Google இயக்ககச் சேவை விதிமுறைகள்

கடைசியாக டிசம்பர் 10, 2018 அன்று திருத்தப்பட்டது செயலாக்கப்படும் தேதி: ஜனவரி 22, 2019

1. அறிமுகம்

Google இயக்ககத்தைப் பயன்படுத்துவதற்கு நன்றி. Google LLC (“Google”, “நாங்கள்” அல்லது “எங்கள்” எனக் குறிப்பிடப்படும்) வழங்கும் சேவையே Google இயக்ககம் ஆகும். 1600 Amphitheatre Parkway, Mountain View California 94043, USA என்ற முகவரியில் எங்கள் நிறுவனம் அமைந்துள்ளது. நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியிலோ சுவிட்சர்லாந்திலோ வசிப்பவராக இருந்தால், Google இயக்ககமானது Google Ireland Limited (“Google”, “நாங்கள்” அல்லது “எங்கள்” எனக் குறிப்பிடப்படும்) நிறுவனத்தால் வழங்கப்படும். இந்த நிறுவனமானது Gordon House, Barrow Street, Dublin 4, Ireland என்ற முகவரியில், அயர்லாந்து விதிகளின்கீழ் (பதிவு எண்: 368047) இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த Google இயக்ககச் சேவை விதிமுறைகள் (இது "விதிமுறைகள்" எனக் குறிக்கப்படும்), Google இயக்ககம் மற்றும் அதில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தின் உபயோகத்தையும் அவற்றுக்கான அணுகலையும் பற்றி விளக்குகிறது. எங்கள் சேவையைப் பயன்படுத்தும் போது உங்களுக்குள்ள பொறுப்புகளை எங்கள் நிரல் கொள்கைகள் சுட்டிக்காட்டும் அதே சமயம், உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு சேகரித்து, பயன்படுத்துகிறோம் என்பதை எங்கள் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது.

Google இயக்ககத்தைப் பயன்படுத்துவதற்கு விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவற்றைக் கவனமாகப் படிக்கவும். உங்களுக்கு விதிமுறைகள் புரியவில்லை எனில் அல்லது அவற்றின் ஏதாவதொரு பகுதியை ஏற்றுக்கொள்ளவில்லை எனில், நீங்கள் Google இயக்ககத்தைப் பயன்படுத்தக் கூடாது.

2. Google இயக்ககம் தொடர்பான உங்கள் உபயோகம்

வயது வரம்புகள். Google இயக்ககத்தைப் பயன்படுத்த, நீங்கள் 13 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருக்க வேண்டும். நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்து, ஆனால் 18 வயதிற்குக் கீழ் இருந்தால், Google இயக்கக்கத்தைப் பயன்படுத்துவதற்கு விதிமுறைகளை ஏற்பதற்கு, பெற்றோர் அல்லது சட்டப்பூர்வக் காப்பாளரின் அனுமதியை நீங்கள் கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும்.

தனிப்பட்ட பயன்பாடு. இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம், வர்த்தக நோக்கங்களுக்கு Google இயக்ககத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று சம்மதிக்கிறீர்கள். உங்கள் வர்த்தக நோக்கமற்ற தனிப்பட்ட தேவைகளுக்கு மட்டுமே இயக்ககச் சேவையைப் பயன்படுத்த வேண்டும். வணிகத்திற்கு, GSuiteஐப் பயன்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம்.

உங்கள் Google கணக்கு. Google இயக்ககத்தைப் பயன்படுத்த வேண்டுமெனில் உங்களுக்கு Google கணக்குத் தேவைப்படும். உங்கள் Google கணக்கைப் பாதுகாக்க உங்கள் கடவுச்சொல்லை இரகசியமானதாக வைத்திருங்கள். உங்கள் Google கணக்கில் அல்லது அதன் மூலமாக நிகழ்பவைக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். மூன்றாம் தரப்பினர் பயன்பாடுகளில் உங்கள் Google கணக்கின் கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் கடவுச்சொல் அல்லது Google கணக்கானது அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தப்படுவதாகத் தெரிந்தால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

உங்கள் நடத்தை. Google இயக்ககத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம். பொருந்தக்கூடிய ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உட்பட சட்டத்தால் அனுமதிக்கப்படும் முறையில் Google இயக்ககத்தைப் பயன்படுத்த வேண்டும். Google இயக்ககத்தில் உங்கள் நடத்தைக்கும் உள்ளடக்கத்துக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள், மேலும் நீங்கள் எங்களின் நிரல் கொள்கைகளுக்கு உடன்பட வேண்டும். Google இயக்ககத்தில் உங்கள் நடத்தையும் உள்ளடக்கமும் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிரல் கொள்கைகளுடன் இணக்கமாக இருப்பதற்காக அதனை மதிப்பாய்வு செய்வோம்.

