிரியர்கள் வழிநடத்த இது உதவும்.

Read Along ஆப்ஸின் உள்நுழையாப் பதிப்பைப் பயன்படுத்தும்போது, ஆப்ஸால் சேகரிக்கப்பட்டு உங்கள் சாதனத்தில் சேமிக்கப்பட்ட எந்தத் தரவையும் நீங்கள் பார்க்க மற்றும்/அல்லது நீக்க விரும்பினால் Read Along ஆப்ஸை நீக்கியோ உங்கள் சாதன ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் 'ஆப்ஸ் தரவை நீக்குதல்' அம்சத்தைப் பயன்படுத்தியோ அதைச் செய்யலாம்.

Read Along ஆப்ஸின் உள்நுழைவுப் பதிப்பைப் பயன்படுத்தும்போது, உங்கள் கணக்கு அடையாளங்காட்டி தொடர்பாக Read Along ஆப்ஸால் சேகரிக்கப்பட்டு சேவையகத்தில் சேமிக்கப்பட்ட எந்தத் தரவையும் நீங்கள் நீக்க விரும்பினால் ஆப்ஸின் இடதுபுற வழிசெலுத்தல் மெனுவிலுள்ள “ஆப்ஸ் பதிவை நீக்கு” எனும் பட்டனைக் கிளிக் செய்து அவற்றை நீக்கலாம். உங்கள் மொத்த Google கணக்கை நீக்குவதன் மூலமும் இந்தத் தரவை உள்நுழைவுப் பதிப்பில் இருந்து நீக்கலாம்.

நாங்கள் பகிரும் தகவல்கள்

பின்வரும் சூழ்நிலைகளில் ஏதேனுமொன்று பொருந்தினால் தவிர Googleளுக்கு வெளியே தனிப்பட்ட தகவல்களை Google வெளியிடாது:

ஒப்புதலுடன் பகிர்தல்

பெற்றோர்/பாதுகாவலர் ஒப்புதல் இருக்கும்பட்சத்தில் Googleளைச் சாராத நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் (ஆசிரியர்கள்/நிர்வாகிகள் போன்றவர்கள்) தனிப்பட்ட தகவல்களை Google பகிரும்.

சட்டப்பூர்வக் காரணங்களுக்காகப் பகிர்தல்

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றைச் செய்ய தகவல்களை அணுகுவது, பயன்படுத்துவது, பாதுகாப்பது அல்லது வெளியிடுவது அவசியம் என்ற நன்னம்பிக்கை எங்களுக்கு இருந்தால் மட்டுமே Googleளைச் சாராத நிறுவனங்கள், அமைப்புகள் அல்லது தனிநபர்களுடன் தனிப்பட்ட தகவல்களை Google பகிரும்:

வெளி நிறுவனங்களின் செயலாக்கத்திற்காகப் பகிர்தல்

எங்கள் வழிமுறைகளின் அடிப்படையிலும் எங்கள் தனியுரிமைக் கொள்கைக்கும் பிற பொருந்தக்கூடிய ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்கும் வகையிலும் தனிப்பட்ட தகவல்களை எங்கள் சார்பாக முறையாகச் செயலாக்கும் பொருட்டு, அவற்றை எங்கள் இணை நிறுவனங்களுக்கோ பிற நம்பகமான பிசினஸ்கள்/நபர்களுக்கோ Google வழங்கக்கூடும்.

ஆப்ஸைப் பயன்படுத்துவது தொடர்பான தொகுக்கப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருடன் Google பகிரக்கூடும். உதாரணமாக, பயனர்கள் ஆப்ஸைப் பயன்படுத்தும் விதத்தை விளக்குதல், கூட்டாளர்களுடனான எங்களின் அறிக்கையிடல் கட்டாயங்களுக்கு இணங்குதல்.

முரண்படும் விதிமுறைகளின் விளக்கம்

தனியுரிமை அறிக்கைக்கும் Google தனியுரிமைக் கொள்கைக்கும் இடையில் வேறுபடும் விதிமுறைகள் இருந்தால், Google தனியுரிமைக் கொள்கைக்குப் பதிலாக இந்தத் தனியுரிமை அறிக்கையே பொருந்தும்.

சேவை வழங்குநர்

Read Along சேவையை வழங்குவது:

Google LLC

1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043 USA

ஃபோன்: +1 650-253-0000

EEA மற்றும் சுவிட்சர்லாந்தில் இச்சேவையை வழங்குவது:

Google Ireland Limited

Gordon House, Barrow Street, Dublin 4

Republic of Ireland

எங்களைத் தொடர்புகொள்க

ஏதேனும் கேள்விகள்/கருத்துகள் இருந்தால் பெற்றோர்கள் இந்த மின்னஞ்சல் முகவரியில் எங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்: readalong@google.com