பொழுதுபோக்கிற்காக இடம் என்பதிலிருந்து உலகப் புகழ்பெற்ற இடமாக மாற்றம் – ஃபிரெஞ்சு பாலினீசியாவின் அழகை வரைபடமாக்கியது அங்கு வசிப்பவர்களுக்கு எப்படி அளவில்லாப் பலன்களை வழங்கியது?

ஃபிரெஞ்சு பாலினீசியா – வெள்ளை மணற் கடற்கரைகள், மலையேற்றப் பாதைகள், யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடங்கள் ஆகியவை வாழ்நாளில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய பிரபலமான இடமாக இதை ஆக்குகின்றன. சிலர் இதைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கும் வேளையில் Street View மூலம் சொர்க்கம் போன்ற இடத்தை வீட்டிற்கே கொண்டு வரும் பிரத்தியேக வாய்ப்பை கிறிஸ்டோஃப் கோர்காட் கண்டறிந்து டஹிட்டியின் சுற்றுலா வளர்ச்சிக்கு உதவினார்.

1,800 கிமீ

படமெடுக்கப்பட்டுள்ளது

12,00,000

படங்கள்

தரம்:

8K

காட்சித் தெளிவுத்திறன் வீடியோக்கள்

8+

தீவுகள்

18

ஹோட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன

+450

பிசினஸ் விவரப் பக்கங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன

வணிகத்தை இனிய அனுபவமாக்குதல்

Street View மற்றும் ஃபிரெஞ்சு பாலினீசியாவின் அழகிய தீவுகளின் மீதான ஈடுபாட்டால் 2019ல் ’Tahiti 360’ நிறுவனத்தை கிறிஸ்டோஃப் அமைத்தார். மலையேற்றப் பாதைகள், கடற்கரைகள் ஆகியவை உட்பட்ட ஃபிரெஞ்சு பாலினீசியாவின் பரந்த வெளிப்புற இடங்களின் 360 டிகிரி படத்தொகுப்பைப் படமெடுத்து Street Viewவில் பதிவேற்றுவதில் இந்த நிறுவனம் நிபுணத்துவம் வாய்ந்தது. தீவு வாழ்க்கையின் அழகைப் படமெடுத்துக் காட்சிப்படுத்துவது கிறிஸ்டோஃபின் பிரதான நோக்கமாக இருந்தாலும் Street Viewவின் உட்புற விர்ச்சுவல் உலா மூலம் உள்ளூர் பிசினஸ்கள் அதிகமான மக்களைச் சென்றடைவதற்கும் அவர் உதவுகிறார்.

பிரெஞ்ச் பாலினீசியாவை வரைபடமாக்குதல்

கிட்டத்தட்ட அனைத்தும் டிஜிட்டல்மயமாக்கப்பட்ட காலகட்டத்தில் கிறிஸ்டோஃபும் 'Tahiti 360' நிறுவனமும் அந்தத் தீவைச் சென்றடையும் வரை ஃபிரெஞ்சு பாலினீசியாவின் செயற்கைக்கோள் காட்சிகள் மட்டுமே கிடைக்கப்பெற்றன என்பது நம்ப முடியாததாக உள்ளது. இதனை மேலும் சிக்கலாக்கும் விதமாக போரா போரா, டஹிட்டி போன்ற தீவுகளின் தெருக்களுக்குப் பெயர்களே இல்லாமல் இருந்தன. இதனால் உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சுற்றிப் பார்ப்பது சவாலாகவே இருந்தது. மிக முக்கியமாக, தீயணைப்பு வீரர்கள், முதலுதவி செய்பவர்கள், சட்ட அமலாக்கப் பிரிவினர் போன்ற அவசரகாலச் சேவைகளின் பணியை இது தேவைக்கதிகமாகக் கடினமாக்கியது.