Google இயக்ககம், மொபைல் சாதனங்களில் கிடைக்கும். போக்குவரத்து அல்லது பாதுகாப்புச் சட்டங்களைப் பின்பற்றுவதிலிருந்து உங்களைத் திசைதிருப்பித் தடுக்கும் விதமாக Google இயக்ககத்தைப் பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் உள்ளடக்கம். Google இயக்ககத்தில் நீங்கள் உள்ளடக்கத்தைப் பதிவேற்றலாம், சமர்ப்பிக்கலாம், சேர்த்து வைக்கலாம், அனுப்பலாம் அல்லது பெறலாம். அந்த உள்ளடக்கத்தில் அறிவுசார் சொத்துரிமை ஏதேனும் இருந்தால் நீங்களே அதன் உரிமையாளராய் இருப்பீர்கள். சுருக்கமாக, உங்களுக்குச் சொந்தமானவை உங்களுடையதாகவே இருக்கும்.

Google இயக்ககத்தில் அல்லது Google இயக்ககம் மூலமாக உள்ளடக்கத்தைப் பதிவேற்றுதல், சமர்ப்பித்தல், சேமித்தல், அனுப்புதல் அல்லது பெறுதலை மேற்கொள்ளும்போது, அதை நாங்கள் பயன்படுத்துவதற்கு, வழங்குவதற்கு, சேமிப்பதற்கு, மீண்டும் உருவாக்குவதற்கு, மாற்றுவதற்கு, வருவிக்கப்பெற்ற படைப்புகளை உருவாக்குவதற்கு (எங்கள் சேவைகளில் உங்கள் உள்ளடக்கம் சிறந்த முறையில் செயலாற்றுவதற்கு நாங்கள் செய்யும் மொழிபெயர்த்தல், தழுவல்கள் அல்லது பிற மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள்), தொடர்புகொள்வதற்கு, வெளியிடுவதற்கு, பொதுவில் செயல்படுத்துவதற்கு, பொதுவில் காட்சிப்படுத்துவதற்கு மற்றும் உள்ளடக்கத்தைப் பகிர்வதற்கு உலகளவில் அதற்கான உரிமத்தை Googleக்கு வழங்குகிறீர்கள். இந்த உரிமத்தில் நீங்கள் வழங்கியுள்ள உரிமைகள், எங்கள் சேவைகளை இயக்கவும், ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும், மேலும் புதிய சேவை ஒன்றை உருவாக்கவும் வழங்கியுள்ளீர்கள். உங்கள் உள்ளடக்கத்தை நீக்கும் வரை, எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினாலும் இந்த உரிமம் தொடரும். Google இயக்ககத்தில் நீங்கள் சமர்ப்பிக்கும் எந்த உள்ளடக்கத்திற்கும், இந்த உரிமத்தை வழங்குவதற்கான தகுந்த உரிமைகளைப் பெற்றுள்ளீர்களா என்பதை உறுதி செய்யவும்.

Google இயக்ககத்தின் பகிர்வு அமைப்புகள், Google இயக்ககத்தில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தை எவ்வாறெல்லாம் பிறர் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன. Google இயக்ககத்தில் நீங்கள் உருவாக்கும் அல்லது பதிவேற்றும் எல்லா உள்ளடக்கத்திற்கும் இயல்பாக நீங்களே கட்டுப்பாட்டாளராக அமைக்கப்பட்டிருப்பீர்கள். நீங்கள் உள்ளடக்கத்தைப் பகிரலாம் மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாட்டைப் பிறருக்கு வழங்கலாம்.

