Google Forms மூலம் புள்ளிவிவரங்களை விரைவாகப் பெறுங்கள்
ஆன்லைன் படிவங்களையும் கருத்துக்கணிப்புகளையும் எளிதாக உருவாக்கலாம் பகிரலாம். மேலும், பதில்களை நிகழ்நேரத்தில் பகுப்பாய்வு செய்யலாம்.
ஆவணத்தை உருவாக்குவதைப் போல எளிதாக ஆன்லைன் படிவத்தை உருவாக்குங்கள்
பல கேள்வி வகைகளில் இருந்து தேர்ந்தெடுக்கலாம், கேள்விகளை இழுத்து விட்டு வரிசையை மாற்றலாம் மற்றும் பட்டியலை ஒட்டுவதைப் போல மதிப்புகளை எளிதாகப் பிரத்தியேகமாக்கலாம்.
பிரத்தியேகமாக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளையும் படிவங்களையும் அனுப்புங்கள்
வண்ணங்கள், படங்கள், எழுத்து வடிவங்கள் போன்றவற்றைப் பிரத்தியேகமாக்குவதன் மூலம் விரும்பிய வகையில் தோற்றத்தை மாற்றலாம் அல்லது நிறுவனத்தின் பிராண்டிங்கைப் பிரதிபலிக்கும் வகையில் தோற்றத்தை அமைக்கலாம். மேலும், தடங்கலற்ற அனுபவத்தைப் பெற, பதில்களுக்கு ஏற்றவாறு கேள்விகளைக் காட்டும் வகையில் பிரத்தியேக லாஜிக்கைச் சேர்க்கலாம்.
தானாக உருவாக்கப்படும் சுருக்கவிவரங்களின் மூலம் பதில்களைப் பகுப்பாய்வு செய்யுங்கள்
பதில் தரவுகள் அடங்கிய விளக்கப்படங்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படுவதைக் காணலாம். அல்லது, ஆழமாகப் பகுப்பாய்வு செய்யவோ தன்னியக்கத்தைச் செயல்படுத்தவோ மூலத் தரவை Google Sheetsஸில் திறக்கலாம்.
எங்கிருந்தபடியும் கருத்துக்கணிப்புகளை உருவாக்குங்கள் பதிலளியுங்கள்
கம்ப்யூட்டரோ மொபைலோ, எதைப் பயன்படுத்தினாலும் எங்கிருந்தாலும் எளிதாகப் படிவங்களை அணுகலாம் உருவாக்கலாம் திருத்தலாம். பிறரும் எங்கிருந்தாலும் மொபைல், டேப்லெட், கம்ப்யூட்டர் என எதைப் பயன்படுத்தினாலும் உங்கள் கருத்துக்கணிப்புகளுக்குப் பதிலளிக்கலாம்.
படிவங்களை உருவாக்குங்கள், முடிவுகளை இணைந்து பகுப்பாய்வு செய்யுங்கள்
Google Docs, Sheets, Slides ஆகியவற்றில் செய்வதைப் போலவே நிகழ்நேரத்தில் ஒன்றிணைந்து கேள்விகளை உருவாக்க உங்களுடன் இணைந்து பணியாற்றுபவர்களைச் சேர்க்கலாம். அதன்பிறகு, ஃபைலின் பல பதிப்புகளைப் பகிரும் அவசியமின்றி முடிவுகளை ஒன்றிணைந்து பகுப்பாய்வு செய்யலாம்.
துல்லியமான பதில்களுடனான தரவின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுங்கள்
பதில் சரிபார்ப்புக்கான விதிகளை அமைக்க உள்ளமைந்த நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, மின்னஞ்சல் முகவரிகள் சரியாக வடிவமைக்கப்பட்டிருப்பதையும் எண்கள் குறிப்பிட்ட வரம்பிற்குள் இருப்பதையும் உறுதிசெய்துகொள்ளலாம்.
மின்னஞ்சல், இணைப்பு, இணையதளம் ஆகியவற்றின் மூலம் படிவங்களைப் பகிருங்கள்
இணையதளத்தில் உட்பொதிப்பதன் மூலம் அல்லது இணைப்புகளைச் சமூக வலைதளங்களில் பகிர்வதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுடனோ பலதரப்பட்ட பார்வையாளர்களுடனோ படிவங்களை எளிதாகப் பகிரலாம்.