 

உள்ளூர் சமூகங்களுக்குச் சிறந்த பலன்களைத் தரும் திறன் Street Viewவிற்கு உள்ளது என நம்புகிறேன். குறிப்பிட்ட பகுதியில் நம்மை வெளிப்படுத்திக்கொள்ள முடிவதும் வீட்டில் இருந்து கிளம்பும் முன்னரே சுற்றுப்புறங்களைப் பரிச்சயமாக்கிக் கொள்வதும் எப்போதும் என்னைக் கவரும் விஷயங்களாகும். குறிப்பாக, சுலபமாகச் சுற்றிப் பார்ப்பதென்பது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத ஃபிரெஞ்சு பாலினீசியாவில் இது பயனுள்ளதாகத் தெரிகிறது.

-

கிறிஸ்டோஃப் கோர்காட், Tahiti 360ன் நிறுவனர்

 

Google Street View போரா போராவை வரைபடமாக்குதல்

தீவு வாழ்க்கைக்கு Street View என்னென்ன பலன்களை வழங்க முடியும் என்பதை அறிந்த உள்ளூர் நிர்வாக அமைப்புகள் டஹிட்டி, மூரியா, போரா போரா, ரியாட்டா, மவ்பட்டி, வாஹினே, ஃபாக்கராவா, ரங்கீருவா ஆகியவற்றிலுள்ள சாலைகள் அனைத்தையும் வரைபடமாக்கவும் பெயரிடவும் ’Tahiti 360’ நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தன. ஃபிரெஞ்சு பாலினீசியாவில் 1800 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பரந்து விரிந்துள்ள பல்வேறு பகுதிகளையும் தீவுகளையும் சென்றடைய அனைத்து நிலப்பகுதியிலும் செல்லும் வாகனங்கள், கோல்ஃப் வண்டிகள், எலெக்ட்ரிக் பைக்குகள், ஜெட் ஸ்கீகள் மற்றும் குதிரைகளையும் கூட கிறிஸ்டோஃப் பயன்படுத்தினார். இப்போது Google Mapsஸில் டஹிட்டியின் டிராஃபிக் குறித்த உடனடி அறிவிப்புகள், வேகமான வழி குறித்த பரிந்துரைகள், உள்ளூர் வணிகங்களுக்கான வழி ஆகியவற்றைப் பெறுவது சாத்தியமாகியுள்ளதற்கு கிறிஸ்டோஃப் எடுத்த படங்களுக்கும் நிர்வாக அமைப்புகள் பகிர்ந்துகொண்ட உள்ளூர் நிலப்பரப்பு குறித்த தரவுக்கும்தான் நன்றி கூற வேண்டும். குறிப்பாக, அவசரகாலச் சேவைகள் தீவு முழுவதும் தங்கள் பணியை மேலும் சுலபமாகச் செய்ய இது உதவியாக உள்ளது. மேலும், Street Viewவில் Tahiti 360 நிறுவனத்தின் படங்கள் மூலம் நகர்ப்புறத் திட்டமிடலும் கட்டடங்கள் மற்றும் சாலைகளைப் பராமரிப்பதும் இன்னும் எளிதாகியுள்ளன.

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளத்துக்குச் செல்லுதல்

Tahiti 360 நிறுவனத்தின் மிகச்சிறந்த, தத்ரூபமான சுற்றுலா என்பது ரியாட்டா தீவில் உள்ள தப்புதாப்பூவாட்டியாதான். ஒவ்வொரு ஆண்டும் ஃபிரெஞ்சு பாலினீசியாவுக்கு 3,00,000 வருகையாளர்களைப் பெற்றுத் தருவதில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், 360 டிகிரியில் அதன் அழகைப் படமெடுத்ததன் மூலம், லட்சக்கணக்கானவர்கள் அதை விர்ச்சுவலாகக் கண்டுகளிக்கும் வாய்ப்பை கிறிஸ்டோஃப் உருவாக்கினார். Street Viewவில் வெளியிடப்பட்ட கிறிஸ்டோஃபின் படங்கள், நாம் அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் உலக அதிசயம் ஒன்றை நமது திரைகளுக்குக் கொண்டு வந்துள்ளது.