தனிப்பயனாக்கிய தேடல் முடிவுகள், ஸ்பேம் மற்றும் தீப்பொருளைக் கண்டறிதல் போன்ற தொடர்புடைய தயாரிப்பு அம்சங்களைத் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வழங்க, எங்கள் தன்னியக்க அமைப்புகள் உங்கள் உள்ளடக்கத்தை ஆய்வு செய்கின்றன. உள்ளடக்கத்தைப் பெறுவது, பகிர்வது, பதிவேற்றுவது, சேமிப்பது ஆகிய செயல்களின் போது இந்த ஆய்வு நடைபெறும். உள்ளடக்கத்தை Google எவ்வாறு பயன்படுத்துகிறது, சேமிக்கிறது என்பதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும். Google இயக்ககத்தைப் பற்றிய கருத்தை அல்லது பரிந்துரைகளைச் சமர்ப்பித்தால், உங்களிடம் எந்தக் கோரிக்கையையும் வைக்காமல் உங்கள் கருத்தை அல்லது பரிந்துரைகளை நாங்கள் பயன்படுத்தக்கூடும்.

அறிவிப்புகள். நீங்கள் Google இயக்ககத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக, சேவை அறிவிப்புகள், நிர்வாகச் செய்திகள் மற்றும் பிற தகவலை நாங்கள் அனுப்பக்கூடும். அந்தத் தகவல் தொடர்புகள் சிலவற்றிலிருந்து நீங்கள் விரும்பினால் குழுவிலகிக்கொள்ளலாம்.

எங்களின் Google இயக்ககச் சேவைகள். Google இயக்ககத்தைப் பயன்படுத்துவதால், Google இயக்ககத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகள் அல்லது நீங்கள் அணுகும் உள்ளடக்கத்திற்கான உரிமை உங்களுக்கு வழங்கப்படாது. உரிமையாளரின் அனுமதியைப் பெறும் வரை அல்லது சட்டத்தால் அனுமதிக்கப்படும் வரை, Google இயக்கக உள்ளடக்கத்தைப் பயன்படுத்த முடியாது. Google இயக்ககத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராண்டிங் அல்லது லோகோக்களைப் பயன்படுத்துவதற்கான உரிமையை இந்த விதிமுறைகள் வழங்குவதில்லை. Google இயக்ககத்திலோ அல்லது அதனுடனோ தோன்றும் எந்தச் சட்ட அறிவிப்புகளையும் அகற்றவோ, மறைக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ கூடாது.

3. தனியுரிமைப் பாதுகாப்பு

Google இயக்ககத்தைப் பயன்படுத்தும் போது, உங்கள் தனிப்பட்ட தரவை எவ்வாறு பயன்படுத்துவோம் மற்றும் உங்கள் தனியுரிமையை எவ்வாறு பாதுகாப்போம் என்பதை Google இன் தனியுரிமைக் கொள்கை விளக்குகிறது. Google இயக்ககத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அத்தகைய தரவை எங்கள் தனியுரிமைக் கொள்கைகளுக்கு ஏற்ப Google பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள்.

4. பதிப்புரிமைப் பாதுகாப்பு

அமெரிக்க Digital Millennium Copyright Act செயல்முறையின்படி, பதிப்புரிமை மீறல் தொடர்பான புகார்களில் தலையிட்டு, தொடர்ச்சியாகப் பதிப்புரிமை மீறலில் ஈடுபடுபவர்களின் கணக்குகளை முடக்குகிறோம்.

பதிப்புரிமை உரிமையாளர்கள் அவர்களது அறிவுசார் சொத்தினை நிரவகிக்க உதவும் வகையில் தகவல்களை வழங்குகிறோம். உங்கள் பதிப்புரிமையை யாரேனும் மீறுவதாக நீங்கள் நினைத்தால், மேலும் அதனை எங்களுக்குத் தெரியப்படுத்த விரும்பினால், அறிவிப்புகளைச் சமர்ப்பித்தல் மற்றும் அறிவிப்புகளுக்குப் பதில் அளித்தல் தொடர்பான Google இன் கொள்கைகள் குறித்த தகவல்களை எங்கள் உதவி மையத்தில் பார்க்கலாம்.

