Autori ஃபின்லாந்து முழுவதும் சாலைப் பராமரிப்பில் புரட்சியை உண்டாக்கியதற்கு ஒருநேரத்தில் ஒரு வீதிக் காட்சிப் படம் என்று எடுத்ததே காரணம்.

சாலைப் பரப்பின் தரம், பழைய அறிவிப்புப் பலகைகள், வெளிச்சமில்லாத் தெருக்கள் ஆகியவை உலகம் முழுவதும் உள்ள ஓட்டுநர்களும் நகராட்சிகளும் அன்றாடம் எதிர்கொள்ளும் சிரமங்களாக உள்ளன. ஆனால் உள்கட்டமைப்புப் பராமரிப்புக்கான தீர்வுகளை உருவாக்கும் ஃபின்னிஷ் மென்பொருள் நிறுவனமான Autori, தெரு அளவிலான தரவைச் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் Google Maps Street View உதவியுடன் எளிய வழியைக் கண்டறிந்தது.

40,000 கிமீ

படமெடுக்கப்பட்டுள்ளது

80 லட்சம்

படங்கள் வெளியிடப்பட்டுள்ளன

5 கோடி

பார்வைகள்

சாலைத் தரவு

20

படமெடுக்கும் திட்டப்பணிகள்

ஃபின்லாந்தில் சாலைப் பராமரிப்பு நிர்வாகத்தை நெறிப்படுத்துதல்

1988ல் நிறுவப்பட்ட Autori, ஃபின்லாந்தின் சாலை நிர்வாகத் துறைக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் மூன்றாம் தரப்பு ஆலோசகர்களுக்கும் கட்டுப்பாட்டு நிர்வாகம், செயல் திட்டம், பராமரிப்பு ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான மென்பொருள் சேவை (Software as a Service - SaaS) தீர்வுகளை வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள சாலைகளின் நிலையைக் கண்காணிப்பது என்பது நேரமும் செலவும் அதிகம் எடுக்கும் செயல். மற்ற நிறுவனங்கள் செலவைப் பற்றியே யோசித்தபோது Autori அதை நல்ல வாய்ப்புக்கான மூலதனமாகப் பார்த்தது. தங்களின் சொந்த Street View படங்கள் மற்றும் SaaS தீர்வைப் பயன்படுத்தி ஃபின்லாந்தில் சிறப்பான சாலைப் பராமரிப்பு உள்கட்டமைப்புத் தரவு மற்றும் முடிவெடுத்தலுக்கான கருவியை அவர்கள் உருவாக்கினர்.

வேகம் மற்றும் தரவுப் பகிர்தலின் தேவை

வழக்கமாக, குறிப்பிட்ட இடங்களில் என்ன மாதிரியான பணிகள் தேவைப்படுகின்றன என்பதை அறிய முன்னாட்களில் சாலை நிர்வாகிகள் ஒவ்வொரு சாலையையும் நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும். அதாவது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்வதோடு குறிப்புகள் எடுப்பதற்காக எண்ணற்ற இடங்களில் நிறுத்த வேண்டும். இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்பது மட்டுமல்லாமல் இதற்கு ஆகும் செலவு அதிகம், நிறைய பணியாளர்களும் வாகனங்களும் தேவை, மேலும் அதிக நேரமும் விரயமாகும். ஆகவே டிஜிட்டல் மயமாக்குதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வு ஆகியவற்றின் தேவை Autori நிறுவனத்தைப் புதிய பரிமாணத்தில் யோசிக்க வைத்தது. அப்படி யோசிக்கும்போது முதலில் தோன்றிய தெரு அளவிலான காட்சிப்படுத்துதல் தீர்வுதான் Street View.

 

சாலைப் பராமரிப்பைச் சரிவரச் செய்ய, கணக்கிலடங்காத் தரவைப் பல்வேறுபட்ட தரப்பினரிடம் அடிக்கடி பகிர்வது அவசியமாகிறது. பயனர்களிடையே தகவல்களைச் சுலபமாகப் பகிரத் தேவையான அனைத்து கருவிகளும் Street Viewவில் உள்ளன. ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கும் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம், உள்நுழைதலோ மென்பொருள் நிறுவல்களோ தேவையில்லை. மேலும் சாலைப் பராமரிப்புக்கு Street View இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் தரவைச் சமீபத்தியதாக வைத்திருப்பது பெரிய சவாலாக இருந்தது. எங்களின் சாலைப் பராமரிப்பு மென்பொருளுடன் Street Viewவை இணைப்பதன் மூலம் அந்தச் சவாலைச் சரிசெய்யும் வாய்ப்பைக் கண்டறிந்தோம்.

