தவறான பயன்பாடு & மோசடிகள் குறித்துக் கவனமாக இருங்கள்

பல்வேறு வகையான உதவிகளையும் படம்/தரவு குறித்த அறிவிப்புகளையும் வழங்குவதற்கான Google பணியாளர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு வருபவர்கள் அல்லது அதுபோன்று தொடர்புகொள்வோர் குறித்து கவனமாக இருங்கள். Google சார்பாகப் பேசுவதற்குப் பார்ட்னர் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் இல்லை என்பதை வலியுறுத்துகிறோம். மேலும், தங்களைத் தனிப்பட்ட ஒப்பந்ததாரர்களாக மட்டுமே அவர்கள் காட்டிக்கொள்ள வேண்டும்.

Google சார்பாக நேரடியாகத் தொடர்புகொள்கிறோம் என்று கூறிக்கொண்டு யாராவது உங்களைத் தொடர்புகொண்டால் அவர்களைக் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். கீழே குறிப்பிட்டுள்ள எந்தக் காரணத்திற்காகத் தொடர்புகொண்டாலும் அவர்களைத் தவிர்க்கவும்:

  • Google சார்பாகச் சேவைகள்/பயிற்சி வழங்குதல், அளவீடுகளைக் கணக்கிடுதல், டிஜிட்டல் மீடியா, டிஜிட்டலில் பிரபலமடைபவை/புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள், பிசினஸ் தொடர்பாகப் புதிதாகப் பிரபலமடைபவை குறித்து அறிக்கையளித்தல்; மீடியா ஆலோசனை போன்றவை;
  • Google சேவைகளின் வழக்கமான செயல்பாட்டிற்குப் பொருந்தாத வாக்குறுதிகளை அளிப்பது. உதாரணத்திற்கு, Search, Google Street View, Google Maps ஆகியவற்றில் முன்னிலைப்படுத்துவதாக உறுதியளிப்பது;
  • Google பிளாட்ஃபார்ம்களில் இருந்து உள்ளடக்கத்தை அகற்றுமாறு அச்சுறுத்துவது, தொடர்ச்சியான டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் மூலம் ஒப்பந்ததாரருக்கு அழுத்தம் தருவது.

புகைப்படக் கலைஞர்களையோ ஏஜென்சிகளையோ Google பணியமர்த்தாது என்பதை நினைவில்கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக நம்பகமான திட்ட அம்சங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள நம்பகமான நிபுணர்கள் (Street Viewவின் நம்பகமான நிபுணர் பட்டியல் அங்கீகாரம்) சிலரை மட்டும் அனுமதிக்கும். இவர்கள் தனிப்பட்ட தரப்புகளாகச் செயல்படக்கூடியவர்கள். மேலும் இவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் Googleளின் குறுக்கீடோ பங்களிப்போ இருக்காது. Street Viewவின் நம்பகமான புகைப்படக் கலைஞர்கள் கொள்கையை இவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கவனமாக இருங்கள்! Street Viewவின் நம்பகமான நிபுணர்கள் இவற்றைச் செய்யக்கூடாது:

  • Google பணியாளர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வது அல்லது Google சார்பாகச் சேவைகளை வழங்குவது;
  • தங்களின் வாகனங்களில் Street View ஐகான், பேட்ஜ் மற்றும்/அல்லது லோகோ போன்ற Google பிராண்டைச் சேர்ப்பது;
  • Google, Google Maps, Street View பிராண்டுகள், நம்பகமானவர் பேட்ஜ், பிற Google வர்த்தக முத்திரை போன்றவற்றை ஒரு டொமைன் பெயரில் சேர்ப்பது;
  • Google Street View, Google Maps ஆகியவற்றில் முன்னிலைப்படுத்துவதாக உறுதியளிப்பது;
  • தங்கள் ஏஜென்சியில் பதிவு செய்யுமாறோ தங்களின் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்துமாறோ விளம்பரதாரருக்கு அழுத்தம் கொடுப்பது;
  • பேமெண்ட்டிற்குப் பதிலாக Google Ads கூப்பன்களை வழங்குவது;
  • உள்ளூர் வழிகாட்டியாக ரேட்டிங் வழங்குவது, கருத்து வழங்குவது போன்று பாரபட்சமாகக் கருதப்படும் தொழில்முறை அல்லாத வேறொரு செயல்பாட்டுடன் வழங்கப்படும் சேவையை இணைப்பது;
  • திட்ட நோக்கத்திற்காகப் பல்வேறு சேவைகளை வழங்க நம்பகமானவர் பேட்ஜைப் பயன்படுத்துவது. அதாவது: ஸ்டோருக்கு வருபவர்களைக் கணக்கிடுவதற்கான உபகரணத்தை அமைப்பது (பீக்கான்கள்), விளம்பரச் செயல்திறன் அளவீடுகளைக் கணக்கிட பிற கருவிகளைப் பயன்படுத்துவது, டிஜிட்டல் மீடியாவில் குழுப் பயிற்சி வழங்குவது, டிஜிட்டலில் பிரபலமடைபவை/புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் & பிசினஸ் தொடர்பாகப் புதிதாகப் பிரபலமடைபவை குறித்து அறிக்கையளிப்பது; மீடியா ஆலோசனை; முன்னோட்டத் திட்டங்கள் போன்றவை

Street Viewவின் நம்பகமான திட்ட நிபுணர்கள் இவற்றைச் செய்யலாம்:

  • தாங்கள் வழங்கும் சேவைகளுக்குக் கட்டணம் பெறுவது;
  • நிறுவன வாகனங்களில் தங்களின் சொந்த பிராண்டு, லோகோ ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவது;
  • Business Profileலில் நம்பகமானவர் பேட்ஜைப் பயன்படுத்துவது;
  • இணையதளங்கள், விளக்கக்காட்சிகள், கார்ப்பரேட் உடைகள், பிரிண்ட் செய்யப்பட்ட விற்பனைப் பொருட்கள் ஆகியவற்றில் நம்பகமானவர் பேட்ஜ் & பிராண்டு விவரங்களைப் பயன்படுத்துவது.

இந்தப் படிவத்தை நிரப்புவதன் மூலம், சான்றளிக்கப்பட்ட Street Viewவின் நம்பகமான புகைப்படக் கலைஞர் தொடர்பான சிக்கல்களைத் தெரிவிக்கலாம் புகாரளிக்கலாம்.

பயனர் பாதுகாப்புதான் எங்களுக்குப் பிரதானம். அதற்காக, Google பிராண்டுகள் மற்றும் அவற்றின் பிளாட்ஃபார்ம்களின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளோம். பின்வருவனவற்றைச் செய்வதற்கு எவருக்கும் அங்கீகாரம் இல்லை:

  • நிறுவன வாகனங்களில் Street View ஐகான், முத்திரை மற்றும்/அல்லது லோகோ போன்ற Google பிராண்டைப் பயன்படுத்துவது;
  • Google பிராண்டுகள், Google Maps, Street View, நம்பகமான நிபுணர் பட்டியல் அங்கீகாரம், பிற Google வர்த்தக முத்திரைகள் போன்றவற்றை ஒரு டொமைன் பெயரில் பயன்படுத்துவது;
  • Google பிராண்டுகள், Google Maps, Street View, பிற Google வர்த்தக முத்திரைகள் போன்றவற்றை உடைகளில் பயன்படுத்துவது (சீருடைகள் போன்றவற்றில்);
  • Google, Google Maps, Street View பிராண்டுகள், பிற Google வர்த்தக முத்திரைகள் போன்றவற்றைத் தங்கள் Google Business Profileலில் பயன்படுத்துவது;
  • குறிப்பிட்ட தயாரிப்பையோ சேவையையோ Google ஆதரிப்பதாகப் பரிந்துரைக்கும் வகையில் Google வர்த்தக முத்திரைகள், நம்பகமான பேட்ஜ் போன்றவற்றைப் பயன்படுத்துவது.