5. நிரல் கொள்கைகள்

உள்ளடக்கமானது சட்டவிரோதமானதா அல்லது எங்களின் நிரல் கொள்கைகளை மீறுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக அதை மதிப்பாய்வு செய்வோம். அத்துடன், எங்கள் கொள்கைகள் அல்லது சட்டத்தை மீறுவதாக நம்பும் உள்ளடக்கத்தை நாங்கள் அகற்றலாம் அல்லது காட்சிப்படுத்த மறுக்கலாம். ஆனால், உள்ளடக்கத்தை நிச்சயம் மதிப்பாய்வு செய்வோம் என்று இதற்குப் பொருளாகாது, எனவே நாங்கள் அவ்வாறு செய்வோம் என்று கருத வேண்டாம்.

6. எங்கள் சேவைகளில் பயன்படுத்தப்படும் மென்பொருளைப் பற்றிய அறிமுகம்

கிளையன்ட் மென்பொருள். Google இயக்ககத்தில் பதிவிறக்கத்தக்க கிளையன்ட் மென்பொருள் ("மென்பொருள்") உள்ளது. புதிய பதிப்பு அல்லது அம்சம் கிடைக்கும் போது, உங்கள் சாதனத்தில் இந்த மென்பொருள் தானாகவே புதுப்பித்துக்கொள்ளும். Google இயக்ககத்தின் ஒரு பகுதியாக தனிப்பட்ட, உலகளாவிய, ராயல்டி அற்ற, ஒதுக்கப்படக்கூடியதாக இல்லாத, பிரத்யேகமற்ற உரிமையை Google வழங்கிய மென்பொருளைப் பயன்படுத்துவதற்காக Google வழங்குகிறது. Google வழங்கும் Google இயக்ககத்தின் பயன்களை நீங்கள் பயன்படுத்தி மகிழ்வதற்காகவே இந்த உரிமம், இந்த விதிமுறைகளின்படி வழங்கப்பட்டுள்ளது. Google இயக்ககம் அல்லது அதில் சேர்க்கப்பட்டிருக்கும் மென்பொருளை நீங்கள் நகலெடுப்பது, மாற்றுவது, பகிர்வது, விற்பது அல்லது குத்தகைக்கு விடுவது, அதன் அசல் பதிப்பை மாற்றுவது அல்லது மூலக் குறியீட்டைப் பிரித்தெடுப்பது போன்றவற்றை சட்டத்திற்குத் தேவைப்படும் பட்சத்தில் அல்லாமல் எங்களுடைய எழுத்துப்பூர்வ அனுமதியின்றி செய்ய முயற்சிக்கக்கூடாது.

ஓப்பன் சோர்ஸ் மென்பொருள். ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் எங்களுக்கு முக்கியமானதாகும். Google இயக்ககத்தில் பயன்படுத்தும் சில மென்பொருள் ஓப்பன் சோர்ஸ் உரிமத்தின் கீழ் வழங்கப்படக்கூடும், இதை உங்களுக்குக் கிடைக்கும்படி செய்வோம். இந்த விதிமுறைகளில் சிலவற்றை வெளிப்படையாக மாற்றியமைக்கும் பிரிவுகள் ஓப்பன் சோர்ஸ் உரிமத்தில் இருக்கக்கூடும்.

7. Google இயக்ககத்தை மாற்றுதலும் நிறுத்துதலும்

Google இயக்ககத்தில் செய்யப்படும் மாற்றங்கள். Google இயக்ககத்தை நாங்கள் தொடர்ந்து மாற்றுவது, மேம்படுத்துவது போன்ற செயல்களைச் செய்து வருகிறோம். செயல்திறன் அல்லது பாதுகாப்பு மேம்படுத்துதல்களை உருவாக்குவது, செயல்படும் விதங்கள் அல்லது அம்சங்களை மாற்றுவது அல்லது சட்டத்திற்கு இணங்கும் வகையில் மாற்றங்களைச் செய்வது அல்லது எங்கள் அமைப்புகளில் சட்டத்திற்கு விரோதமான செயல்பாடுகளை மேற்கொள்வது அல்லது முறைகேடாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுப்பது என பல வகைகளில் நாங்கள் செயல்படுவோம். Google இயக்ககம் தொடர்பான தகவலைப் பெற குழுசேர, இங்கே பார்வையிடவும். Google இயக்கத்தின் உங்கள் உபயோகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் என நாங்கள் கருதும் மாற்றங்கள் தொடர்பான விஷயங்களை உங்களுக்கு அனுப்பி வைப்போம். எனினும் அறிவிப்பு ஏதுமின்றியும் Google இயக்கத்தில் மாற்றங்களைச் செய்யக்கூடிய சூழலும் ஏற்படலாம். இதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது பாதுகாப்பு மற்றும் சேவையில் செயல்படும் தன்மை போன்றவற்றை உறுதிப்படுத்துவது, முறைகேட்டைத் தடுப்பது அல்லது சட்டத் தேவைகளைச் சந்திப்பது போன்ற சூழல்கள்.