-

ஆரி இம்மனென், Autoriயின் டிஜிட்டல் மயமாக்கல் ஆலோசனைப் பிரிவின் தலைவர்

 

ஃபின்லாந்து சாலைகளை Google Street View Autori வரைபடமாக்குகிறது

சாலைப் பாதுகாப்புக்காக ஆன்லைனையும் ஆஃப்லைனையும் இணைத்தல்

2017ன் தொடக்கத்தில், படங்களை வெளியிட Autori நிறுவனம் தனது Google கணக்கைப் பயன்படுத்தி ஃபின்லாந்து பொதுச் சாலைகளின் 360 டிகிரி படத்தொகுப்பைப் படமெடுத்துப் பதிவேற்றத் தொடங்கியது. அன்றிலிருந்து 40,000 கிமீ சாலைகளைப் படமெடுத்து, 80 லட்சம் படங்களைப் பதிவேற்றி, சாலைப் பராமரிப்பு நிர்வாகத்தை ஆன்லைனுக்குக் கொண்டு வந்துள்ளது. அவர்களின் SaaS தீர்வுகளுடன் Street Viewவை இணைப்பதன் மூலம் சாலைகள் தொடர்பான சமீபத்திய தகவல்களை சாலை நிர்வாகிகள் தொலைநிலையிலிருந்து அணுகுவதைச் சுலபமாக்கியுள்ளனர்.

Street Viewவில் படத்தொகுப்பை வெளியிட்டமைக்கு Autoriக்கு நன்றி. சாலை அறிவிப்புப் பலகைகள் இல்லாமல் இருத்தல், அடையாளங்கள் அல்லது குழிகளைப் பற்றிய புகார்களை Autoriயின் டாஷ்போர்டு மூலம் பதிவேற்றி, ஆய்வுசெய்வதற்காகச் சம்பந்தப்பட்ட தரப்பினரைக் குறியிட முடியும். பிரத்தியேகமான தீர்வை வழங்குவதன் மூலம் ஒரு இடத்தில் தேவையான பராமரிப்புப் பணியைக் கண்காணித்துத் திட்டமிடவும் ஒப்பந்ததாரர்களை Autori அனுமதிக்கிறது. பராமரிப்புப் பணி முடிந்ததும் சாலைத் தரவைச் சமீபத்தியதாக வைத்திருக்க அந்தப் பகுதியின் புதிய 360 டிகிரி படங்கள் பணியாட்களால் எடுக்கப்பட்டுப் பதிவேற்றப்படுகின்றன. இடங்களை நேரில் சென்று ஆய்வுசெய்ய வேண்டிய தேவையை இது குறைத்தது - நேரம், பணம், கிரீன்ஹவுஸ் கேஸ் உமிழ்வு ஆகியவை சேமிக்கப்பட்டன.

சாலைப் பாதுகாப்பில் புதிய புரட்சி

தகவல் பகிர்தலை மேம்படுத்தவும் ஃபின்லாந்தில் உள்ள சாலை நிர்வாகிளுக்குச் சூழ்நிலைக்கு ஏற்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் Autoriக்கு Street View உதவுகிறது. இதன் மூலம் செலவு குறைக்கப்பட்டதுடன், செயல்திறனும் மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுதும் இது ஏற்படுத்தும் நல்ல மாற்றத்தை உணர்ந்த Autori, எதிர்காலத்தில் சாலைத் தரவைச் சேகரிக்கவும் பகிரவும் நிலையான மாதிரியை உருவாக்கத் தற்போது பணியாற்றி வருகிறது. 1,000 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதைகளையும் நடைபாதைகளையும் படமெடுத்ததன் விளைவாக உள்ளூர்வாசிகளின் கார்பன் அளவைக் குறைக்கவும் அவர்கள் உதவினர். மக்கள் தற்போது சமீபத்திய தரவைப் பெற்று சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியில் குறுகிய தூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும், ஃபின்லாந்தில் கூடுதலாக 15,000 கிமீ சாலைகளின் தரவைச் சேகரிக்க இந்தக் கோடையில் அவர்கள் மீண்டும் பணிகளைத் தொடங்குவார்கள். நாட்டின் சாலைகளில் பாதியைப் படமெடுப்பதையும் Street Viewவில் வெளியிடுவதையும் இது சாத்தியமாக்கும்.

கடினமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, வணிகங்கள் Street Viewவைப் பயன்படுத்துவதற்கான பல பிரத்தியேக வழிகளில் ஓர் எடுத்துக்காட்டு தான் Autoriயின் வெற்றி. அது வெறும் படங்களை வரைபடமாக்கும் கருவி கிடையாது, உங்கள் வணிகத்துக்கான எண்ணிலடங்காப் பலன்களையும் கொண்டிருக்கும். உங்களின் Street View வெற்றிக் கதையை எழுத நீங்கள் தயாரா?

மேலும் கண்டறியுங்கள்

உங்கள் சொந்த Street View படங்களைப் பகிருங்கள்