பாதுகாப்பு, இணக்கத்தன்மை மற்றும் தனியுரிமை
இயல்பாகவே பாதுகாப்பானது
உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக மேம்பட்ட மால்வேர் பாதுகாப்பு முறைகள் உட்பட தொழில்துறையில் சிறந்து விளங்கும் பாதுகாப்பு முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். Forms என்பது கிளவுட் சார்ந்ததாகும். எனவே ஃபைல்களைச் சாதனங்களில் சேமிக்கத் தேவையில்லை, இதனால் சாதனங்களுக்கு ஏற்படும் ஆபத்தும் குறைவாகவே இருக்கும்.
அனுப்பப்படும்போதும் சாதனத்திலேயே இருக்கும்போதும் தரவு என்கிரிப்ஷன் செய்யப்படுகிறது
Google Driveவில் பதிவேற்றப்படுகின்ற அல்லது Formsஸில் உருவாக்கப்படுகின்ற ஃபைல்கள் அனைத்தும் அனுப்பப்படும்போதும் சாதனத்திலேயே இருக்கும்போதும் என்க்ரிப்ஷன் செய்யப்படுகின்றன.
ஒழுங்குமுறைத் தேவைகளைப் பின்பற்றுவதற்கான இணக்கத்தன்மை
Forms உட்பட எங்கள் தயாரிப்புகளின் பாதுகாப்பு, தனியுரிமை, இணக்கக் கட்டுப்பாடுகள் ஆகியவை தனிப்பட்ட முறையில் அவ்வப்போது சரிபார்க்கப்படுகின்றன.
தனியுரிமைக்கென வடிவமைக்கப்பட்டது
Google Cloudன் மற்ற நிறுவனச் சேவைகள் கடைப்பிடிக்கும் அதே கடுமையான தனியுரிமை உறுதிப்பாடுகளையும் தரவுப் பாதுகாப்புகளையும் Forms கடைப்பிடிக்கிறது.
உங்கள் தரவிற்கான கட்டுப்பாடு உங்களிடமே இருக்கும்.
Formsஸில் உள்ள உங்கள் உள்ளடக்கத்தை ஒருபோதும் நாங்கள் விளம்பர நோக்கங்களுக்காகப் பயன்படுத்த மாட்டோம்.
உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் மூன்றாம் தரப்புகளுக்கு விற்க மாட்டோம்.
உங்களுக்கு ஏற்ற திட்டத்தைக் கண்டறியுங்கள்
Google Forms என்பது Google Workspaceஸின் ஓர் அங்கமாகும்
ஒவ்வொரு திட்டத்திலும் அடங்குபவை:
தனிப்பட்ட உபயோகத்திற்கு (கட்டணமில்லை) |
Business Standard$12 USD
பயனர் ஒருவருக்கு மாதத்திற்கு. 1 வருடம்
தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் அல்லது மாதாந்திர பில்லிங் என்றால் பயனர் ஒருவருக்கு மாதத்திற்கு $14.40 |
|
---|---|---|
Docs, Sheets, Slides, Forms
உள்ளடக்க உருவாக்கம் |
||
Drive
பாதுகாப்பான கிளவுட் சேமிப்பகம் |
ஒரு பயனருக்கு 15 ஜி.பை. |
ஒரு பயனருக்கு 2 டெ.பை. |
உங்கள் குழுவிற்கான பகிர்ந்த இயக்ககங்கள் |
||
Gmail
பாதுகாப்பான மின்னஞ்சல் |
||
பிசினஸிற்கான பிரத்தியேக மின்னஞ்சல் முகவரி |
||
Meet
வீடியோ & குரல் கான்ஃபிரன்ஸிங் |
100 பங்கேற்பாளர்கள் |
150 பங்கேற்பாளர்கள் |
மீட்டிங் ரெக்கார்டிங்குகள் Driveவில் சேமிக்கப்பட்டன |
||
நிர்வாகி
மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் |
||
குழு அடிப்படையிலான பாதுகாப்புக் கொள்கைக் கட்டுப்பாடுகள் |
||
வாடிக்கையாளர் உதவி சேவைகள் |
சுயமாக உதவி பெறுவதற்கான ஆன்லைன் மற்றும் சமூக மன்றங்கள் |
24/7 ஆன்லைன் உதவி மற்றும் சமூக மன்றங்கள் |
டெம்ப்ளேட்களுடன் பயன்படுத்தத் தொடங்குங்கள்
வேலையை விரைந்து தொடங்க பல்வேறு கருத்துக்கணிப்புகள், வினாப்பட்டியல்கள் மற்றும் தொழில்முறை ரீதியில் வடிவமைக்கப்பட்ட டெம்ப்ளேட்டுகளில் இருந்து ஒன்றைத் தேர்வுசெய்யலாம்.
மேலும் டெம்ப்ளேட்களுக்கு Forms டெம்ப்ளேட் கேலரிக்குச் செல்லுங்கள்.