இடைநீக்கம் மற்றும் முடக்கம். எங்களுக்கு வருத்தமளிப்பினும் கூட, எப்போது வேண்டுமானாலும் Google இயக்ககத்தைப் பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்தலாம். எங்கள் விதிமுறைகள் அல்லது எங்கள் நிரல் கொள்கைகளை நீங்கள் வேண்டுமென்றோ அல்லது தொடர்ச்சியாகவோ மீறினால், Google இயக்ககத்திற்கான உங்கள் அணுகலை நாங்கள் இடைநீக்கலாம் அல்லது நிரந்தரமாக முடக்கலாம். Google இயக்ககத்திற்கான உங்கள் அணுகலை இடைநீக்குவது அல்லது முடக்குவது குறித்த முன்னறிவிப்பை வழங்குவோம். எனினும், எங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வகையிலோ அல்லது இதர பயனர்களின் Google இயக்கக அணுகலையும் பயன்பாட்டையும் பாதிக்கும் விதத்திலோ நீங்கள் Google இயக்ககத்தைப் பயன்படுத்தினால், Google இயக்ககத்திற்கான உங்கள் அணுகலை முன்னறிவிப்பில்லாமல் இடைநீக்கலாம் அல்லது முடக்கலாம்.

Google இயக்ககச் சேவையைப் பயன்படுத்தாமல் விடுவது. Google இயக்ககத்தை நாங்கள் நிறுத்துவதற்கு முடிவெடுத்தால், 60 நாட்களுக்கு முன்னதாக உங்களுக்கு அறிவிப்பை அனுப்புவோம். இந்த அறிவிப்புக் காலத்தில், Google இயக்ககத்திலிருந்து உங்கள் கோப்புகளை எடுத்துக்கொள்ளலாம். 60 நாட்கள் முடிந்த பின்பு, உங்கள் கோப்புகளை அணுக முடியாது. உங்கள் கோப்புகளும், அதற்கான உங்கள் உபயோகத்தையும் காப்பது முக்கியமானது எனக் கருதுகிறோம். உங்கள் கோப்புகளைப் பதிவிறக்குவது எப்படி என்பது குறித்த தகவல்களுக்கு, ஆதரவுப் பக்கத்தைப் பார்வையிடவும்.

8. கூடுதல் சேமிப்பகத்தை வாங்குதலும் கட்டணம் செலுத்துதலும்

இலவசச் சேமிப்பகம். Google ஆன்லைன் சேமிப்பகத்தில் 15 ஜி.பை. அளவிலான சேமிப்பிடத்தை இலவசமாகப் பயன்படுத்த Google அனுமதி வழங்குகிறது (விதிமுறைகளுடனான உங்கள் இணக்கத்திற்கு உட்பட்டது). இதை Google இயக்ககம், Gmail, Google புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பயன்படுத்தலாம்.

கூடுதல் சேமிப்பகத்தை வாங்குதல். உங்களுக்குத் தேவையெனில், கூடுதல் சேமிப்பகம் (“கட்டணச் சேமிப்பகத் திட்டம்”) வாங்கலாம். ரத்துசெய்யும் வரை, கட்டணச் சேமிப்பகத் திட்டத்திற்கு மாறிய தேதியிலிருந்து மற்றும் ஒவ்வொரு வழக்கமான சேவைக் காலப் புதுப்பித்தலின் போதும் உங்களுக்குத் தானாகவே கட்டணம் விதிக்கப்படும். கட்டணச் சேமிப்பகத் திட்டத்தை வாங்குவதற்கு, Google Payments சேவை விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள கட்டணம் செலுத்துவதற்கான விதிமுறைகளை நீங்கள் ஏற்க வேண்டும். Google Payment கணக்கு இல்லையெனில், இந்த இணைப்புக்குச் சென்று அதை அமைக்கலாம். மேலும், Google Payments பற்றிய கூடுதல் தகவல்களையும் இங்கே பார்க்கலாம். Google Payments கணக்கைப் பயன்படுத்தி கட்டணச் சேமிப்பகத் திட்டத்தை வாங்கும்போதெல்லாம், Payments சேவை விதிமுறைகளும் தனியுரிமை அறிவிப்பும் பொருந்தும். எதையும் வாங்குவதற்கு முன்பு அந்த விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும்.