முழுத் தீவையும் வரைபடமாக்குவது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் கிறிஸ்டோஃப் அந்தச் சவாலை ஏற்கத் தயாராக இருந்தார். போரா போரா முழுவதையும் 360 டிகிரியில் வழங்க வேண்டும் என்பதற்காக கார், படகு, நடைப் பயணம் என அனைத்து வகையிலும் அந்தத் தீவைச் சுற்றிப் படமெடுத்தார். முழுத் தீவையும் மேப் செய்து Street Viewவில் அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய கிறிஸ்டோஃபுக்கு ஏழு நாட்கள் மட்டுமே எடுத்தன.

போரா போரா தவிர, டஹிட்டியின் தலைநகர் பப்பீட்டியின் தெருக்கள் அனைத்தையும், பிரே நகரத்தையும் கிறிஸ்டோஃப் படமெடுத்தார். Street Viewவில் இரண்டு நகரங்களின் படங்களும் இடம்பெற்றபோது அதற்கான பலன் கிடைத்தது.

Street Viewவில் ஜொலிக்க உள்ளூர் பிசினஸ்களுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சர்வதேச அளவில் தங்கள் இடங்களைக் காட்சிப்படுத்துவதற்குக் கிடைத்த வாய்ப்பினால் Intercontinental, Manava, Hilton போன்ற பெரிய ஹோட்டல் குழுமங்கள் மட்டுமல்லாமல் சிறிய B&B பிசினஸ்களும்கூட மகிழ்ச்சியடைந்தனர்.

வாழ்நாளில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடங்களில் மேலும் பலவற்றைச் சேர்த்தல்

மவ்பட்டி, டஹா, மார்க்யிஸ் தீவுகள், காம்பீர்ஸ் தீவுகள், ஆஸ்திரல் தீவுகள் ஆகியவை இடம்பெற இருக்கும் நிலையில் ஆண்டின் இறுதியில் ஃபிரெஞ்சு பாலினீசியாவின் தீவுகள் அனைத்தையும் படமெடுத்துவிட வேண்டுமென ’Tahiti 360’ நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஃபிரெஞ்சு பாலினீசியாவில் படமெடுக்க வேண்டிய பகுதிகள் இன்னும் நிறைய இருக்கும் நிலையில், கிறிஸ்டோஃப் தனது அடுத்த சாகசம் குறித்து ஏற்கெனவே யோசிக்கத் தொடங்கிவிட்டார். 400 கிமீ சைக்கிள் பாதைகள், ஆமியன்ஸின் மிதக்கும் தோட்டங்கள் Somme Tourismeமின் சுற்றுலா ரயில் ஆகியவற்றைப் படமெடுக்க அவரது தாயகத்தில் ஃபிரெஞ்சு உள்ளூர் நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளார். 2024 ஒலிம்பிக் போட்டிகளின்போது நீர்ச்சறுக்குப் போட்டிகள் நடைபெறவுள்ள டீஹப்பூவையும் கிறிஸ்டோஃப் படமெடுப்பார். இதற்கிடையில், உள்ளூர்வாசிகளின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் சொர்க்கம் போன்ற அந்த இடங்களைப் பலரும் கண்டுகளிக்க உதவுவதற்கும் Street Viewவில் நியூ கலிடோனியா, வாலிஸ், ஃபுட்யூனா தீவுகள் ஆகியவற்றைச் சேர்க்க முடியும் என்ற நம்புக்கையோடு இருக்கின்றார்.

Street View என்பது Google Mapsஸில் தரமான படத்தொகுப்பை வெளியிடுவதன் மூலம் சமூகங்களின் உயர்வுக்கும் பிசினஸ்களின் வளர்ச்சிக்கும் உலக அதிசயங்களை நாம் இருக்கும் இடத்திற்கே கொண்டு வரவும் பங்களிப்பாளர்கள் உதவக்கூடிய ஒரு கூட்டுப்பணியாற்றும் பிளாட்ஃபார்ம் ஆகும். இவை அனைத்திற்கும் மேலாக, யார் வேண்டுமானாலும் தங்கள் வெற்றிப் பயணத்தை Street Viewவில் வரைபடமாக்க முடியும். இதைச் செய்ய, பங்களிப்பதற்கான முதல் அடியை எடுத்து வைத்தாலே போதும்.

மேலும் கண்டறியுங்கள்

உங்கள் சொந்த Street View படங்களைப் பகிருங்கள்