ரத்துசெய்தல். ரத்துசெய்யப்படும்வரை, முந்தைய பதிப்பிற்கு மாறும் வரை அல்லது இந்த விதிமுறைகளின் பொருட்டு நிறுத்தப்படும்வரை உங்களின் கட்டணச் சேமிப்பகத் திட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும். Google இயக்ககச் சேமிப்பு அமைப்புகள் என்பதில் உங்கள் கட்டணச் சேமிப்பகத் திட்டத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம் அல்லது முந்தைய பதிப்பிற்கு மாற்றலாம். தற்போதைய சேவை விதிமுறைகள் காலாவதியான பிறகு, அடுத்த பில்லிங் காலத்தில் நீங்கள் ரத்துசெய்ததோ அல்லது முந்தைய பதிப்பிற்கு மாற்றியதோ செயல்பட ஆரம்பிக்கும். சரியான நேரத்தில் கட்டணச் சேமிப்பகத் திட்டத்திற்குப் பணம் செலுத்தவில்லை என்றால், உங்கள் கணக்கை முந்தைய பதிப்பிற்கு மாற்றுவது, இலவச சேமிப்பிட அளவிற்கு உங்கள் சேமிப்பைக் குறைப்பது போன்றவற்றைச் செய்ய எங்களுக்கு அதிகாரம் உள்ளது. வாங்குதல், ரத்துசெய்தல் மற்றும் பணம் திரும்பப்பெறுதல் கொள்கையில் உங்கள் கட்டணச் சேமிப்பகத் திட்டத்திற்கான ரத்துசெய்தல் மற்றும் பணம் திரும்பப்பெறுதல் தொடர்பான செயலாக்கத்தை விளக்கியுள்ளோம்.

திட்டம் மற்றும் கட்டண மாற்றங்கள். சேமிப்பகத் திட்டம் மற்றும் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டணங்களில் நாங்கள் மாற்றங்களைக் கொண்டு வரலாம். ஆனால், அதற்கு முன்னதாகவே மாற்றங்கள் குறித்து முன்னறிவிப்பை உங்களுக்கு வழங்குவோம். அறிவிப்பு வெளிவந்த பிறகு, உங்கள் தற்போதைய சேவைக் காலம் முடிவடைந்து அடுத்த கட்டணத்தைச் செலுத்துவதற்கான காலத்தில் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். கட்டணத்தை உயர்த்துதல் அல்லது சேமிப்பகத் திட்டத்தைக் குறைத்தல் பற்றிய அறிவிப்பை, கட்டணம் விதிக்கப்படும் முன்னர் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பாகவே வழங்குவோம். 30 நாட்களை விடக் குறைவான நேரத்தில் முன்னறிவிப்பு வழங்கப்பட்டால், அடுத்த கட்டணம் செலுத்தப்பட்டதிலிருந்து அதற்கடுத்த கட்டணம் செலுத்துவதற்கான காலம் வரை இந்த மாற்றம் நடைமுறைக்கு வராது. புதுப்பிக்கப்பட்ட சேமிப்பகத் திட்டம் அல்லது கட்டணத்தோடு தொடர விருப்பமில்லையென்றால், உங்கள் Google இயக்ககத்தின் சேமிப்பக அமைப்புகளில் எந்த நேரத்திலும் கட்டணச் சேமிப்பகத் திட்டத்தை ரத்து செய்யலாம் அல்லது அளவைக் குறைத்துக் கொள்ளலாம். தற்போதைய சேவைக் காலத்திற்குப் பிறகு, அடுத்த கட்டணக் காலத்தில் ரத்து செய்தல் அல்லது அளவு மாற்றம் நடைமுறைக்கு வரும்; உங்கள் கோப்புகளைத் தொடர்ந்து உங்களுக்குக் கிடைக்கும்படி செய்வோம் அல்லது Google இயக்ககத்திலிருந்து உங்கள் கோப்புகளை நீங்கள் வெளியேற்ற வாய்ப்பு வழங்குவோம்.

9. எங்கள் உத்தரவாதங்களும் பொறுப்புத்துறப்புகளும்

தேவையான திறன் மற்றும் பாதுகாப்பைப் பயன்படுத்தி Google இயக்ககத்தை உங்களுக்கு வழங்குகிறோம். நீங்கள் Google இயக்ககத்தைப் பயன்படுத்தி மகிழ்வீர்கள் என்று நம்புகிறோம். ஆனால், Google இயக்ககத்தில் உறுதியாகக் கூற முடியாத சில விஷயங்களும் உள்ளன. வெளிப்படையாகக் கூறிய மற்ற விஷயங்களைத் தவிர, Google இயக்ககம் மூலம் கிடைக்கும் குறிப்பிட்ட செயல்பாடு, அதன் நம்பகத்தன்மை, கிடைக்கும் தன்மை அல்லது உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திறன் ஆகியவற்றைப் பற்றி எந்தவொரு வாக்குறுதிகளையும் நாங்கள் தருவதில்லை.

10. Google இயக்ககத்திற்கான பொறுப்பு

Google மற்றும் அதன் சப்ளையர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இவற்றிற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்:

(அ) இந்தக் கொள்கைகளை நாங்கள் மீறியதன் காரணமாக ஏற்படாத இழப்புகள்;

(ஆ) உங்களுடன், தொடர்புடைய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்ட போது, விதிமுறைகளை Google மீறுவதால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமுள்ள பாதிப்பு எனக் கணக்கிடப்படாத இழப்பு அல்லது சேதம்; அல்லது

(இ) நஷ்டங்கள், வருவாய் இழப்புகள், வாய்ப்பு அல்லது தரவு இழப்புகள் உட்பட, உங்கள் எந்த வணிகத்துடனும் தொடர்புடைய இழப்புகள்.

Google மற்றும் அதன் சப்ளையர்கள், விநியோகஸ்தர்கள் வழங்கும் சேவைகளைப் பயன்படுத்துவதற்காக நீங்கள் செலுத்திய தொகைக்கு உட்பட்டே, உத்தரவாதங்கள் தொடர்பான கிளைம்கள் உட்பட இந்த விதிமுறைகளின் கீழ் கோரும் எல்லாக் கிளைம்களுக்கும் அவை பொறுப்பேற்கும். (ஆனால், இலவசச் சேவைக்கான கிளைமைக் கோரும் பட்சத்தில், அவை மீண்டும் சேவைகளை உங்களுக்கு வழங்கும்).

இந்த விதிமுறைகளில் எவையும் இறப்பு அல்லது உடல் காயம், மோசடி, மோசடியான வகையில் தவறான தகவல்களை வழங்குவது அல்லது சட்டத்தால் தவிர்க்க முடியாத பொறுப்பு ஆகிய காரணங்களுக்காக, Google மற்றும் அதன் சப்ளையர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் பொறுப்பை விலக்கும் அல்லது வரம்பிடும் நோக்கத்துடன் அமைக்கப்படவில்லை.

11. விதிமுறைகளை நிர்வகிக்கும் சட்டங்கள்.

நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கோ சுவிட்சர்லாந்திற்கோ வெளியே வசித்தால், இந்த விதிமுறைகள் அல்லது Google இயக்ககத்தால் உருவாகும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களுக்கு, கலிஃபோர்னியாவின் சட்ட முரண் விதிகளைத் தவிர அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாநிலத்தின் சட்டங்கள் பொருந்தும். இந்த விதிமுறைகள் அல்லது Google இயக்ககத்தால் உருவாகும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய எல்லாக் கிளைம்களும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா க்ளாரா கவுன்டியில் அமைந்துள்ள மத்திய மற்றும் மாநில நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படும், மேலும் அந்த நீதிமன்றங்களின் அதிகாரத்திற்கு நீங்களும் Google நிறுவனமும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

நீங்கள் ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியிலோ சுவிட்சர்லாந்திலோ வசித்தால், இந்த விதிமுறைகள் அல்லது Google இயக்ககத்தால் உருவாகும் அல்லது அவற்றுடன் தொடர்புடைய சிக்கல்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டின் சட்டங்கள் மற்றும் நீதிமன்ற விதிகள் பொருந்தும், மேலும் உங்கள் உள்ளூர் நீதிமன்றங்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சிக்கல்களுக்கு ஆன்லைனில் தீர்வு காண, அவற்றை ஐரோப்பிய ஆணைய ஆன்லைன் சிக்கல் தீர்வு இயங்குதளத்தில் சமர்ப்பிக்கலாம்.

12. இந்த விதிமுறைகளைப் பற்றிய அறிமுகம்

Google இயக்ககத்துக்குப் பொருந்தும் இந்த விதிமுறைகளிலோ அல்லது வேறு ஏதேனும் கூடுதல் விதிமுறைகளிலோ நாங்கள் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். உதாரணத்திற்கு: Google இயக்ககம் அல்லது சட்டம், தனிப்பயன் அல்லது அரசியல் அல்லது பொருளாதாரக் கொள்கையில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் விதமாகவும்; அல்லது கட்டுப்பாட்டாளர்கள் அல்லது தொடர்பான தொழில்துறை அமைப்புகள் வெளியிடும் வழிகாட்டுதல்களுக்குப் பதிலாகவும்; அல்லது Google தனது கடமைகளை நிறைவேற்றுவதற்காகவும் திருத்தங்களைக் கொண்டு வரலாம். நீங்கள் அவ்வப்போது விதிமுறைகளைப் பார்க்க வேண்டும். இந்த விதிமுறைகளில் செய்யப்படும் திருத்தங்கள் குறித்த அறிவிப்பை, இந்தப் பக்கத்தில் வெளியிடுவோம். திருத்தம் செய்யப்பட்ட கூடுதல் விதிமுறைகள் (“கூடுதல் விதிமுறைகள்”) பற்றிய அறிவிப்பை Google இயக்ககத்தில் வெளியிடுவோம். அத்துடன், விதிமுறைகளில் செய்யப்படவிருக்கும் திருத்தங்கள் குறித்து முன்கூட்டியே உங்களுக்கு அறிவிக்கப்படும். முன்தேதியிட்டு மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது. அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்தோ அல்லது உங்களுக்கு அறிவிக்கப்பட்டதிலிருந்தோ குறைந்தது 14 நாட்களுக்குப் பிறகு தான் அவை நடைமுறைக்கு வரும். எனினும், புதிய செயல்பாடுகள் அல்லது அம்சங்கள் (“புதிய சேவைகள்”) அல்லது சட்டக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உடனே நடைமுறைக்கு வரும். புதிய சேவைக்கான திருத்தப்பட்ட விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அந்தப் புதிய சேவையைப் பயன்படுத்துவதை இடைநிறுத்த வேண்டும் (மேலும் தகவலுக்கு, மேலே “முடக்கம்” என்பதைப் பார்க்கவும்).

இந்த விதிமுறைகளுக்கும் கூடுதல் விதிமுறைகளுக்கும் இடையே முரண்பாடு இருந்தால், முரண்பாடு ஏற்படாத வகையில் கூடுதல் விதிமுறைகள் பயன்படுத்தப்படும்.

இந்த விதிமுறைகள் Google மற்றும் உங்களுக்கு இடையிலான உறவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அவை மூன்றாம் தரப்பினர் பயன்பெறும் உரிமைகளை உருவாக்குவதில்லை.

நீங்கள் இந்த விதிமுறைகளை மீறி, நாங்கள் உடனடியாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றால், இதன் அர்த்தம் எங்களிடம் இருக்கக்கூடிய உரிமைகளை (எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பது போன்றவை) கைவிடுகிறோம் என்பது அல்ல.

குறிப்பிட்ட விதிமுறை அமல்படுத்தக்கூடியதாக இல்லையென்றாலும், மற்ற விதிமுறைகளுக்குப் பாதிப்பு ஏற்படாது.

Googleஐத் தொடர்புகொள்வது எப்படி என்பது பற்றிய தகவல்களுக்கு, எங்கள் தொடர்புப் பக்கத்தைப்பார்க்கவும்.